லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 8 - வாட்ஸ்அப் ரகசியங்கள்!

வாட்ஸ்அப் ரகசியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வாட்ஸ்அப் ரகசியங்கள்

சிலர் மொபைலை யார் வேண்டுமென்றாலும் எடுத்துப் பார்க்கலாம் என்பது போலத்தான் பயன்படுத்துகிறார்கள்.

சென்ற அத்தியாயத்தில் வாட்ஸ்அப்பை எப்படி ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம் என்று பார்த்தோம். வாசகி ஒருவர் ‘அதுல சொல்லப்பட்டிருந்த விஷயமெல்லாம் மத்தவங்கள நாம எப்படித் தொல்லை பண்ணாம இருக்கிறது என்பது பற்றி மட்டுமே இருந்துச்சு. வாட்ஸ்அப்ல நாம தெரிஞ்சிக்க வேண்டிய பிரைவஸி மேட்டர்லாம் இல்லையே’ எனக் கேட்டிருந்தார். அவருக்காக இந்த அத்தியாயம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 8 - வாட்ஸ்அப் ரகசியங்கள்!

வாட்ஸ்அப்பில் மூன்று முக்கியமான விஷயங்கள்: Profile photo, Last seen, Status. இவற்றை யார் பார்க்கலாம், யார் பார்க்கக் கூடாது என்பதை நாம் முடிவு செய்யலாம்.

Settings > Account > Privacy - இந்தப் பக்கத்தில் மேலே சொன்ன மூன்றையும் நமக்கேற்றபடி செட் செய்யலாம்

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 8 - வாட்ஸ்அப் ரகசியங்கள்!

சிலர் மொபைலை யார் வேண்டுமென்றாலும் எடுத்துப் பார்க்கலாம் என்பது போலத்தான் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, மெசேஜ் இன்பாக்ஸ். மற்ற எல்லா ஆப்களுக்கும் பாஸ்கோடு போடுபவர்கள்கூட எஸ்.எம்.எஸ் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், எஸ்.எம்.எஸ் ஆக வரும் ஓ.டி.பி-தான் இன்று எல்லாமே. ஒருவர் நினைத்தால், உங்கள் மொபைல் எண்ணை வைத்து வேறு மொபைலில் வாட்ஸ்அப் ரெஜிஸ்டர் பண்ணலாம். ஒடிபி-யை மட்டும் எடுத்தால் போதும். அதைத் தடுக்க, Two-step verfication வேண்டும்.

Settings > Account > Two-step verfication - இந்தப் பக்கத்தில் ஒரு பின் நம்பர் செட் செய்து கொண்டால், இனி எப்போதும் புதிய மொபைலில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்ய பின் நம்பர் தெரிந்தே ஆக வேண்டும். ஒரு விதத்தில் நம் பாதுகாப்பை இது அதிகரிக்கும்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 8 - வாட்ஸ்அப் ரகசியங்கள்!

சில வீடுகளில் வைஃபை இல்லாமலிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மொபைல் டேட்டாவையே பயன்படுத்தும்போது டெய்லி லிமிட் தாண்டிப் போக வாய்ப்பிருக்கிறது. நமக்கு வரும் எல்லா வீடியோக்களையும் டவுன்லோடு செய்யாமல், வேண்டியதை மட்டும் டவுன்லோடு செய்தால் டேட்டா மிச்சமாகும். அதே நேரம் வைஃபை இருந்தால் அந்த வீடியோ டவுன்லோடு ஆவதில் சிக்கல் இல்லை. அதற்கும் வழியிருக்கிறது வாட்ஸ் அப்பில்.

Settings > Storage and data > Media auto-download இந்தப் பக்கத்தில் அதை செட் செய்துகொள்ளலாம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 8 - வாட்ஸ்அப் ரகசியங்கள்!

சில மொபைல்கள் திடீரென வேகம் குறையும். மெமரி தீர்ந்துபோவதால் இருக்கலாம். செக் செய்து பார்த்தால், வாட்ஸ்அப் மட்டுமே பல ஜி.பி எடுத்திருக்கும். மொத்தமாக அழிக்கவும் முடியாது. தேவையான பல விஷயங்கள் இருக்கலாம். அந்த நேரத்தில் கான்டாக்ட் பெயரைத் தேர்வு செய்து அவர் அல்லது அந்த குரூப்பில் வந்த மீடியாவை மட்டும் டெலீட் செய்யலாம். அதற்கு, Settings > Storage and data > Manage storage இந்தப் பக்கத்தில் ஒவ்வொரு கான்டாக்டும் (அல்லது குரூப்) எந்த அளவு மெமரி எடுத்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம். தேவை இல்லாததை டெலீட் செய்யலாம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 8 - வாட்ஸ்அப் ரகசியங்கள்!

சில குரூப்களில் மெசேஜ் வந்துகொண்டேயிருக்கும். இரவு நேரத்தில் முக்கியமான சில காரணங்களுக்காக டேட்டாவை ஆஃப் செய்யவோ, மொபைலை சைலைன்டில் போடவோ முடியாத சூழல் இருக்கலாம். அதற்காகத்தான் ஒவ்வொரு கான்டாக்ட் மற்றும் குரூப்பை தனித்தனியே மியூட்டில் போடும் வசதி இருக்கிறது. சிலரை ஒரேயடியாக மியூட்டில் போட முடியாதென்றால் 8 மணி நேரமோ, ஒரு வாரமோ மட்டும்கூட மியூட்டில் போடலாம். இதற்கு, எந்த கான்டாக்ட் அல்லது குரூப்பை மியூட்டில் போட வேண்டுமோ அதைத் திறந்துகொள்ளுங்கள். வலது மேல் மூலையில் 3 புள்ளிகள் இருக்குமே... அதை க்ளிக் செய்யவும். அங்கே Mute notifications இருக்கும். அதை க்ளிக் செய்து உங்கள் விருப்பப்படி மியூட் போட்டுக்கொள்ளலாம்.

வாட்ஸ்அப்பில் இரண்டு விதமான செட்டிங்ஸ் இருக்கின்றன. ஒன்று கான்டாக்ட் அல்லது குரூப்புக்கான பிரத்யேக செட்டிங்ஸ். இன்னொன்று, பொதுவான செட்டிங்ஸ். எல்லாமே எளிமையானவை. இருக்கும் மற்ற வசதிகளையும் பார்த்து, தேவையானவற்றை ஆக்டிவேட் செய்வது நம் வாட்ஸ்அப் அனுபவத்தை அழகாக்கும்.