என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 9 - பழையன புகுவோம்!

கேட்ஜெட் கிளாஸ் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட் கிளாஸ் ரூம்

கேமரா பிரச்னை ஆனதால் மொபைலை மாற்றியிருப்போம். அந்த மொபைல்களை டிஜிட்டல் போட்டோ ஃபிரேம்களாகப் பயன் படுத்தலாம்.

உலக அளவில் ஒரு டேட்டா என்ன சொல்கிறது தெரியுமா? ஒரு ஸ்மார்ட் போனை நாம் இரண்டரை முதல் ஐந்து வருடங்கள் வரைதான் பயன்படுத்துகிறோமாம்.

உண்மையில், அதன் ஆயுள் அதையும் தாண்டியும் இருக்குமென்றாலும் அப்டேட் ஆக இருக்க வேண்டுமென்ற எண்ணத்திலும், இன்னும் சில காரணங்களுக்காகவும் புது மொபைல் வாங்குகிறோம். பழைய மொபைல்களை சிலர் எக்ஸ்சேஞ்சில் போடுவதுண்டு. ஆனால், அங்கே விலை குறைவாகக் கிடைக்கும்பட்சத்தில் அதற்கு பதில் அந்தப் பழைய மொபைல் பேக்கப் மொபைலாக வீட்டிலேயே இருக்கட்டும் என வைத்துக்கொள்பவர்களும் உண்டு. ஆனால், மொபைலைப் பயன்படுத்தாமல் விட்டால் அதன் திறன் குறைந்துவிடும்; பேட்டரி வீணாகிவிடும் எனப் பல பிரச்னைகள் இருக்கின்றன.

உங்கள் வீட்டில் இப்படி பேக்கப் மொபைல் இருந்தால் அதைப் பயனுள்ளதாக மாற்ற சில வழிகள் இருக்கின்றன.

கேமரா பிரச்னை ஆனதால் மொபைலை மாற்றியிருப்போம். அந்த மொபைல்களை டிஜிட்டல் போட்டோ ஃபிரேம்களாகப் பயன் படுத்தலாம். நிறைய புகைப்படங்களை அப்லோடு செய்து நிமிடத்துக்கொருமுறை படங்கள் மாறும்படி செய்தால் வீட்டுக்கு வரு பவர்கள் பார்த்து ‘வாவ்’ சொல்வது நிச்சயம்.

பயணம் செய்யும்போது இ-புக் படிப்பவர் களுக்கு இன்னொரு மொபைல் கைவசம் இருப்பது நல்லது. சார்ஜ் பிரச்னை வராது. படிக்கும்போது கால் வராது. ஸ்பீக்கர் பிரச்னை, கேமரா பிரச்னை இருக்கும் மொபைல்களை இதற்குப் பயன் படுத்தலாம். சில மொபைல்களில் கால் செய்வதில் சிக்கல் இருக்கும். ஆனால், கேமரா நன்றாக வேலை செய்யும். அது போன்ற மொபைல்களை கேமராவாகப் பயன்படுத்தலாம். புகைப்படக்கலையில் ஆர்வமிருக்கும் குழந்தைகளிடம் இதுபோன்ற மொபைல்களைத் தைரியமாகக் கொடுக்கலாம்.

மேப்ஸ் இல்லாமல் இப்போது யாரும் வெளியே செல்வதில்லை. ஆனால், அதிக சார்ஜ் எடுத்துக் கொள்ளும் விஷயமது. நீண்ட பயணம் மேற்கொள்பவர்கள் வீட்டிலிருக்கும் பேக்கப் மொபைலில், எந்த ஊருக்குச் செல்கிறார்களோ அந்த ஏரியாவின் மேப் மொத்தத்தையும் டௌன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம். அதன்பின், இணைய வசதி இல்லாமலே போகும் இடங்களில் கூகுள் மேப்ஸ் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! - 9 - பழையன புகுவோம்!

எல்லா கார்களிலும் டச் ஸ்க்ரீன் வசதிகொண்ட திரை இருப்பதில்லை. அவர்களும் மேலே சொன்னது போல மேப்களுக்கென பழைய மொபைலைப் பயன் படுத்தலாம். அதே மொபைலில் வேண்டிய பாடல்களைச் சேமித்துக் கொண்டால் எம்.பி.3 பிளேயராகவும் மொபைலை மாற்றிவிடலாம்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களைக் கண்காணிக்க பல ஆப்கள் இருக்கின்றன. உதாரணமாக, தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை திடீரென எழுந்து விட்டால் கிச்சனில் இருப்பவருக்குத் தெரியாது. அவர்கள் பழைய மொபைல்களை சிசிடிவி கேமரா போல பயன்படுத்தலாம். இதற்கு இலவசமாகப் பல செயலிகள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. பழைய மொபைலையே கேமராவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாடும் பழக்கமுள்ளவர்கள் அவர்கள் பாடுவதைப் பழைய மொபைல்களில் ரெக்கார்டு செய்து கொள்ளலாம். கைவசம் இருக்கும் மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்னை வருமென்றால் பழைய மொபைலின் ஸ்டோரேஜ் நமக்கு உதவும்.எல்லா மொபைலிலும் சாத்திய மில்லையென்றாலும், சில மொபைல்களை டிவி மற்றும் ஏசி போன்ற வற்றுக்கு ரிமோட் ஆகப் பயன்படுத்தலாம். ஒரு ஸ்மார்ட்போனுக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட கேட்ஜெட்கள் இருக்கின்றன. மொபைல் ரிப்பேர் ஆனா லும் அதன் எல்லா வசதி களும் வீணாவதில்லை. உங்கள் தேவைக்கேற்ப, உங்கள் கிரியேட்டிவிட்டிபடி பல விதங்களில் பழைய மொபைல்களைப் பயன் படுத்தாமல் சும்மாவே போட்டு வைத்திருப்பதைவிட இப்படிப் பயன்படுத்துவது தான் ஸ்மார்ட்.