Published:Updated:

லேப்டாப் வாங்குவதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்! #TechTips

ம.விக்னேஷ்

டெஸ்க்டாப் vs லேப்டாப் எதை வாங்கலாம்னு குழப்பம் இருக்கா? இதை படிங்க பாஸ்!

Laptop
Laptop

ஸ்மார்ட்போன் வந்த பின் கணினி மற்றும் லேப்டாப் தேவை குறைந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனாலும் லேப்டாப் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. காரணம், குழந்தைகளின் பள்ளி புராஜெக்ட் செய்வதற்குக் கூட இப்போதெல்லாம் கணினி தேவைப்படுகிறது. லேப்டாப் வாங்குவதற்கு முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

டெஸ்க்டாப் vs லேப்டாப்

கணினி வாங்கும் அனைவருக்கும் எழும் முதல் சந்தேகம் லேப்டாப் வாங்கலாமா, டெஸ்க்டாப் வாங்கலாமா என்பதுதான். இவ்விஷயத்தில் முதலில் உங்களின் தேவை என்ன என்பதைத் தீர்மானியுங்கள். நீங்கள் கல்லூரியில் தரும் வேலைகளுக்காககோ, அலுவலக விஷயங்களுக்காகவோ வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு லேப்டாப்தான் சிறந்ததாக இருக்கும். அதிகம் பயணம் செய்பவர்கள் அந்த நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற மடிக்கணினி உதவும். மடிக்கணினி பெரும்பாலும் மாணவர்களின் தேவையை உணர்ந்து தயாரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும். இதைத் தவிர்த்து சிறுவர்கள் கணினி பழகுவதற்கும் வீட்டு உபயோகத்துக்கும் கடைகளில் உபயோகப்படுத்தவும் டெஸ்க்டாப்பே சிறந்த தேர்வாகும். வேலைகளை விட்டுத் தள்ளுங்கள்; பாஸ் கேமிங் விளையாட எது சிறந்தது எனக் கேட்டால் டெஸ்க்டாப்பே சிறந்தது. லேப்டாப்பும் கேமிங்குக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை என்றாலும். Accessories அப்கிரேட் செய்வதற்கு, சிறந்த FPS, Processor Performance போன்ற முழுமையான கேமிங் அனுபவத்தைப் பெறுவதற்கு டெஸ்க்டாப்பே சிறந்த தேர்வாகும்.

நமக்கான லேப்டாப்பை முடிவு செய்யும் 3 முக்கியமான விஷயங்களைப் பார்க்கலாம்.

Laptop
Laptop

Processor

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இதைக் கணினியின் இதயம் எனலாம். இதயம் எவ்வாறு ரத்தத்தை உடம்பு முழுவதும் செலுத்துகிறதோ அதுபோல் பிராசஸர் Electric Circuit-ஐ ஆராய்ந்து மென்பொருள்களைச் சரியான சமயங்களில் இயங்க வைக்கிறது. தற்போது உலகளவில் பல பிராசஸர்கள் இருந்தாலும் முன்னணியில் இருப்பது intel பிராசஸர்கள்தான். ஆகையால் கணினி வாங்குவதற்கு முன்பு உங்கள் தேவையை அறிந்து தேர்ந்தெடுங்கள்.

Laptop
Laptop

RAM

Random Access Memory என்பதன் சுருக்கமே RAM. இதில் மொத்தம் இரண்டு வகைகள் உள்ளன. DRAM (Dynamic Random Access Memory) SRAM (Static Random Access Memory). இன்று நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான செல்போன் மற்றும் கணினியில் உபயோகப்படுத்துவது DRAM வகையாகும். ஆனால், SRAM-யை ஒப்பிடுகையில் DRAM-ன் செயல்திறன் குறைவாகும். தகவல்களைச் சேதாரமின்றி ஹார்ட்டிஸ்குக்கு அனுப்பவும், கேம் ஆகிய செயல்திறன் மிக்க விஷயங்கள் இயங்கும்போது கணினியைத் தங்குதடையின்றி செயல்பட வைக்கும். தற்போது வரும் அதிக space கொண்ட கேம்கள் மற்றும் ஃபைல்களை இயக்க வேண்டும் என்றால் அதை அதற்கு ஏற்ற திறன் மிக்க RAM-தான் செய்ய இயலும்.

Hard Disk

கணினியில் தகவல்களைச் சேமித்து வைக்க ஹார்டு டிஸ்க் பயன்படுகிறது. இதன் வேலை RAM தற்காலிகமாகச் சேகரித்து வைக்கும் தகவல்களை நிரந்தரமாகச் சேமித்து வைக்கும். ஆரம்ப காலங்களில் 100GB கொண்ட ஹார்டு டிஸ்கே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 1TB, 2TB ஹார்டு டிஸ்குகள்கூட மிக எளிதாகக் கிடைக்கின்றன. தற்போது இதற்கு மாற்றாக SSD (Solid State Drive) என்ற தகவல் சேமிக்கும் டெக்னாலஜி வந்துள்ளது.

லேப்டாப் வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

அளவு மற்றும் எடை

லேப்டாப்பை பொறுத்தவரை சைஸ் என்பது மிக முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 11.6 இன்ச்சில் ஆரம்பித்து 19 இன்ச் வரை கிடைக்கின்றன. ஆனால், 13.5 இன்ச்சுக்கும் குறைந்த ஸ்கிரீன் கொண்ட லேப்டாப்களில் சிறந்த பிராசஸர்கள் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லேப்டாப் ஸ்கிரீனில்கூட 'டச் ஸ்கிரீன் வசதி' 360 rotatable போன்ற விஷயங்கள் கிடைக்கின்றன. டெஸ்க்டாப்பில் Graphics card அப்கிரேட் செய்தால் சிறந்த Resolution கிடைக்கும். ஆனால், லேப்டாப்பில் அப்கிரேட் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். கேமிங்காக லேப்டாப் வாங்குபவர்கள் 15 இன்ச்சுக்கும் மேல் உள்ள லேப்டாப்பை தேர்ந்தெடுப்பது சிறந்தது. பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு எடையைக் கருத்தில் கொள்ளாததுதான். பயணங்களில் தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் நிச்சயம் லேப்டாப்பின் எடையே பெரிய தொந்தரவாக மாறிவிடும். ஆகையால், எடையையும் ஆராய்ந்து வாங்கவும்.

சாம்சங் ப்ராஸசர், சூப்பர் ஆக்‌ஷன் கேமரா… மோட்டோவை உயிர்ப்பிக்குமா புதிய ஒன் ஆக்‌ஷன்?

பேட்டரி

லேப்டாப்பில் இருக்கும் சிறப்பம்சமே அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் மின்சாரம் இல்லை என்றாலும் உபயோகப்படுத்தலாம் என்பதுதான். பேட்டரிகள் பெரும்பாலும் நிக்கல் காடியம் (NICD), நிக்கல் மெட்டல் (NIMH) போன்றவற்றில் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும்விட லித்தியம் இயான் (Li-ion) பேட்டரியே சிறந்தாகக் கருதப்படுகிறது. இதையும் தாண்டி தற்போது லேப்டாப்பிலும் Fast charging வசதி கிடைக்கிறது.