Published:Updated:

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! -15

கேட்ஜெட் கிளாஸ் ரூம்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்!

இனியும் சேர்க்காதீர்கள் இ-குப்பைகளை...

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! -15

இனியும் சேர்க்காதீர்கள் இ-குப்பைகளை...

Published:Updated:
கேட்ஜெட் கிளாஸ் ரூம்!
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட் கிளாஸ் ரூம்!

கடந்த 10 வருடங்களாக வீட்டைச் சுத்தப்படுத்தும்போது அதிகம் நம் கண்ணில்படுபவை மொபைல் சார்ஜர்களும் ஹெட்போன்களும் என்னவென்றே தெரியாத வயர்களும் தான். `நோக்கியா'வின் செங்கல் மொபைல்கள் இருந்தபோது ஒரே சார்ஜர்தான். அதுவும் மொபைல்களின் ஆயுள் அப்போது பல ஆண்டுகளாக இருந்தன. இப்போது ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சியால் சார்ஜர்கள் மாறுகின்றன. அதனாலும் அடிக்கடி மொபைல் மாற்றுவதாலும் வீட்டில் சார்ஜர்கள் நிறைய சேர்கின்றன. மற்ற பொருள்களைப்போல கேட்ஜெட்டின் இணை உபகரணங் களைத் தூக்கிப் போடவும் மனம் வருவதில்லை. விளைவு, `இ-வேஸ்ட்' எனப்படும் மின்னணு குப்பைகள் வீட்டில் சேர்ந்துகொண்டே போகின்றன. உலகின் இன்றைய முக்கிய பிரச்னை கொரோனாதான். அதைத் தவிர்த்த 10 பிரச்னைகளைக் கணக்கில் எடுத்தால் இ-வேஸ்ட்டுக்கும் அதில் இடமுண்டு. இந்த இ-வேஸ்ட்டை எப்படிக் குறைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! -15

கணக்கெடுங்கள்...

பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான். மாடியில் ஓர் அறையில் ஒளிந்திருக்கும் ஒரு குட்டி ப்ளூடூத் ஸ்பீக்கர் அல்லது பென் டிரைவ். அதை மறந்துவிட்டோ, தேடி எடுக்க முடியாமலோ புதிதாய் ஒரு ஸ்பீக்கர் அல்லது பென் டிரைவை ஆன்லைன் சேலில் பார்த்து ஆர்டர் போட்டு விடுவார்கள். முடிந்தவரை வீட்டிலிருக்கும் அனைத்து கேட்ஜெட்களையும் தெரிந்துவைத்திருப்பது நல்லது. இதற்கு எளிதான வழி, சின்னச் சின்ன கேட்ஜெட், இணை உபகரணங்களைப் போட்டுவைக்க ஒரு பாக்ஸ் அல்லது பையை ஒதுக்குங்கள். அதில் தேடினாலே பாதிக்கும் மேற்பட்ட புது ஷாப்பிங் குறையும்.

விற்று விடுங்கள் அல்லது கொடுத்து விடுங்கள்...

நல்ல நிலையிலிருக்கும் கேட்ஜெட்களைப் பயன் படுத்தாமல் சும்மாவே வைத்திருந்தால் அதுவும் நமக்கு இ-வேஸ்ட்தான். ஓராண்டுக்கும் மேலாகப் பயன் படுத்தவில்லையென்றால் அதை விற்றுவிடுங்கள். அல்லது தேவைப்படுபவருக்குத் தந்துவிடுங்கள். உதாரணமாக, உங்கள் மகன் அவர் தேவைக்காக டிவி வீடியோ கேம் வாங்கியிருப்பார். அடுத்த சில ஆண்டுகளிலே அவருக்கு பிளே ஸ்டேஷன் போன்ற உயர் ரக வீடியோகேமை வெளிநாட்டிலிருந்து யாரேனும் வாங்கி வந்து தந்திருப்பார்கள். இப்போது பிளே ஸ்டேஷன் விளையாடியவருக்கு அதைவிட கம்மியான வீடியோகேமில் ஆர்வமே வராது. அதை விளையாட வீட்டிலும் யாரும் இருக்க மாட்டார்கள். அப்படியென்றால் அதை யாருக்கேனும் தந்துவிடுங்கள் அல்லது விற்றுவிடுங்கள். ஷெஃல்புக்குள் வைத்திருப்பதால் சில ஆண்டு களில் அது வீணாகி இ-வேஸ்ட் ஆகத்தான் மாறும்.

கேட்ஜெட் கிளாஸ் ரூம்! -15

3R - Reduce, Reuse, Recycle

இந்த 3R இ-வேஸ்ட் விஷயத்தில் முக்கிய மானவை. முதல் R - Reduce. அதாவது, முடிந்தவரை கேட்ஜெட் மற்றும் அதன் இணை உபகரணங்கள் வாங்குவதைக் குறைப்பது. கேட்ஜெட்கள் என்பவை நம் வேலையை எளிதாக்க கண்டுபிடிக்கப்படுபவைதான். ஆனால், கணக்கின்றி அவற்றை வாங்கிக் குவிப்பது அதன் நோக்கத்துக்கே எதிரானது. எனவே, அதன் பயன்பாட்டைக் குறைப்பது என்பது ஸ்மார்ட் ஆக அதைப் பயன்படுத்துவது என்பதை உணர்வோம்.

அடுத்த R - Reuse. ஏற்கெனவே இந்தத் தொடரில் மொபைலை எப்படியெல்லாம் `ரீயூஸ்' செய்யலாம் எனப் பார்த்திருக்கிறோம். கேமரா உடைந்த மொபைலை மியூசிக் ப்ளேயராகப் பயன் படுத்தலாம், ஸ்பீக்கர் உடைந்த மொபைலை சிசிடிவி கேமராவாகப் பயன்படுத்தலாம் என்றோம். அதுதான் ரீயூஸ்.

கடைசி R - Recycle. இதை நாமே செய்ய வேண்டுமென்பதில்லை. பயன்படுத்தாத கேட்ஜெட்களையும் அக்ஸசரீஸையும் ரீசைக்கிள் செய்யுமிடத்துக்குத் தந்துவிட்டால் போதும். பல மொபைல் சர்வீஸ் சென்டர்களில் இதற்கென தனி பாக்ஸ் வைத்திருப்பார்கள். அதில் சேர்த்துவிட்டால் அவற்றை ரீசைக்கிள் செய்து பயன்படுத்துவார்கள்.

ஒரு ஜாலி எக்ஸர்சைஸாக ஒன்றைச் சொல்கிறேன். செய்து பாருங்கள். Mini usb கேபிள் தெரியுமில்லையா? பெரும்பாலான ஆண்ட்ராய்டு மொபைலுக்கு அதுதான் சார்ஜர். C-Type வந்திருக்கிறது. அது வேறு. உங்கள் வீட்டில் Mini usb கேபிள் எத்தனை இருக்குமென உத்தேசமாக ஒரு கணக்கு மனதில் சொல்லிக்கொள்ளுங்கள். இப்போது வீடு முழுக்க தேடிப் பாருங்கள். நீங்கள் மனதில் நினைத்த எண்ணைவிட இரண்டு மடங்காவது இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism