Published:Updated:

லேப்டாப் ஏரியாவிலும் ஷாவ்மி... எப்படி இருக்கின்றன `Mi Notebook 14' லேப்டாப்கள்? #FirstImpressions

Xiaomi Mi Notebook 14 Horizon Edition
Xiaomi Mi Notebook 14 Horizon Edition

கொடுக்கும் விலைக்கேற்ற வசதிகளுடன் வெளிவந்திருக்கின்றனவா இந்தியாவின் முதல் Mi Notebook 14 மாடல் லேப்டாப்கள்... விரிவாக இந்தக் கட்டுரையில் அலசுவோம்.

இந்தியாவில் பட்ஜெட், மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஷாவ்மி நிறுவனம் ஸ்மார்ட் டிவி, சவுண்ட்பார் என ஒவ்வொரு வருடமும் புதுப்புது ஏரியாக்களில் கால்பதித்துவருகிறது. அந்த வரிசையில் சில நாள்களுக்கு முன் இந்தியாவில் தனது முதல் லேப்டாப் மாடல்களையும் அறிமுகப்படுத்தியிருந்தது அந்த நிறுவனம். Mi Notebook 14 மற்றும் Mi Notebook 14 Horizon edition என்று இரண்டு மாடல்கள் வரும் ஜூன் 17-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றன.

இந்த லேப்டாப்களில் என்ன ஸ்பெஷல்?

Xiaomi Mi Notebook 14
Horizon Edition
Xiaomi Mi Notebook 14 Horizon Edition
Xiaomi Mi Notebook 14 Horizon Edition

முதலில் `Mi Notebook 14 Horizon Edition' பற்றிப் பார்ப்போம். இது இந்தியாவுக்கு என்றில்லை, உலகுக்கே புதிய மாடல்தான். சீனாவில்கூட இது இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இதன் ஃபுல் மெட்டல் ஃபினிஷ், பார்த்ததும் நம்மைக் கவர்கிறது. A5052 என்று ஒரு வகை magnesium-alluminium alloy பயன்படுத்தியிருப்பதால், மிகவும் வலிமையாகவும் அதே சமயம் எடை குறைவாகவும் இந்த லேப்டாப் இருக்கும் என்கிறது ஷாவ்மி. இதன் எடை வெறும் 1.35 கிலோதான். இதனால் இதை எங்கும் எளிதாக எடுத்துச்செல்ல முடியும், சிரமங்கள் எதுவும் இருக்காது என நம்பலாம்.

14 inch Full HD Anti-glare LCD டிஸ்ப்ளேவுடன் (1920×1080) வெளிவருகிறது இந்த `Mi Notebook 14 Horizon Edition'. பெஸல்ஸ் மிகவும் சிறியதாக இருப்பதால் (3 mm) லேப்டாப் அளவில் சிறியதாக இருந்தாலும் டிஸ்ப்ளே பெரிதாக இருக்கிறது. அதாவது Screen to body ratio என்பது 91 சதவிகிதமாக இருக்கிறது. இப்படி டிஸ்ப்ளேவை பெரிதாக்கியதால் இதில் இன்பில்ட் கேமரா கிடையாது. தேவையென்றால் பொருத்திக்கொள்ளத் தனியாக ஒரு வெப் கேமரா கொடுத்திருக்கிறார்கள்.

Mi Notebook 14 keyboard
Mi Notebook 14 keyboard

ஆப்பிள் மேக்புக் லேப்டாப்களில் இருக்கும் கீபோர்டை நினைவுபடுத்துகிறது இதன் கீபோர்டு. குட்டி ட்ராக்-பேடும் (11 cm) கீழே இருக்கிறது. எடையும் சரிசமமாகப் பரவியிருப்பதால், மேக்புக்கை போல், ஒற்றை விரலாலே லேப்டாப்பை திறக்கவும் மூடவும் முடியும். லேப்டாப்பின் அடியில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. DTS ஆடியோவுடன் இது வருகிறது. ஆனால், லேப்டாப்பின் அடியில்தான் ஸ்பீக்கர்கள் இருக்கின்றன என்பதால் ஆடியோ தரம் அவ்வளவு சிறப்பாக இருக்குமா எனத் தெரியவில்லை.

