Published:Updated:

`இவ்வளவு நாள் இது தெரியமா போச்சே!'- இன்காக்னிடோவில் இருந்த ஓட்டையை சரிசெய்யும் குரோம்

ம.காசி விஸ்வநாதன்

குரோம் பிரவுசரின் இன்காக்னிடோவில் இருந்த ஒரு பிரச்னையை சரிசெய்யவிருக்கிறது கூகுள்.

குரோம் இன்காக்னிடோ விண்டோ
குரோம் இன்காக்னிடோ விண்டோ

கூகுள் வெளியிட்டிருக்கும் புதிய அறிக்கையில் அதன் குரோம் வெப் பிரவுசரின் இன்காக்னிடோ மோடில் இருந்துவந்த தொழில்நுட்ப ஓட்டை ஒன்று வரும் குரோம் 76 அப்டேட்டில் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரவுசர் ஹிஸ்டரி போன்ற தகவல்கள் சேமிக்கப்படாமல் இருப்பதற்கும், cache மற்றும் cookies சேவ் ஆகாமல் பிரைவேட்டாக இணையம் பயன்படுத்த நாம் இன்காக்னிடோ மோடைப் பயன்படுத்துகிறோம். ஆனால், குரோமில் இருந்துவந்த இந்த ஓட்டையால் நீங்கள் பிரைவேட் பிரவுசிங் செய்கிறீர்களா அல்லது சாதாரணமாக பிரவுசிங் செய்கிறீர்களா என்பதை இணையதளங்களால் கண்டறியமுடியும்.

93% ஆபாச இணையதளங்கள் இதைத் தாண்டியும் பயனாளர்களின் தகவல்களைச் சேகரித்து மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அவற்றை விற்கின்றன என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு.

Chrome’s Filesystem எனப்படும் API, இன்காக்னிடோ மோடில் disable செய்யப்படும். இதன்மூலம்தான் பிரவுசரில் நடக்கும் விஷயங்கள் நமது கருவிகளில் சேமிக்கப்படாமல் இருக்கும். ஆனால், இதை வைத்து நீங்கள் பிரைவேட் பிரவுசிங் செய்கிறீர்களா என்பதை எளிதாக இணையதளங்களால் கண்டறிந்துவிடமுடியும். Chrome’s Filesystem API இருக்கிறதா என்று செக் செய்தால் போதும், error வந்தால் அது இன்காக்னிடோ பிரவுசிங்தான் என்று கண்டறிந்துவிடலாம். ஜூலை 30 வெளியாகும் அப்டேட்டிற்கு பிறகு இப்படி செய்யும்போது error வராது, இதனால் நீங்கள் பிரைவேட் பிரவுசிங்தான் செய்கிறீர்களா என்பதையும் தெரிவித்துள்ளது கூகுள்.

மேலும் இன்காக்னிடோ மோடில் பிரவுசிங் செய்வதன்மூலம் நமது சாதனத்தில்தான் அந்தத் தகவல்களை டிராக் செய்யமுடியாதே தவிர இணைய சேவை நிறுவனம், இணையதளம் போன்றவைகளை நீங்கள் என்ன பிரவுஸ் செய்கிறீர்கள் என்பதை பார்க்கமுடியும். 93% ஆபாச இணையதளங்கள் இதைத் தாண்டியும் பயனாளர்களின் தகவல்களைச் சேகரித்து மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு அவற்றை விற்கின்றன என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு.

குரோம்
குரோம்

இதனால் இன்காக்னிடோவை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது, VPN சேவைகளைப் பயன்படுத்தினால்தான் ஓரளவாவது பாதுகாப்பாக இணையத்தில் இயங்கமுடியும் என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.