
டிஜிட்டல் உலகம்
ஒப்போ F17 ப்ரோ
விலை 8GB RAM + 128GB ரூ.22,990

வசதிகள்:
6.43-இன்ச் Full-HD+ Super AMOLED டிஸ்ப்ள
Mediatek Helio P95 ப்ராசஸர்
48MP+ 8MP+ 2MP + 2MP ரியர் கேமரா
16 MP+ 2 MP செல்ஃபி கேமரா
8GB RAM
4015 mAh பேட்டரி
30W VOOC 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 10, கலர் ஓஎஸ் 7.2
ப்ளஸ்
ஸ்டைலிஷ் டிசைன்
டிஸ்ப்ளே
பேட்டரி
மைனஸ்
கேமரா மற்றும் சொதப்பலான வீடியோ ரெக்கார்டிங்
சுமாரான பெர்ஃபாமன்ஸ்
ஒன்லைன் ரிவ்யூ:
செம அழகான டிசைன் & பில்டு குவாலிட்டி, நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் பேட்டரி, வேற லெவல் டிஸ்ப்ளே என இதில் நிறைகள் இருக்கும் அளவுக்குக் குறைகளும் உண்டு. இந்த விலையில் இன்னும் சிறப்பான ப்ராசஸர் கொண்ட போன்கள் உள்ளன. அதிக கேமராக்கள் இருப்பதால் எல்லாம் கலக்கலான கேமரா பெர்ஃபாமன்ஸ் கிடைக்காது என்பதற்கும், ஒப்போ F17 ப்ரோ ஒரு எடுத்துக்காட்டு.
சாம்சங் கேலக்ஸி டேப் S7 ப்ளஸ்
விலை 8GB RAM + 128GB ரூ.79,990

வசதிகள்:
12.4 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே (HDR10+, 120Hz)
Qualcomm SM8250 Snapdragon 865+ ப்ராசஸர்
13MP+ 5MP ரியர் கேமரா
8 MP செல்ஃபி கேமரா
6GB/8GB RAM
10090 mAh பேட்டரி
45W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 10, ஒன் யூ.ஐ 2.5
ப்ளஸ்
டிஸ்ப்ளே
பேட்டரி
ஸ்டைலஸ் சப்போர்ட்
மைனஸ்
விலையைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்
ஒன்லைன் ரிவ்யூ:
டேப்லெட் என்றால் ஆப்பிளின் ஐபேட்கள்தான் பலரது முதல் சாய்ஸாக இருந்து வருகின்றன. இதுவரை வந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்கள் அனைத்துமே சுமார் ரகம்தான். இந்த நிலையை கேலக்ஸி டேப் S7 ப்ளஸ் மூலம் மாற்றியிருக்கிறது சாம்சங். தரமான டிஸ்ப்ளே, ஸ்மூத்தான பெர்ஃபாமன்ஸ் என ஆல்ரவுண்டராகத் தற்போது சந்தையில் இருக்கும் சிறந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் இதுதான் என கண்ணை மூடிச் சொல்லிவிடலாம்.
ரியல்மீ 7 ப்ரோ
விலை 6GB RAM+128GB ரூ.19,999
8GB RAM, 128GB ரூ.21,999

வசதிகள்:
6.4 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே
Qualcomm Snapdragon 720G ப்ராசஸர்
64MP+ 8MP+ 2MP+ 2MP ரியர் கேமரா
32 MP செல்ஃபி கேமரா
6GB/8GB RAM
5000 mAh பேட்டரி
65W ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 10, ரியல்மீ யூ.ஐ
ப்ளஸ்
பில்டு குவாலிட்டி
தரமான டிஸ்ப்ளே
ஈடில்லா பேட்டரி பெர்ஃபாமன்ஸ்
மைனஸ்
டிஸ்ப்ளே 60Hz தான்
ஒளி குறைவான இடங்களில் சொதப்புகிறது கேமரா
ஒன்லைன் ரிவ்யூ:
இந்த விலையில் இருக்கும் மற்ற எந்த ஒரு போனை விடவும் வேகமாக சார்ஜ் ஆகிவிடும் இந்த போன். 30 நிமிடங்களில் 0-100% சார்ஜ் செய்துவிட முடியும். இத்துடன் மற்ற வசதிகள் சரியாகக் கைகூடியிருப்பதால் 20,000 ரூபாய் பட்ஜெட்டுக்கு சூப்பர் சாய்ஸாகிறது இந்த ரியல்மீ 7 ப்ரோ.
ஒன்ப்ளஸ் பட்ஸ்
விலை ரூ.4,990

வசதிகள்:
4.7 கிராம்(பட்ஸ்)+ 37 கிராம் (சார்ஜிங் கேஸ்) எடை
35 mAh (பட்ஸ்)+ 420mAh (சார்ஜிங் பாக்ஸ்) பேட்டரி
3.4 mm டைனமிக் ஆடியோ டிரைவர்
புளூடூத் 5.0
நிறங்கள்: வெள்ளை, சாம்பல், நீளம்
ப்ளஸ்
அணிய சவுகரியமாக இருக்கிறது
பேட்டரி, சார்ஜிங்
ஆடியோ குவாலிட்டி
மைனஸ்
மைக் சுமாராக இருக்கிறது
சில அம்சங்கள் ஒன்ப்ளஸ் போன் இருந்தால் மட்டுமே செயல்படும்
ஒன்லைன் ரிவ்யூ:
கொடுக்கும் விலைக்கு நல்ல TWS இயர்போன்ஸ்தான் ஒன்ப்ளஸ் பட்ஸ். ஆனால், ஒன்ப்ளஸ் போனுடன் இணைக்கும் போதுதான் இதன் முழுத் திறனையும் பயன்படுத்த முடியும் என்பதால், மற்ற போன் வைத்திருப்பவர்கள் இதைத் தவிர்த்து விடுவது பெஸ்ட் ஆப்ஷன்.