Election bannerElection banner
Published:Updated:

ஆசிரியர்களே... வகுப்பறையில் உங்களை ஸ்மார்ட் ஆக்கும் கேட்ஜெட்ஸ்! #TeachersDay

ஒரு ஸ்மார்ட் டிவியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும், ஒரே நாளில் வகுப்பறையை ஸ்மார்ட்டாக மாற்றி விடலாம்.

டிஜிட்டல் யுகத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறையும் நாளுக்கு நாள் ஸ்மார்ட்டாகிக் கொண்டுதான் இருக்கிறது. வெறும் புத்தக வடிவில் மட்டுமே இருந்த பாடப்புத்தகங்கள் இன்று முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவிலேயே கிடைக்கின்றன. இனிமேலும் வகுப்பறையில் வெறும் சாக்பீஸ்களை மட்டுமே வைத்து பாடம் நடத்திக் கொண்டிருந்தால் அது போதுமானதாக இருக்காது. மாணவர்களுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்களும் ஸ்மார்ட்டாக மாறுவது இனிமேல் அவசியமாகிறது. அது போல ஆசிரியர்கள் பயன்படுத்துவதற்கான சில கேட்ஜெட்கள் இங்கே.

2
Bluetooth Speakers

ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்

ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் சினிமா பாடல்கள் மட்டும்தான் கேட்க வேண்டுமா என்ன ? சிறுவர்களுக்கான பாடல்களையும் கேட்கப் பயன்படுத்தலாமே! ஒரு வகுப்பறைக்கு கைக்கு அடக்கமான சிறிய ப்ளூடூத் ஸ்பீக்கரே போதுமானதாக இருக்கும். சிறுவர் பாடல்கள் யூட்யூபில் அதிகமாகக் கிடைக்கின்றன. சிறுவர்களும் அதை விரும்பவே செய்கிறார்கள். ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானது, இதில் இணைத்துப் பாடல்களை ஒலிக்க விடலாம். இது தவிர சில புத்தகங்களும் ஒலி வடிவில் கிடைக்கின்றன. காலையில் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும், ஒரு நாள் முழுக்க பயன்படுத்த முடியும். இவற்றின் விலை ஐந்நூறு ரூபாயிலிருந்து தொடங்குகிறது. ஆயிரம் ரூபாய்க்கு ஒரு நல்ல ப்ளூடூத் ஸ்பீக்கரை வாங்கி விடலாம்.

3
Tablets

டேப்லெட்கள்

ஸ்மார்ட்போன்களை விடவும் பெரிய திரையைக் கொண்டிருக்கும் டேப்லெட்கள் அவற்றை விடவும் விலை குறைவாகக் கிடைக்கின்றன. பாடம் நடத்தும்போது குறிப்பு எடுத்துக் கொள்வதற்காக இவற்றைப் பயன்படுத்தலாம். இது மட்டுமின்றி வருகைப் பதிவு செய்வது போன்ற பல விஷயங்களை இதன் மூலமாகச் செய்ய முடியும். வகுப்பில் மாணவர்களுக்கென ஒரு டேப்லெட்டை ஒதுக்கி விடலாம். மாணவர்கள் ஏதேனும் சந்தேகம் கேட்கும் சமயங்களில் ஸ்மார்ட்போன்களை மாணவர்களிடத்தில் கொடுக்கத் தயக்கம் இருந்தால் டேப்லெட்டை கொடுக்கலாம். சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் படம் வரைவதற்கான பிரத்யேகமான பென்சிலுடன் பல டேப்லெட் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. இவற்றில் படம் வரைந்தால் அவற்றை விளக்குவதும் எளிதான விஷயமாக இருக்கும்.

4
Wireless Presenter

Wireless Presenter

பவர்பாயின்ட், நோட்ஸ் போல ஸ்லைடுகள் நிறைந்த விஷயங்களை சில நேரங்களில் மாணவர்களுக்குக் காட்ட வேண்டியிருக்கும். ஒரு ஸ்லைடு முடியும் போது மவுசை அடிக்கடி கிளிக் செய்ய வேண்டியிருக்கும். அது போன்ற சமயங்களில் இந்த வயர்லெஸ் பிரசென்டர்கள் கைகொடுக்கும். கம்ப்யூட்டரில் இணைத்துக் கொண்டால் போதும். தொலைவிலிருந்தே ஸ்லைடுகளை மாற்றலாம். சில மாடல்களில் லேசர் வசதியும் இருக்கிறது. அதன் மூலமாக முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டுக் காட்டவும் முடியும்.

5

Smart Tv

டிஸ்ப்ளே தனியாகவும், கம்ப்யூட்டர் தனியாகவும் வாங்கிக் கொண்டிருந்த நிலையை இந்த ஸ்மார்ட் டிவி-க்கள் முற்றிலுமாக மாற்றியிருக்கின்றன. பத்தாயிரம் ரூபாயிலிருந்து இந்த ஸ்மார்ட் டிவி-க்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஸ்மார்ட் டிவி-யில் இணைய இணைப்பு கொடுத்தால் மட்டும் போதுமானது. தேவைப்படும் விஷயங்களை அதில் தேடி மாணவர்களுக்குக் காண்பிக்கலாம். எடுத்துக்காட்டாக, பாடங்களை விளக்குவதற்காக யூடியூபில் இருக்கும் வீடியோக்களை மாணவர்களுக்குக் காட்டலாம். இதன் மூலம் ஒரு விஷயத்தை மாணவர்களிடையே எளிமையாகக் கொண்டு செல்லலாம். ஒரு ஸ்மார்ட் டிவியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும், ஒரே நாளில் வகுப்பறையை ஸ்மார்ட்டாக மாற்றி விடலாம்.

6
Projectors

Projectors

பாடம் நடத்தும் போது மாணவர்கள் கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? அவர்களை புரொஜெக்டர்கள் மூலமாகப் பாடங்களை கவனிக்க வைக்கலாம். ஒரு வகுப்பறையில் புரொஜெக்டரைப் பொருத்தப் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் செய்யத் தேவையிருக்காது. ஒரு டேபிள்மீது வைத்துக்கொள்ளலாம் அல்லது நிரந்தரமாகப் பொருத்திக் கொள்ளலாம். வீடியோ வடிவிலான பாடத்திட்டங்கள் இப்போது அதிகமாகக் கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவோ அல்லது பணம் கொடுத்தோ வாங்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். 5,000 ரூபாய்க்கு மார்க்கெட்டில் ஒரு நல்ல புரொஜெக்டரை வாங்கிவிட முடியும்.மாணவர்களும் பெரிய திரையில் பாடம் நடத்தும்போது நன்றாக கவனிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

8 லட்சம் ரூபாயில் கட்டடப் பணி, வேன் வசதி; வியக்க வைக்கும் சேலம் அரசுப் பள்ளி ஆசிரியர்! #TeachersDay
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு