Published:Updated:

ஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! #DoubtOfcommonman

Facebook
News
Facebook

ஃபேஸ்புக்கில் மால்வேர் மெசேஜ்கள், முன்பின் தெரியாத முகவரியிலிருந்து வருவதுபோய், இப்போதெல்லாம் நண்பர்களின் பெயரிலேயே அடிக்கடி வரத் தொடங்கியிருக்கின்றன. இப்படி நடந்தால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

"திடீரென ஒருநாள் நண்பர் ஒருவரின் ஃபேஸ்புக் முகவரியிலிருந்து ஒரு வீடியோ வந்திருந்தது. அதை க்ளிக் செய்ததும், ஏதோ ஒரு யூடியூப் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அடுத்து ஒரு ஃபைலும் டவுன்லோடு செய்யட்டுமா எனக் கேட்டது. நான் அதை குளோஸ் செய்துவிட்டேன். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் என் நண்பர்களுடைய டைம்லைனில் அந்த வீடியோ என் சார்பில் போஸ்ட் ஆகியிருக்கிறது. சிலருக்கு இன்பாக்ஸிலும் மெசேஜ் சென்றிருக்கிறது. அவர்களுக்கெல்லாம் இது ஏதோ வைரஸ் பிரச்னை எனச் சொல்லி மெசேஜ் செய்துவிட்டேன். அந்த லிங்க்குகளையும் டெலிட் செய்துவிட்டேன். ஆனால், இன்னமும் பல பெயர் தெரியாத க்ரூப்கள் மற்றும் பேஜ்களில் என்னுடைய ஃபேஸ்புக் ஐடி பலவிதங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் பலவற்றையும் டெலிட் செய்துவிட்டாலும், எதிர்காலத்தில் வேறு ஏதேனும் பிரச்னை வருமா, என்னுடைய கணினிக்கும் இதனால் ஏதேனும் பிரச்னை வந்திருக்குமா என சந்தேகமாக உள்ளது. இப்போது நான் என்ன செய்யவேண்டும்?" என விகடனின் #DoubtOfcommonman பகுதியில் தன்னுடைய கேள்வியைப் பதிவுசெய்திருந்தார் நீலகிரி வாசகர் உமா மகேஸ்வரன். அவருக்கான பதில் இதோ.

Facebook Messenger
Facebook Messenger

இதுபோல நண்பர்களின் ஃபேஸ்புக் ஐடியிலிருந்து மால்வேர் மெசேஜ்கள் வருவது புதிதல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே ஃபேஸ்புக்கில் இந்தப் பிரச்னை இருக்கிறது. அவ்வப்போது ஏதேனும் ஒரு வைரஸ் இப்படி பரவும். இதில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் முதலில் உங்களின் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டையும், கணினியையும் பாதுகாத்துக் கொள்வது மற்றும் எதிர்காலத்தில் இதேபோல சிக்கிக்கொள்ளாமல் இருப்பது ஆகிய இரண்டும்தான். மால்வேர்கள் குறித்து பலரும் நன்கு அறிந்திருந்தும் இதுபோன்ற பிரச்னைகளில் சிக்குவதற்கு காரணம், ஹேக்கர்களின் புதிய சாமர்த்தியமான உத்திகள்தான். உதாரணமாக இப்படியெல்லாம் சில மெசேஜ்கள் உங்கள் நண்பரிடமிருந்து வருகிறது என்றால் என்ன செய்வீர்கள்?

'இந்த வீடியோவில் இருப்பது நீங்களா எனப் பாருங்கள்!'

'இந்த வீடியோ உங்களுக்கான என் சிறப்பு பரிசு!'

'ஃபேஸ்புக்கிடமிருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. இந்த லிங்க்கில் சென்று பாருங்கள்!'

'இந்த ஆபாச வீடியோவில் இருப்பவர் உங்களைப் போன்றே இருக்கிறார்!'

'உங்களுக்காக ஒரு பரிசு அனுப்பியிருக்கிறேன். இந்த லிங்க்கை க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படி இன்னும் விதவிதமாக உங்களுக்கு ஃபேஸ்புக்கில் வலைவிரிக்கப்படும். உண்மையாகவே நம் நண்பர் நமக்காக ஏதோ அனுப்பியிருக்கிறார் என்ற ஆர்வத்தில்தான் பலரும் அதை க்ளிக் செய்கின்றனர். இங்குதான் ஹேக்கர்கள் வெற்றி பெறுகின்றனர். ஒருவேளை க்ளிக் செய்துவிட்டால் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

