பிரீமியம் ஸ்டோரி

நாட்ச், பஞ்ச் ஹோல் என டிஸ்ப்ளே ஏரியாவைக் கஷ்டப்பட்டுச் சேமிப்பதற்கு, ஏன் மொத்தமாக மடக்கிக்கொள்ளும் வகையில் டிஸ்ப்ளேவை மடக்கிக் கொள்ளக்கூடாது என சில நிறுவனங்கள் மாற்றி யோசிக்க ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் உருவாகின.

மனிதனுக்கு முகம் என்றால், ஸ்மார்ட்போனுக்கு டிஸ்ப்ளே. இன்று ஒரு ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுவது அதன் டிஸ்ப்ளேவும் அதன் கேமராக்களும்தான். ஓடிடி தளங்களின் அபார வளர்ச்சியால் இன்று போன்களின் டிஸ்ப்ளேதான் பலருக்கும் வெள்ளித்திரை. இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முடிந்த அளவு பெரிய டிஸ்ப்ளேக்கள் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்துவருகின்றன. பெரிய டிஸ்ப்ளே கொடுக்கிறேன் என டேப்லெட் சைஸில் போன் தயாரிக்க முடியாது. கைக்கு அடக்கமாக இருந்தால் அது போன். என்ன செய்யலாம் என யோசித்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முன்புறம் செல்ஃபி கேமராவுக்கு மட்டும் இடம்விட்டு நாட்ச், பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேக்களை கொண்டு வந்தன. ஆனால், இப்படி செல்ஃபி கேமராவுக்கு இடம் விடுவதுகூட முழு டிஸ்ப்ளே அனுபவத்துக்குத் தொந்தரவுதான் என அடுத்து பாப்-அப் செல்பி தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தார்கள். இதுவும் சரிவராது என டிஸ்ப்ளேவுக்குப் பின் மொத்தமாக ஒளிந்துகொள்ளும் அண்டர்-டிஸ்ப்ளே கேமரா தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதில் சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இப்படியெல்லாம் டிஸ்ப்ளே ஏரியாவைச் சேமிப்பதற்குப் பதில், மொத்தமாக டிஸ்ப்ளேவையே மடக்கிக் கொள்ளும் வகையில் உருவாக்கி விடலாமே என சில நிறுவனங்கள் மாற்றி யோசிக்க, ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்கள் உருவாகின.

இது சில ஆண்டுகளாகவே வடிவமைப்பில் இருக்கின்றன. ஆனால், சந்தைக்கு வந்த முதல் முக்கிய சாம்சங்கின் கேலக்ஸி Z ஸ்மார்ட்போன் சாம்சங்கின் கேலக்ஸி Z ஃபோல்டுதான். கடந்த ஆண்டு வெளிவந்தது இந்த போன். இந்த ஆண்டை `ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் புரட்சியை ஆரம்பித்த வருடம்’ என வருங்காலம் குறிப்பிடும் அளவுக்கு முக்கிய போன்கள் இந்த ஆண்டு வெளிவந்திருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி Z

ஃபோல்டு 2

கேட்ஜெட்ஸ் - 2: ஃபோல்டபிள் போன்கள் - 15

விலை

1,49,999 ரூபாய்

ல தடைகளைக் கடந்து, கடந்த வருடம் வெளியானது சாம்சங்கின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான கேலக்ஸி Z ஃபோல்டு. அதிலிருந்த குறைகளையெல்லாம் நீக்கி இன்னும் மெருகேற்றி, இந்த சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு 2 போனை இந்த வருடம் அறிமுகப்படுத்தியது சாம்சங். இம்முறை வெளியில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட சராசரி போனில் இருக்கும் டிஸ்ப்ளே அளவு இது. விரித்தால் உள்ளே 7.2 இன்ச் டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். நாட்ச் நீக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச் ஹோல் கேமரா மட்டும் கொடுத்திருக்கிறார்கள். கடந்த போன் போல இல்லாமல் கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 2.

ப்ரீமியம் ஸ்நாப்டிராகன் 865 ப்ளஸ் புராசஸர் கொடுக்கப்பட்டிருக்கிறது. 12GB RAM, 256 GB ஸ்டோரேஜ், 5G சப்போர்ட் என ப்ரீமியம் போனில் இருக்க வேண்டிய அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறது கேலக்ஸி Z ஃபோல்டு 2.

பின்புறம் மூன்று 12 MP கேமராக்கள் கொடுத்திருக்கிறார்கள். வெளிப்புற டிஸ்ப்ளேவில் ஒரு 10MP கேமரா கொடுத்திருக்கிறார்கள். உட்புறம் உள்ள டிஸ்ப்ளேவிலும் இதே கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 5 கேமராக்கள். 4,500 பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். 2 டிஸ்ப்ளே, 5 கேமராக்கள் உள்ள போனுக்கு இன்னும் அதிகம் இருந்திருக்கலாம்.

