Published:Updated:

கேட்ஜெட்ஸ்: ஸ்மார்ட் ஒர்க் பார்க்கும் ஸ்மார்ட் பேண்ட்கள்! - எப்படி வாங்கணும்?

ஸ்மார்ட் பேண்ட்களின் முக்கிய நோக்கமே உடற்பயிற்சியின்போது நம் உடலின் இயக்கங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதுதான்

பிரீமியம் ஸ்டோரி

சமீப காலத்தில் நம்முடைய கேட்ஜெட் லிஸ்ட்டில் புதிய இடத்தைப் பிடித்திருப்பது ஸ்மார்ட் பேண்ட்கள் (Smart Bands). என்னதான் விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்களை வாங்கியிருந்தாலும், எல்லா நேரங்களிலும் அவற்றை அணிந்து கொண்டிருப்பது சௌகரியமாக இருப்பதில்லை. ஸ்மார்ட் வாட்ச்சில் இருக்கும் வசதிகளுடன் எந்த நேரமும் நாம் அணிந்து கொள்ளக்கூடிய வகையில் எடை குறைந்த கேட்ஜெட்டாக வெளியாகி, ஹிட்டும் அடித்திருக்கின்றன இந்த ஸ்மார்ட் பேண்ட்கள். ஸ்மார்ட் பேண்ட்களை எப்படித் தேர்ந்தெடுப்பது?

சிறியதாக இருப்பது சிறந்தது:

ஸ்மார்ட் பேண்டை ஃபிட்னஸ் விரும்பிகள்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். தினமும் காலையில் நடைப்பயிற்சி செல்பவர்களில் இருந்து நீச்சல் பயிற்சி மேற்கொள்பவர்கள் வரை ஃபிட்னஸ் விரும்பிகளுக்கான சிறந்த சாதனமாக இந்த ஸ்மார்ட் பேண்ட்கள் இருக்கின்றன. மிகவும் எடை குறைவாக இருப்பதால், இதனை அணிந்து கொண்டு உடற்பயிற்சிகளையும் செய்வது எளிதாக இருக்கும். ஸ்மார்ட் பேண்ட்களின் முக்கிய நோக்கமே அதனை அணிந்து கொண்டு எந்த வேலையையும் செய்ய வேண்டும் என்பதால், பெரிதாக இருக்கும் ஸ்மார்ட் பேண்ட்களைத் தவிர்க்கலாம். எடை குறைவாக இருக்கும் ஸ்மார்ட் பேண்ட்களையே தேர்ந்தெடுப்பது சிறந்தது.

சென்சார்கள் முக்கியம்:

ஸ்மார்ட் பேண்ட்களின் முக்கிய நோக்கமே உடற்பயிற்சியின்போது நம் உடலின் இயக்கங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதுதான். அதனால் என்னென்ன சென்சார்கள் நாம் வாங்கும் ஸ்மார்ட் பேண்டில் இருக்கின்றன எனப் பார்ப்பது அவசியம். இதயத் துடிப்பை அளக்க, தூக்கத்தைக் கண்காணிக்க, ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவை அளக்க மற்றும் உடற்பயிற்சியின்போது எவ்வளவு கலோரிகளைப் எரித்திருக்கிறோம் போன்றவற்றை அளப்பதற்கான சென்சார்கள் பொதுவாக அனைத்து ஸ்மார்ட் பேண்ட்களிலும் கொடுக்கப்படுகின்றன.

சிலர் அதிகமாக சைக்கிளிங் செய்வார்கள், சிலர் நடைப்பயிற்சி செய்வார்கள். அதனால் நாம் என்னவிதமான உடற்பயிற்சியை அதிகமாகச் செய்வோமோ, அந்தக் குறிப்பிட்ட உடற்பயிற்சி குறித்த அளவுகளை நமக்குக் கொடுக்க ஸ்மார்ட் வாட்ச்தான் நமக்கு சரிவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீச்சல் பயிற்சி மேற்கொள்பவர்களுக்குத் தண்ணீரில் நனைந்தாலும் வேலை செய்யும் வாட்டர் ரெஸிஸ்டன்ட் ஸ்மார்ட் பேண்ட்கள்தான் சரிவரும். சைக்கிளிங் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் அதற்குரிய மோடு ஸ்மார்ட் பேண்டில் இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும்.

மற்ற வசதிகள்:

நாம் வாங்கக் கூடிய ஸ்மார்ட் பேண்ட் - ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு இயங்குதளங்களுக்கும் ஏற்றவாறு இருந்தால் சிறப்பு. எந்த மொபைலுடனும் ஸ்மார்ட் பேண்டை இணைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான ஸ்மார்ட் பேண்ட்களில் போன் பேச முடியாது என்றாலும் கால்கள், குறுஞ்செய்திகள் மற்றும் நோட்டிபிகேஷன் களைப் பெறும் வகையிலான வசதிகள் இருக்கின்றனவா என உறுதிசெய்து கொள்ள வேண்டும். பாடல்கள் கேட்பது அனைவருக்கும் பிடித்த விஷயம்தான். ஸ்மார்ட் பேண்ட் மூலம் பாடலை மாற்றுவது, ம்யூட் செய்வது, சத்தத்தைக் குறைப்பது போன்ற வசதிகளும் இருக்கின்றனவா எனப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் பேண்ட்கள் குறைவான அளவு பேட்டரியைத்தான் செலவிடும் என்பதால், சாதாரணமாகவே 8 முதல் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் இருக்கும். அதனையும் ஒரு முறை சார்ஜ் செய்தால், எத்தனை நாட்கள் பேட்டரி பேக்கப் இருக்கும் என உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது.

உங்களுக்கான சில ஸ்மார்ட் பேண்ட் பரிந்துரைகள்...

கேட்ஜெட்ஸ்: ஸ்மார்ட் ஒர்க் பார்க்கும் ஸ்மார்ட் பேண்ட்கள்! - எப்படி வாங்கணும்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு