Published:Updated:

`SMS-ல் ட்விட்டர், பிரிட்ஜிஃபையில் மெசேஜ்’- இணைய முடக்கத்தை எதிர்கொள்ளும் போராட்டக்காரர்கள்!

போராட்டத்துக்கு இணையம் ஒரு தடையாகுமா? இந்த ஆப் இணையம் இல்லாமல் வேலைசெய்யும்!

Bridgefy App
Bridgefy App

Article 370 நீக்கம், குடியுரிமைச் சட்ட திருத்தம் என மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வரிசையாகச் செயல்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக வரும் வாதங்களையும் போராட்டங்களையும் கட்டுப்படுத்த ஆயுதம் ஒன்றைக் கையில் எடுக்கிறது இந்த அரசு. அதுதான் இணைய முடக்கம்.

இன்டர்நெட் இல்லாமல் வேலைசெய்யும் பிரிட்ஜிஃபை ஆப்
இன்டர்நெட் இல்லாமல் வேலைசெய்யும் பிரிட்ஜிஃபை ஆப்

இப்படியான நேரங்களில் கைகொடுக்க இணையம் இல்லாமல் இயங்கும் சில ஆப்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பிரிட்ஜிஃபை (Bridgefy) ஆப். இந்த ஆப் தொடர்புக்கு இணையத்துக்குப் பதிலாக ப்ளூடூத்தைப் பயன்படுத்தும். இதை ப்ளூடூத் மூலம் இயங்கும் வாட்ஸ்அப் என்றே சொல்லலாம். இதன்மூலம் செய்திகள், லொக்கேஷன் என கிட்டத்தட்ட அதில் அனுப்பும் அனைத்தையுமே அனுப்பமுடியும்.

இதில் மொத்தம் மூன்று மோடுகள் உண்டு. ஒன்று `One to One', இதில் ப்ளூடூத் மூலம் 100 மீட்டருக்குள் இருக்கும் மற்றொருவருடன் தொடர்புகொள்ளமுடியும். மற்றொன்று `One to One long distance', இதில் 100 மீட்டருக்கு மேல் இருக்கும் ஒருவரை உங்களால் தொடர்புகொள்ள முடியும். உங்கள் அருகில் இருக்கும் பிரிட்ஜ்ஃபை ஆப் கொண்ட மற்ற மொபைல்களின் வழியாக உங்கள் செய்தி அவரைச் சென்றடையும். அதாவது உங்கள் செய்தியை ஒவ்வொருவராக பாஸ் செய்து நீங்கள் அனுப்பிய நபருக்கு அதைக் கொண்டு சேர்க்கும்.

Bridgefy Working
Bridgefy Working

கடைசியாக `Broadcast' என்ற ஒரு மோடு இருக்கும். இதன்மூலம் ஒரு செய்தியை உங்கள் தொடர்பு வட்டத்துக்குள் இருக்கும் அனைவருக்கும் அனுப்பும், Contact-ல் இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் பார்க்காது. இவை அனைத்துமே போராட்டக்களத்தில் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இப்போது டிரெண்டாகி வருகிறது இந்த ஆப். ஹாங்காங் போராட்டக்களத்தில் இதைதான் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

`120 நாள்களாக இன்டர்நெட் சேவை இல்லை!' - வாட்ஸ்அப் கணக்கை இழக்கும் காஷ்மீர் மக்கள்

போராட்டம் என்று வந்துவிட்டால், இன்டர்நெட் இருக்காது என்பது ஹாங்காங் மக்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டில், இதேபோல மக்கள் போராடும்போது இதேபோன்ற கெடுபிடிகள் இருந்தன. அப்போதும் மக்களுக்கு FireChat என்ற ஆப்தான் உதவிக்கு வந்தது. தைவான், இரான் மற்றும் இராக் போன்ற இடங்களில் நடந்த போராட்டங்களிலும் இப்படியான ஆப்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

Twitter| ட்விட்டர்
Twitter| ட்விட்டர்
Pinterest

இணையம் இல்லாமல் ட்விட்டர்!

இதுமட்டுமல்லாமல் இணையம் இல்லாமல் ட்விட்டரில் உங்கள் கருத்தைப் பதிவுசெய்யவும் ஒரு வழி இருக்கிறது. உங்களது ட்விட்டர் கணக்கை எந்த மொபைல் எண்ணிலிருந்து பதிவு செய்திருக்கிறீர்களோ அதிலிருந்து குறிப்பிட்ட எண்ணுக்கு(9248948837) நீங்கள் பதிவிடவேண்டிய ட்வீட்டை SMS அனுப்பினால் உங்கள் ட்வீட் பதிவாகிவிடும். இதுமட்டுமல்லாமல் ட்விட்டரின் பிற அம்சங்களையும் இதன் வழியே உங்களால் செய்ய முடியும்.

தற்போது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இந்தச் செயலியை பயன்படுத்த போராட்டக்காரர்கள் யோசனை வழங்கியுள்ளனர். ஒருவேளை அந்தப் பகுதியில் இணையம் முடக்கப்பட்டால் இந்தச் செயலி மூலம் செய்திகள் பரப்பப்படும் என சில முகநூல் பதிவுகள் காணமுடிகிறது.