இத்தனை வசதிகள் இருந்தாலும், விலை அதிகம் என்பதால் யாருக்கும் இந்த போனைப் பரிந்துரைக்க முடியவில்லை. ஆனால், முந்தைய போனிலிருந்து பல மடங்கு முன்னேறியிருக்கிறது கேலக்ஸி Z ஃபோல்டு 2 என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேட்ஜெட்ஸ் - 2: ஃபோல்டபிள் போன்கள் - 15

விலை

1,24,999 ரூபாய்

மோட்டோரோலா ரேஸர் 5G

ஸ்மார்ட்போன்கள் எல்லாம் வருவதற்கு முன்பு ஃப்ளிப் போன்கள் மிகவும் பிரபலமாக இருந்து வந்தன. அதே டிசைனை ஸ்மார்ட்போன் உலகுக்கு எடுத்துவர மோட்டோரோலா செய்திருக்கும் முயற்சியே இந்த மோட்டோரோலா ரேஸர். கிட்டத்தட்ட அதே டிசைனில் 14 மில்லிமீட்டர் தடிமனுடன் படு ஸ்லிம்மாக இருக்கிறது ரேஸர். நீளமான 6.2 இன்ச் 21:9 டிஸ்ப்ளே கொண்டுள்ளது இந்த போன். இதை மடித்துவிட்டால் வெளியே 2.7 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் நோட்டிஃபிகேஷன், மீடியா கன்ட்ரோல்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இதை வைத்து 48MP கேமராவில் செல்ஃபியும் எடுக்க முடிகிறது.

ஸ்நாப்டிராகன் 765G சிப் கொண்ட இது 8GB RAM, 256 ஸ்டோரேஜுடன் வருகிறது. 2,800 mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப் ஆப்ஷன் `வாவ்' சொல்ல வைத்தாலும், மற்ற விஷயங்கள் மிட்ரேஞ்ச் போன்களில் இருக்கும் அம்சங்கள்தான் என்பது ஏமாற்றம்.

கேட்ஜெட்ஸ் - 2: ஃபோல்டபிள் போன்கள் - 15

விலை

1,08,999 ரூபாய்

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப்

இது சாம்சங்கின் ஃப்ளிப் போன். கேலக்ஸி Z ஃபோல்டு 2 விலை அதிகம் என்று கருதுபவர்களுக்குச் சற்றே குறைந்த விலையில் ஃபோல்டபிள் அனுபவம் தரும் வகையில் இந்த கேலக்ஸி Z ஃப்ளிப்பை அறிமுகம் செய்தது. மோட்டோரோலா ரேஸர் போல உள்ளே நீளமான 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது கேலக்ஸி Z ஃப்ளிப். வெளியே 1.1 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மோட்டோரோலா ரேஸர்போல அல்லாமல் மற்ற அம்சங்கள் அனைத்துமே ப்ரீமியம் ரகம்.

ஸ்நாப்டிராகன் 865 ப்ளஸ் புராசஸர், 8GB RAM, 256 GB ஸ்டோரேஜ் எனக் கிட்டத்தட்ட கேலக்ஸி Z ஃபோல்டு 2-ல் இருக்கும் வசதிகளுடன் வருகிறது சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப். முன்புறம் ஒரு 10 MP கேமராவும், பின்புறம் இரண்டு 12MP கேமராக்களும் கொடுத்திருக்கிறார்கள். பேட்டரியும் ரேஸர் போனைவிட அதிகம். 3,300 mAh பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். கேலக்ஸி Z போல்ட்டைவிட விலை குறைவு என்றாலும், இதன் விலையும் ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது.

கேட்ஜெட்ஸ் - 2: ஃபோல்டபிள் போன்கள் - 15

விலை

69,990 ரூபாய்

எல்ஜி விங்

இந்த வரிசையில் சமீபத்தில் எல்ஜி, ‘விங்’ என்ற போனை அறிமுகம் செய்தது. இதை ஃபோல்டபிள் போன் எனச் சொல்ல முடியாதுதான். இதில் மற்ற நிறுவனங்கள் முயற்சி செய்யாத ஒரு புதிய வடிவத்தை முயற்சி செய்திருக்கிறது எல்ஜி. இதை ‘டபுள் டக்கர்’ டிஸ்ப்ளே எனலாம். இரண்டு டிஸ்ப்ளேக்கள் ஒன்றன்மீது ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மேலுள்ள டிஸ்ப்ளேவை மட்டும் உங்களால் திருப்பி ‘T’ வடிவத்தில் போனைப் பயன்படுத்த முடியும். அதாவது, ஃபுல் ஸ்க்ரீனில் கேம் ஆடிக்கொண்டிருக்க, கீழே ஜாய்ஸ்டிக்குக்குத் தனியாக டிஸ்ப்ளே இருந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருக்கிறது எல்ஜி விங் வடிவமைப்பு. வீடியோ ஷூட் செய்வது, மல்டி டாஸ்க்கிங் தொடங்கி கேம் ஆடுவது வரை இந்த T வடிவத்தால் ஏகப்பட்ட பயன்கள்.

ரேஸர் போன் போல மற்ற அம்சங்களில் சமரசம் இருக்கிறது. ஸ்நாப்டிராகன் 765G, 4000 mAh பேட்டரி, 64MP + 13MP +12MP பின்புற கேமராக்கள் 32MP செல்ஃபி கேமரா கொடுத்திருக்கிறார்கள். இதுவரை பார்த்த போன்களுடன் ஒப்பிடுகையில் இந்த போனின் விலையும் குறைவுதான்!

இப்போதுதான் முதல் முறையாகக் களமிறங்குகின்றன என்பதால் ஃபோல்டபிள் போன்களின் விலை தாறுமாறாக இருப்பது சகஜம்தான். வரும் வருடங்களில் ஃபோல்டபிள் விலையும் குறையும், வசதிகளும் மேம்படும் என எதிர்பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு