கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம்

ப்போது சந்தையில் இருக்கும் சில தரமான டிவி ஸ்ட்ரீமிங் சாதனங்கள் பற்றிப் பார்ப்போம். டிவி, ஃப்ரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் என இன்று கிட்டத்தட்ட அனைத்து சாதனங்களுமே ஸ்மார்ட்டாகி விட்டன.
கேட்ஜெட்ஸ்

வெகு சில ஆண்டுகளில் இந்த மாற்றம் நிகழ்ந்துவிட்டதால், சில வீடுகளில் பழைய சாதனங்கள் கொஞ்சம் அவுட்-டேட் ஆகியிருக்கும். நாம் எலெக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கினாலே 7-10 வருடங்கள் உழைக்கும் என்ற மனக்கணக்கில்தான் வாங்குகிறோம். ஆனால், இப்போது பலரும் தங்களது பழைய டிவியை இன்றைய ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதற்காகப் பலி கொடுத்து வருகின்றனர். இன்று ஸ்ட்ரீமிங் தளங்களும் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கின்றன. படங்கள்கூட நேரடியாக OTT தளங்களில் வெளியாகின்றன. இதனாலேயே ஏற்கெனவே இருக்கும் டிவியில் எந்தப் பிரச்னையும் இல்லையென்றாலும், ஸ்மார்ட் வசதிகள் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக புது டிவியை சிலர் வாங்குகின்றனர். ஆனால், இதற்கு ஒரு சிம்பிள் தீர்வு இருக்கிறது. அதுதான் மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்கள். இவற்றை மட்டும் கொண்டு எந்த டிவியையும் உங்களால் ஸ்மார்ட் டிவி ஆக்கமுடியும். அப்படி இப்போது சந்தையில் இருக்கும் சில தரமான டிவி ஸ்ட்ரீமிங் சாதனங்கள் பற்றிப் பார்ப்போம்.

அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக் 4K

கேட்ஜெட்ஸ்

து போன்ற சாதனங்களை பிரபலப்படுத்திய பெருமை அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக்கையே சேரும். Netflix, JioCinema, Hotstar, Gaana, Sony Liv, Voot, Zee5 எனக் கிட்டத்தட்ட அனைத்து பிரபல OTT தளங்களையுமே அமேஸான் ஃபயர் டிவி ஸ்டிக்கில் ஸ்ட்ரீம் செய்ய முடியும். ஒவ்வொன்றுக்கும் தனியாகச் சந்தா கட்டவேண்டும் பாஸ், அதை மறந்துவிடாதீர்கள். 4K ரெசல்யூசன் வரை சப்போர்ட் இருக்கிறது. HDR கன்டென்ட்டை ஸ்ட்ரீம் செய்ய முடியும் என, உட்சபட்ச ஸ்மார்ட் டிவி வசதிகளைக் கைகளில் அடங்கும் அளவுக்குச் சின்ன ஒரு ஸ்டிக்கில் தருகிறது ஃபயர் டிவி ஸ்டிக். அமேஸானின் சொந்தச் சாதனம் என்பதால், ப்ரைம் வீடியோ நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கலாம். அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட் சப்போர்ட்டுடன், நல்ல ரிமோட்டும் இத்துடன் கிடைக்கும். இதன் பெரிய குறை யூடியூப் செயலிக்கு சப்போர்ட் இல்லாததுதான். வெப் புரௌஸர் மூலம் பார்க்க முடியும் என்றாலும், ஆப் இல்லாதது ஏமாற்றம்தான். அதனால் அதிகம் யூடியூப் பார்ப்பீர்கள் என்றால் கொஞ்சம் யோசிக்கலாம்.

வீட்டில் 4K டிவி இல்லையென்றால் சாதாரண ஃபயர் டிவி ஸ்டிக்கை வாங்கலாம். இதன் விலை 3,999 ரூபாய். 4K சப்போர்ட் வேண்டுமானால் ஃபயர் டிவி ஸ்டிக் 4K-வை வாங்கலாம். இதன் விலை 5,999 ரூபாய்.