Facebook Security
Facebook Security

உங்களின் ஃபேஸ்புக் கணக்கை லாகின் செய்வதற்கான Access Token-களைத் திருடலாம். அதன்மூலம் உங்களின் சுயவிவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள் போன்றவை களவாடப்படலாம். உங்களின் முகவரியைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுக்கும் இதேபோல மெசேஜ்கள் அனுப்பப்படலாம். ஆபாச வீடியோக்களை அனுப்பி உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கலாம். அவர்களின் டைம்லைனில் உங்களின் பெயரில், இதே வீடியோ போஸ்ட் செய்யப்படலாம். உங்களின் டைம்லைனில் தொடர்ந்து எதையாவது போஸ்ட் செய்யப்படலாம். தேவையற்ற க்ரூப்களில் உங்கள் ஐடியை சேர்க்கலாம். உங்கள் பெயரில் போலியான ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கலாம். ஏதேனும் லிங்க்கை டவுன்லோடு செய்வதன் மூலம் உங்கள் கணினியிலும் ட்ரோஜன் வைரஸ்கள் இன்ஸ்டால் செய்யப்படலாம். இதனால் உங்கள் கணினியும் பாதிக்கப்படலாம். இப்படி இன்னும் பாதகங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றும் அந்தந்த மால்வேரின் தன்மையைப் பொறுத்தது; எதற்காக அதை பரப்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படிப்பட்ட மெசேஜ்கள் உங்கள் ஐடிக்கு வருவதற்கான காரணம், ஒன்று உங்களின் நண்பர்கள் யாரேனும் அந்த மால்வேரால் பாதிக்கப்பட்டு அவரின் மூலம் உங்களுக்கும் வந்திருக்கும். இல்லையெனில் நேரடியாக போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட்கள் மூலம் உங்களுக்கு அவை அனுப்பப்பட்டிருக்கும். இதில் இரண்டாவதான போலி அக்கவுன்ட்கள் பெரிய பிரச்னையில்லை. காரணம், அவற்றைப் பார்த்ததுமே கண்டுபிடித்துவிடலாம். எனவே கொஞ்சம் சந்தேகம் வரும்படி இருந்தாலே அந்த லிங்க்குகளை ஒதுக்கிவிடலாம். ஆனால், முதலாவதுதான் பெரிய பிரச்னை. கொஞ்சம் அசந்தாலும் ஏமாந்துவிடுவோம். இங்கு உஷாராக ஒரேவழி, அந்த லிங்க்குகளை நன்கு கவனிப்பதுதான். போலியான மால்வேர்கள் என்பதால் எப்படியும் நேரடியாக யூடியூபிலிருந்தோ, ஃபேஸ்புக்கிலிருந்தோ உங்களுக்கு அனுப்பப்படாது. யூடியூப் போன்றே தோற்றத்தில் போலியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் லிங்க்குகள்தான் உங்களுக்கு அனுப்பப்படும். உதாரணமாக, Yzulk.zub, Yhjo.tube. இப்படி சந்தேகிக்கும்படியான பெயர்களில்தான் அவை இருக்கும். மேலும், Friend List-லேயே இருந்தாலும் அடிக்கடி நீங்கள் உரையாடாத நண்பர்கள் மூலமாகவும் அனுப்பப்படும். இதையெல்லாம் வைத்தே மால்வேர்களைக் கண்டுபிடித்துவிடலாம். சரி, ஒருவேளை தெரியாமல் க்ளிக் செய்து பாதிக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது?

Facebook Message Reporting
Facebook Message Reporting

முதலில் நீங்கள் செய்யவேண்டியது உங்கள் நண்பர்களுக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தி, நீங்கள் இப்படி பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உங்கள் பெயரில் ஏதேனும் லிங்க் வந்தால் அதை க்ளிக் செய்யவேண்டாம் என்றும் கூறிவிடுங்கள். இதை ஃபேஸ்புக்கிலேயே வெளிப்படையாக போஸ்ட் செய்துவிடலாம். இது பிறரும் உஷாராக உதவும். அடுத்தது, உங்கள் அக்கவுன்ட் பாதுகாப்பு. ஃபேஸ்புக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டு, உங்கள் அக்கவுன்ட்டிலிருந்து நண்பர்களின் டைம்லைனில் போஸ்ட் செய்த அத்தனை போஸ்ட்களையும் டெலிட் செய்துவிடுங்கள். இவற்றையெல்லாம் Activity Log-லேயே பார்க்கமுடியும். தேவையற்ற க்ரூப்களில் சேர்க்கப்பட்டிருந்தாலோ, பேஜ்களை உங்கள் பெயரில் உருவாக்கி வைத்திருந்தாலோ அவற்றையும் டெலிட் செய்துவிடுங்கள். இதுதவிர உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை வைத்து நீங்கள் அனுமதித்த ஃபேஸ்புக் ஆப்களுக்கான அனுமதியை உடனே ரத்து செய்துவிடுங்கள். உதாரணமாக ஃபேஸ்புக் கேம்கள், குவிஸ் விளையாட்டுகள் போன்றவை. இதை Apps and websites பகுதிக்கு சென்று செய்யமுடியும்.

இதற்கடுத்து உங்களின் கணினியும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணினால் ஆன்டி வைரஸ் மூலம் 'Complete Scan' கொடுத்துவிடுங்கள். ஏதேனும் ட்ரோஜன்கள் கணினியில் ஒளிந்திருந்தால் இது கண்டுபிடித்து நீக்கிவிடும். இதேபோல எதிர்காலத்திலும் ஏதேனும் சந்தேகத்துக்குரிய லிங்க் வந்தால், அதை க்ளிக் செய்யாமல் இருப்பதோடு நிற்காமல் ரிப்போர்ட் செய்யவும் மறக்கவேண்டாம். எந்த அக்கவுன்ட்டிலிருந்து மெசேஜ் வருகிறதோ அந்த Chat Box-ன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Something's Wrong என்பதைக் க்ளிக் செய்து ரிப்போர்ட் செய்துவிடலாம். அவ்வளவுதான்.

#DoubtOfCommonman
#DoubtOfCommonman