Published:Updated:

`ஸ்மார்ட்வாட்ச்களில் கவனம் செலுத்தும் கூகுள்'- ஃபிட்பிட் நிறுவனத்தைப் பெரும்விலை கொடுத்து வாங்கியது!

ஃபிட்பிட் | Fitbit
ஃபிட்பிட் | Fitbit

இந்த முதலீட்டுக்குப் பின்னணியில் பல திட்டங்களை வைத்திருக்கிறது கூகுள்.

கூகுள், ஃபிட்னஸ் சாதனங்கள் தயாரிப்பதற்குப் புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை 2.1 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கியுள்ளது. இதுதொடர்பாக கூகுளின் முதன்மை துணைத் தலைவர் ரிக் ஒஸ்டெர்லோ வெளியிட்ட அறிக்கையில், ``Wear OS-ல் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவும் சொந்தமாக ஸ்மார்ட் வாட்சுகளைத் தயாரித்து சந்தையில் விற்கவும் சிறந்த வாய்ப்பை இந்த முதலீடு வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

கூகுள்
கூகுள்

இதுகுறித்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் கசியவே, தற்போது கூகுள் நிறுவனமே இந்த பரிமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபிட்பிட் வெளியிட்ட அறிக்கையில்,``டேட்டாவை எந்த ஒரு காரணத்துக்காகவும் கூகுள் பயன்படுத்தாது, அதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பொருளில் கொடிகட்டிப் பறந்தாலும், wearable gadgets (அணியும் சாதனங்கள்) உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாமல் தவித்தது கூகுள். ஃபிட்பிட் ஹார்ட்வேரில் மிகவும் பலம்வாய்ந்த நிறுவனம் என்பதால், கூகுளின் ஆண்ட்ராய்டு WearOS இயங்குதளத்தில் இயங்கும் வாட்சுகளைத் தயாரிப்பதற்கு அடித்தளமாக இது இருக்கும் என நம்பப்படுகிறது. இதன்மூலம் கூகுள், ஆப்பிள் வாட்சுகளுடன் போட்டிபோட முடியும் என நம்பப்படுகிறது.

ஃபிட்பிட் வெர்சா
ஃபிட்பிட் வெர்சா
யார் மிகச் சிறந்த மேனேஜர்...? - கூகுள் சொல்லும் 10 குணாம்சங்கள்!

கூகுளின் மென்பொருள் திறன், வெர்சா போன்ற ஃபிட்பிட் வாட்ச்களை மேலும் சிறந்தமுறையில் பயன்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி wearable நிறுவனங்களில் கூகுள் செய்யும் முதல் முதலீடும் இது கிடையாது. கடந்த ஜனவரி மாதம்தான் 40 மில்லியன் டாலர் செலவு செய்து ஃபாசிலிடம் (fossil) ஸ்மார்ட் வாட்ச் தொழில்நுட்பம் ஒன்றை விலைக்கு வாங்கியது கூகுள். இதனால், அணியும் சாதனங்களின் உலகில் கூகுள் புதிய புரட்சி செய்யத் தயாராக இருக்கிறது என்பதை மட்டும் உறுதிபடச் சொல்லலாம்.

பின் செல்ல