ஆப்பிள் டிவி 4K

கேட்ஜெட்ஸ்

பெர்ஃபாமென்ஸில் அமேஸான் ஃபயர் ஸ்டிக்கைவிட ஆப்பிள் டிவி 4K நன்றாக இருக்கும். நல்ல மென்பொருள் அனுபவம். தரமான ஸ்ட்ரீமிங் குவாலிட்டி என அனைத்திலும் மாஸ் காட்டுகிறது ஆப்பிள் டிவி 4K. ஆனாலும், அமேஸான் ஃபயர் ஸ்டிக்கையே முதல் சாய்ஸாகப் பரிந்துரைக்கிறோம். காரணம் விலை. கிட்டத்தட்ட ஃபயர் ஸ்டிக் 4K-வை விட 3 மடங்கு அதிகம் விலையில் விற்கப்படுகிறது ஆப்பிள் டிவி. 32 GB வெர்ஷன் 15,900 ரூபாய்க்கும் 64 GB வெர்ஷன் 17,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஐபேட், ஐபோன் என மற்ற ஆப்பிள் சாதனங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் ஆப்பிள் டிவி 4K பற்றி யோசிக்கலாம். Airplay சப்போர்ட் இருக்கும் என்பதால் உங்கள் மொபைல், லேப்டாப் திரையை நேராக ஆப்பிள் டிவி மூலம் உங்கள் டிவியில் ஒளிபரப்பலாம். 4K HDR கன்டென்ட்டுக்கான சப்போர்ட்டும் இதில் உண்டு. நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம் வீடியோ போன்ற தளங்களில் இது கிடைக்கும். யூடியூப் ஆப் இருந்தாலும் 4K சப்போர்ட் இருக்காது. வீட்டில் 4K டிவி இல்லையென்றால் சாதாரண ஆப்பிள் டிவியை (4th Gen) வாங்கலாம். இதன் விலை 12,900 ரூபாய்.

ஷாவ்மி Mi பாக்ஸ் 4K

ஷாவ்மியின் இந்த மீடியா ஸ்ட்ரீமிங் சாதனம் சமீபத்தில்தான் வெளிவந்தது. குறைந்த விலையில் நிறைவான வசதிகள் என எப்போதும்போல நம்மை இதுவும் ஈர்க்கத் தவறவில்லை. இந்தச் சாதனம் கொண்டு உங்கள் டிவியை அப்படியே Mi ஸ்மார்ட் டிவி போல மாற்றிவிடலாம். கிட்டத்தட்ட அதே போன்ற ரிமோட்தான் தருகிறார்கள். உள்ளே மென்பொருளும் அப்படித்தான். ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் என்பதால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் டிவி ஆப்கள் அனைத்திற்கும் சப்போர்ட் உண்டு. குரோம்கேஸ்ட் சப்போர்ட் மூலம் நீங்கள் மொபைலில் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை டிவியில் ஒளிபரப்பலாம். இதன் விலை 3,499 ரூபாய். 4K வேண்டாம் என்றால் Mi டிவி ஸ்டிக் இருக்கிறது. Full-HD வரை சப்போர்ட் செய்யும் இதன் விலை 2,799 ரூபாய்.

கேட்ஜெட்ஸ்

இதுபோக ஏர்டெல், ஜியோ போன்ற இணையச் சேவை நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தனியாக மீடியா ஸ்ட்ரீமிங் சாதனங்களை வழங்குகின்றனர். இதற்கு வாய்ப்பிருந்தால் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். PS, Xbox போன்ற கேமிங் கன்சோல்கள் வாங்கினால், அதிலேயே ஸ்ட்ரீம் செய்யும் வசதிகள் இருக்கும். தனியாக இதுபோன்ற சாதனங்கள் வாங்கத் தேவையிருக்காது.

சாதாரண டிவியை ஸ்மார்ட் டிவியாக ஆக்குவதற்கு மட்டும் இந்தச் சாதனங்கள் பயன்படுவதில்லை. அப்டேட் இல்லாமல், சில ஆப்களுக்கு சப்போர்ட் இல்லாமல், ஓஎஸ் ஸ்லோவாக ஆகியிருக்கும் ஸ்மார்ட் டிவிகளை மீண்டும் உயிர்த்தெழ வைக்கவும் இந்தச் சாதனங்கள் பயன்படும்!