பிரீமியம் ஸ்டோரி

ஆப்பிள் ஐபோன் 12

வசதிகள்:

6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே

ஆப்பிள் A14 பயானிக் ப்ராசஸர்

12 MP + 12 MP ரியர் கேமரா

12 MP செல்ஃபி கேமரா

4GB RAM

2815 mAh பேட்டரி

ஐஓஎஸ் 14.1

ப்ளஸ்

தரமான பெர்ஃபாமென்ஸ்

அட்டகாச கேமரா

முழுமையான ஆப்பிள் அனுபவம்

மைனஸ்

பேட்டரி

சார்ஜர் போனுடன் கொடுக்கப்படுவதில்லை

அதிக விலை

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

எப்போதும்போல அனைத்து அம்சங்களிலும் கவரும் ஐபோன், விலையில் மட்டும் எப்போதும் போல சறுக்குகிறது. குறிப்பாக ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள் இருக்கும் இந்திய சந்தையில் இந்த விலையில் ஐபோன் 12 வாங்க பெரும்பாலானவர்கள் யோசிக்கவே செய்வார்கள். இம்முறை ஐபோன் 12-ல் ‘மினி’ வெர்ஷன் ஒன்றும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சற்றே குறைவான விலையில் அது கிடைக்கிறது.

விலை:

4GB RAM+ 64GB -79,900 ரூபாய்

4GB RAM+ 128GB- 84,900 ரூபாய்

4GB RAM+ 256 GB- 94,900 ரூபாய்

ஒன்ப்ளஸ் 8T

வசதிகள்:

6.55-இன்ச் Fluid AMOLED டிஸ்ப்ளே (120Hz)

Snapdragon 865 ப்ராசஸர்

48 MP + 16 MP (ultrawide) + 5 MP(macro)+

2 MP(depth) ரியர் கேமரா

16 MP செல்ஃபி கேமரா

8GB/12GB RAM

4500 mAh பேட்டரி

65W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 11, ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.0.4

ப்ளஸ்

வேற லெவல் டிஸ்ப்ளே

ஃபாஸ்ட் சார்ஜிங்

மைனஸ்

ப்ரீமியம் லுக் மிஸ்ஸிங்

வீடியோ பெர்ஃபாமன்ஸ்

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

120 Hz டிஸ்ப்ளே, 65w ஃபாஸ்ட் சார்ஜிங் - ஒன்ப்ளஸ் 8T-ல் பார்த்ததும் வசீகரிக்கும் இரு அம்சங்கள் இவைதான். 39 நிமிடங்களில் முழு பேட்டரியும் சார்ஜ் செய்ய முடிகிறது. ஆனால் 120 Hz டிஸ்ப்ளே என்பதால், சீக்கிரம் சார்ஜ் இறங்கியும் விடுகிறது. மற்றபடி எப்போதும் ஒன்ப்ளஸில் இருக்கும் விஷயங்கள்தான். ஏற்கெனவே இருக்கும் ஒன்ப்ளஸ் போன்கள் விலை குறைந்துள்ள நிலையில், இந்த போனை முழு மனதுடன் பரிந்துரைக்கும் அளவுக்கு நம்மை 8T ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

விலை:

8GB+128GB- 42,999 ரூபாய்

12GB+256GB-45,999 ரூபாய்

ஆப்பிள் மேக்புக் ஏர் (2020 M1 சிப்)

வசதிகள்:

13.3-இன்ச் ரெட்டினா LED டிஸ்ப்ளே

ஆப்பிள் M1 புராசஸர்

18 மணிநேர பேட்டரி லைஃப்

8GB RAM

256GB/512GB ஸ்டோரேஜ்

MacOS Big Sur

ப்ளஸ்

இதுவரை பார்த்திராத பெர்ஃபாமன்ஸ்

துல்லியமான டிஸ்ப்ளே

மைனஸ்

ஆரம்பக்கட்டம் என்பதால்

M1-க்கென வடிவமைக்கப்பட்ட ஆப்ஸ் அதிக அளவில் இல்லை.

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

மொத்தமாக அதன் Mac கணினிகளை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்துவிட்டது ஆப்பிள். இதுவரை பயன்படுத்திவந்த இன்டெல் சிப்களைப் புறந்தள்ளி அதன் சொந்த சிப்பை, இனி அதன் Mac கணினிகளில் பயன்படுத்தப் போகிறது ஆப்பிள். ARM கட்டமைப்பைக் கொண்ட இந்த சிப் வேற லெவல் பெர்ஃபாமென்ஸை இந்த புதிய மேக்புக் ஏர் மாடலுக்குக் கொடுக்கிறது. மற்றபடி ஏற்கெனவே இருந்த மேக்புக் ஏரில் இருக்கும் அம்சங்கள்தான்.

விலை:

92,990 ரூபாய் முதல்

சாம்சங் S20 FE

வசதிகள்:

6.5-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே (120Hz)

சாம்சங் Exynos 9 Octa 990 ப்ராசஸர்

12 MP + 8 MP(Telephoto) + 12 MP(ultrawide) ரியர் கேமரா

32 MP செல்ஃபி கேமரா

4500 mAh பேட்டரி

25W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10, ஒன் UI 2.5

ப்ளஸ்

ப்ரீமியம் பில்டு & ஃபீல்

தாறுமாறு டிஸ்ப்ளே

தரமான கேமரா

மைனஸ்

சுமாரான பேட்டரி லைஃப்

மெதுவான சார்ஜிங்

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

ப்ரீமியம் S20 ப்ளஸ், S20 அல்ட்ரா போன்ற போன்களின் பட்ஜெட் வெர்ஷன் என இதைச் சொல்லலாம். ஒன்ப்ளஸ் போன்கள் கல்லா கட்டும் 40,000-50,000 ரூபாய் விலையில் ஒரு தரமான போனாக வெளிவந்திருக்கிறது S20 FE. கேமரா, டிஸ்ப்ளே என அனைத்திலும் கலக்கும் போன் பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் கொஞ்சம் சறுக்குகிறது. ஆனால், சாதாரண பயன்பாட்டில் அது பெரிய குறையாகத் தெரியாது. மற்றபடி குறையென்றால், மிக வேகமான சார்ஜிங் இல்லாததைச் சொல்லலாம்.

விலை:

8GB RAM+ 128GB- 49,999 ரூபாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு