பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ் - 1:  டிஜிட்டல் உலகம் - 15

விலை:

4GB+64GB- 10,999 ரூபாய்

4GB+128GB-12,499 ரூபாய்

மைக்ரோமேக்ஸ்

In நோட் 1

வசதிகள்:

6.67-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே

MediaTek Helio G85 ப்ராசஸர்

48 MP + 5 MP (ultrawide) + 2 MP(macro)+ 2 MP(depth) ரியர் கேமரா

16 MP செல்ஃபி கேமரா

5000 mAh பேட்டரி

18W ஃபாஸ்ட் சார்ஜிங்

ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்

ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம்

நல்ல பேட்டரி

பெர்ஃபாமன்ஸ்

மைனஸ்

மிகவும் சுமாரான கேமரா

டிசைன்

ஒன்லைன் ரிவ்யூ:

இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் சில ஆண்டுகளாகவே சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சமீபத்தில் சீனப் பொருட்களைத் தவிர்க்கும் மனநிலையில் பல இந்தியர்களும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கம்பேக் கொடுக்க நினைத்திருக்கிறது இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ். ஆனால், ஏற்கெனவே இருக்கும் போட்டியுடன் ஒப்பிட்டால், முழுமையான ஒரு போனாக இல்லை இந்த மைக்ரோமேக்ஸ் In நோட் 1.

கேட்ஜெட்ஸ் - 1:  டிஜிட்டல் உலகம் - 15

விலை

8GB+128GB - 39,999 ரூபாய்

ஷாவ்மி Mi 10T

ப்ரோ 5G

வசதிகள்

6.67-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே

(144 Hz, HDR 10+)

Snapdragon 865 ப்ராசஸர்

108 MP + 13 MP (ultrawide)

+ 5 MP(macro) ரியர் கேமரா

20 MP செல்ஃபி கேமரா

5000 mAh பேட்டரி

33W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10, MIUI 12

ப்ளஸ்

தரமான டிஸ்ப்ளே

தாறுமாறு பெர்ஃபாமென்ஸ்

நல்ல கேமராக்கள்

மைனஸ்

வாட்டர்ப்ரூஃப் ரேட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் இல்லை

தேவையற்ற விளம்பரங்கள் அதிகம் வரும் UI

ஒன்லைன் ரிவ்யூ:

பட்ஜெட், மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஷாவ்மி, Mi 10 மூலம் ப்ரீமியம் செக்மென்ட்டில் களமிறங்கியது. ஆனால், அதிக விலையால் மக்களை ஈர்க்க முடியாமல் திணறியது. அதில் செய்த தவற்றைச் சரிசெய்யும் விதம் இந்த Mi 10T ப்ரோ 5G போனை வெளியிட்டிருக்கிறது. 40,000 ரூபாய் விலையில் அதற்கேற்ற வசதிகளுடன் வருகிறது Mi 10T ப்ரோ 5G.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேட்ஜெட்ஸ் - 1:  டிஜிட்டல் உலகம் - 15

விலை

6GB+128GB - 20,999 ரூபாய்

மோட்டோ G 5G

வசதிகள்:

6.7-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே (HDR10)

Snapdragon 750G 5G ப்ராசஸர்

48 MP + 8 MP (ultrawide) + 2 MP(macro) ரியர் கேமரா

16 MP செல்ஃபி கேமரா

5000 mAh பேட்டரி

20W ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்

மென்பொருள் அனுபவம்

தரமான பேட்டரி

பில்டு குவாலிட்டி

மைனஸ்

சற்றே கனமாக இருக்கிறது

லோ-லைட் கேமரா பெர்ஃபாமன்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ:

இந்தியாவில் மிக விரைவில் 5G வரவிருக்கிறது. அதனால் இப்போதே வாங்கும் போன்களில் 5G சப்போர்ட் இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்து விட்டனர் வாடிக்கையாளர்கள். ஆனால், பெரும்பாலும் விலை உயர்ந்த போன்களில்தான் தற்சமயம் 5G கொடுக்கப்பட்டு வருகிறது. அதை மாற்றும் வகையில் 21,000 ரூபாய் போனில் 5G-யை எடுத்து வந்திருக்கிறது மோட்டோரோலா. மற்ற அம்சங்களிலும் எந்தக் குறையும் வைக்காததால், இந்த பட்ஜெட்டில் தற்போது மிகச் சிறந்த சாய்ஸ் மோட்டோ G 5G.

கேட்ஜெட்ஸ் - 1:  டிஜிட்டல் உலகம் - 15

விலை:

39,999 ரூபாய்

ரியல்மீ ஸ்மார்ட் டிவி

SLED 4K (55 இன்ச்)

வசதிகள்:

60 Hz SLED டிஸ்ப்ளே பேனல்

Mali 470MP3 470 MHz ப்ராசஸர்

400 nits பிரைட்னெஸ்

1.5GB RAM

16GB ஸ்டோரேஜ்

3 HDMI போர்ட், 2 USB போர்ட்

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ்

24W டால்பி ஆடியோ

ப்ளஸ்

சாதாரண LED-யை மிஞ்சும் SLED பேனல்

தரமான ஆடியோ

ஸ்டைலிஷ்

மைனஸ்

சில நேரங்களில் வண்ணங்கள் அதிகமாக வெளிப்படுகின்றன.

ஒன்லைன் ரிவ்யூ:

ஸ்மார்ட்போன் சந்தையில் தடம் பதித்த ரியல்மீ நிறுவனம், ஷாவ்மிபோல டிவி சந்தையிலும் தடம் பதிக்க சில காலமாகவே திட்டம் திட்டி வருகிறது. முதலில் பட்ஜெட் செக்மென்ட்டில் அறிமுகப்படுத்திய டிவிகள் பெருமளவில் மக்களை ஈர்க்கவில்லை. அதனால் புதிய யுக்தியுடன் புதிய SLED தொழில்நுட்பத்தை இந்த டிவியில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் குறைந்த விலையில் ப்ரீமியம் அனுபவம் கிடைக்கிறது. டிவிகளில் பெரிய குறையாக இருக்கும் ஆடியோவிலும் 10/10 மதிப்பெண்கள் பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு