Published:Updated:

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

நாம் தினமும் சாதாரணமாகப் பயன்படுத்துவது இந்த வகை ஹெட்போன்களைத்தான்.

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

நாம் தினமும் சாதாரணமாகப் பயன்படுத்துவது இந்த வகை ஹெட்போன்களைத்தான்.

Published:Updated:
கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

அதிகம் உபயோகப்படுத்தப்படும் கேட்ஜெட்களில் ஒன்றாக இருக்கிறது ஹெட்போன். ஆனால், மிகவும் அதிகமாகப் பழுதாவதும் இவைதான். `எத்தனை ஹெட்போன்தான் மாத்திட்டே இருக்கிறது’ எனப் பலரும் அவ்வப்போது அலுத்துக் கொள்வோம். தினசரி அதிகம் உபயோகப்படுத்தினாலும், எந்த மாதிரியான ஹெட்போன்களை வாங்குவது என்ற குழப்பமும் நம்மில் பெரும்பாலோனோருக்கு இருக்கிறது. இந்தக் கட்டுரையில் என்ன விதமான ஹெட்போன்கள் எல்லாம் சந்தையில் கிடைக்கின்றன? எவற்றின் அடிப்படையில் ஹெட்போன்களைத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பார்க்கலாம். ஹெட்போன்களில் பல வகைகள் இருப்பது நமக்குத் தெரியும். கடந்த சில ஆண்டுகளில், புதிதாக வேறு சிலவிதமான ஹெட்போன்களும் நம் விஷ்லிஸ்ட்டில் இணைந்திருக்கின்றன. அது என்னானு பார்க்கலாம்!

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

இன்-இயர் ஹெட்போன்ஸ் (In-Ear Headphone)

நாம் தினமும் சாதாரணமாகப் பயன்படுத்துவது இந்த வகை ஹெட்போன்களைத்தான். ஹெட்போனின் இயர் பட்ஸ் நம் காதுகளுக்குள் சூப்பராக செட்டிலாகிவிடுவதால் இந்த வகை ஹெட்போன்களை ‘இன்-இயர்’ ஹெட்போன்கள் என்று அழைக்கின்றனர். இந்த வகையான ஹெட்போன்களை எல்லா இடங்களிலும் எளிதாகப் பயன்படுத்த முடியும். இது தினசரிப் பயன்பாட்டிற்கும் ஏற்றது. குறைவான விலையிலும் கிடைக்கும் என்பது கூடுதல் ப்ளஸ்.

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

ஹெட்போன்களைத் தேர்வு செய்யும்போது, கவனிக்க வேண்டிய டெக்னிக்கல் அம்சங்கள் என்னென்ன?

டிரைவர்கள் (Driver), பொதுவாக சிங்கிள் டிரைவர் மற்றும் டூயல் டிரைவர் ஹெட்போன்கள் சந்தையில் அதிகளவில் கிடைக்கின்றன. சிங்கிள் டிரைவர் ஹெட்போன்களைவிட டூயல் டிரைவர் ஹெட்போன்களில் ஒலியின் தரம் சிறப்பாக இருக்கும். சிங்கிள் டிரைவர்களைவிட டூயல் டிரைவர்கள் சில நூறு ரூபாய்களே அதிகம். இன்னும் சிறப்பாக வேண்டும் என்றால் ட்ரிபிள் டிரைவர் ஹெட்போன்களை வாங்கலாம். ஆனால், அவற்றில் விலையும் மிகவும் அதிகமாக இருக்கும்.

நாய்ஸ் கேன்ஸலேஷன் (Noise Cancellation).

நாம் பயன்படுத்தும் ஹெட்போன்கள் வெளிப்புறச் சத்தங்களை எந்தளவுக்குத் தடுக்கின்றன என்பதைத்தான் நாய்ஸ் கேன்ஸலேஷன் எனக் குறிப்பிடுகின்றனர். இந்த வசதியைக் கொண்ட ஹெட்போன்களை வாங்கும்போது ஒலியின் தரம் குறையாமல் முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியும்.

இந்த இரண்டு விஷயங்களைக் கவனித்து வாங்கினாலே சிறப்பான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸ் கொண்ட ஹெட்போன்களைத் தேர்ந்தெடுத்துவிடலாம். இன்-இயர் ஹெட்போனா அல்லது ஓவர்-இயர் ஹெட்போனா என்பதை, நீங்கள் எதற்காக ஹெட்போனைப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்து முடிவெடுக்கலாம். தினசரி சாதாரண பயன்பாடு என்றால் இன்-இயர் ஹெட்போன்களே நல்ல சாய்ஸ்தான். 500 ரூபாயில் தொடங்கி 20,000 ரூபாய்க்கு மேல் வரை ஹெட்போன்கள் கிடைக்கின்றன. எனவே, விலையிலும் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

ஆன்-இயர் ஹெட்போன் (On-Ear Headphone):

காதுகளுக்கு மேலே பொருந்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருக்கும். எனவேதான் இவை ‘ஆன்-இயர்’ ஹெட்போன் என்றழைக்கப்படுகிறது. நாம் பார்க்கும் மூன்று வகை ஹெட்போன்களிலும் மிகவும் குறைவாக விரும்பப்படும் ஹெட்போன்கள் இவைதான். இந்த வகை ஹெட்போன்கள் காதுகளின் மேலே அழுத்தம் கொடுக்கும் என்பதால், குறைவான நேரம் மட்டும் இவற்றை உபயோகப்படுத்த முடியும். மேலும், வெளிப்புறச் சத்தத்தையும் இவற்றால் தடுக்க முடியாது என்பதால் இவற்றைக் கடைசி சாய்ஸாக வைத்துக் கொள்வது நல்லது.

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

ஓவர்-இயர் ஹெட்போன் (Over-Ear Headphone):

இந்த வகையான ஹெட்போன்களும் காதுகளுக்கு மேல் பொருத்திக் கொள்ளும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக் கின்றன என்றாலும், இவை காதுகளை ஓரளவுக்கு மூடிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவேதான் இவை ஓவர்-இயர் ஹெட்போன்ஸ் என்றழைக்கப்படுகின்றன. சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால், இந்த வகையான ஹெட்போன்களைப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியாது என்பது இதன் மைனஸ். மேலும், விலையும் அதிகமாக இருக்கும்.

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

வயர்டு ஹெட்போனா? வயர்லெஸ் ஹெட்போனா?

இன்-இயர், ஆன்-இயர், ஓவர்-இயர் என அனைத்து வகை ஹெட்போன்களிலும், வயர்டு மற்றும் புளூடூத் என இரண்டு விதங்களில் கிடைக்கும். வயர்லெஸ் என்றால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்; ஆனால் ஹெட்போனையும் அவ்வப்போது சார்ஜ் செய்வதற்கு மறக்கக்கூடாது. வயர்டு ஹெட்போன்கள் என்றால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தும் நிலையில் தான் இருக்கும். ஆனால் வயர்கள் நம் பொறுமையை அவ்வப்போது சோதிக்கும்.

கேட்ஜெட்ஸ்: ஹெட்போனுக்கும் நல்ல டிரைவர் அவசியம்!

நெக்பேண்ட் (Neckband) மற்றும் ட்ரூலி வயர்லெஸ் (Truly wireless):

ஹெட்போன் வகைகளில் சமீபத்திய வரவு இந்த இரண்டு வகைகள்தான். இரண்டுமே வயர்லெஸ் ஹெட்போன் வகையைச் சேர்ந்தவைதான். அதேபோல, இரண்டுமே இன்-இயர் வகையைச் சேர்ந்தவை. ‘இன்-இயர்’ ஹெட்போன்களின் வயர்களினால் பொறுமை இழந்தவர்கள் இந்த இரண்டு வகைகளில் ஏதாவது ஒன்றை முயற்சி செய்யலாம்.