இரண்டு USB 3.1 போர்ட்கள், ஒரு USB 2.0 போர்ட், ஒரு HDMI போர்ட் மற்றும் ஒரு 3.5 mm ஆடியோ போர்ட்டும் இதில் இருக்கின்றன. உயர்ரக வேரியன்ட்டில் ஒரு USB-C போர்ட்டும் உண்டு. பேட்டரியைப் பொறுத்தவரையில் அதிக திறன் கொண்ட 46 wh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 10 மணிநேரங்கள் வரை ஒரு சார்ஜில் தாக்குப்பிடிக்கும் எனத் தெரிவித்திருக்கிறது ஷாவ்மி. உடன் வரும் 65 W சார்ஜர் மூலம் அரைமணி நேரத்தில் 50% சார்ஜ் வரை ஏறிவிடவும் செய்கிறது.

Mi Notebook 14 ports
Mi Notebook 14 ports

கடைசியாக பர்ஃபாமன்ஸுக்கு வருவோம். 10-ம் தலைமுறை இன்டெல் சிப்செட் (4.9 ghz Clockspeed வரை) கொண்டுள்ளது Mi Notebook 14 Horizon Edition. i5 மற்றும் i7 ஆகிய இரண்டு வேரியன்ட்களும் இது கிடைக்கும். 8 GB DDR4 RAM கொடுக்கப்பட்டிருக்கிறது. மெமரியில் 512 GB SSD (PCI Express Gen 3 NVMe), 512 GB SSD(SATA 3) என இரண்டு வேரியன்ட்கள் உள்ளன. கிராபிக்ஸ் கார்டை பொறுத்தவரை Nvidia GeForce MX350 (2GB) கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேமிங் லேப்டாப் இல்லையென்றாலும் ஓரளவு ஹை-கிராபிக்ஸ் கேம்களையும் சமாளித்துவிடக்கூடிய அளவில்தான் இதன் பர்ஃபாமன்ஸ் இருக்கும். அன்றாடப் பணிகளுக்கு எந்தத் தொய்வும் இல்லாமல் இருக்கும் என நம்பலாம். சிறப்பு கூலிங் மெக்கானிஸமும் இதில் இருக்கிறது.

Mi Notebook 14
Normal Edition

சீனாவில் `RedmiBook 14 Pro' என்ற பெயரில் சில மாதங்களாக விற்பனையாகி வரும் லேப்டாப்தான் இந்தியாவில் `Mi Notebook 14' மாடலாக வெளியாகியிருக்கிறது. Horizon edition மாடலுடன் ஒப்பிட்டால் டிசைன், ஸ்பெக்ஸ் என இரண்டிலுமே சில மாறுதல்கள் இருக்கின்றன.

முதல் முக்கிய வித்தியாசம் டிஸ்ப்ளே பெஸல்ஸ். இது Mi Notebook 14-ல் சற்றே பெரியதாகத் தடிமனாக இருக்கின்றன. இதனால் இதன் Screen to body ratio குறைவுதான் (81.2 %). இதிலும் அதே 14-inch Full-HD (1920 x 1080) டிஸ்ப்ளேதான். USB-C போர்ட் கிடையாது.

Mi Notebook 14
Mi Notebook 14

பேட்டரி, சார்ஜர் எல்லாமே Horizon edition-ல் இருப்பதுதான். அதே 8 GB DDR4 RAM தான். கிராபிக்ஸ் பொறுத்தவரை பேசிக் வேரியன்ட்டில் Intel UHD Graphics 620 கொடுத்திருக்கிறார்கள். வேண்டுமானால் NVIDIA GeForce MX250 கிராபிக்ஸ் கார்டு இருக்கும் மாடலை வாங்கிக்கொள்ளலாம். மற்றபடி ஸ்பெக்ஸ் அளவில் இந்த இரு மாடல்களும் இருக்கும் வித்தியாசங்களை கீழே காணலாம்.

Mi Notebook 14 Horizon Edition / Mi Notebook 14 Features
Mi Notebook 14 Horizon Edition / Mi Notebook 14 Features
ஒன்ப்ளஸ், ஆப்பிள் கில்லாவில் களமிறங்கும் ஷாவ்மி... Mi 10 திட்டம் கைகொடுக்குமா?
விலை
Mi Notebook 14 மாடலின் விலை 41,999 ரூபாயில் தொடங்குகிறது. Mi Notebook 14 Horizon edition விலை 54,999 ரூபாயில் தொடங்குகிறது. இந்த அறிமுக விலை ஜூலை 16 வரை இருக்கும்.

இந்த விலைக்கு இந்த லேப்டாப்கள் வொர்த்தா, ப்ளஸ் மைனஸ் என்ன?

Horizon edition மாடலின் முக்கிய ப்ளஸ் அதன் டிசைன்தான். பெரிய டிஸ்ப்ளே என்றாலும் அளவில் காம்பெக்ட்டாக, எங்கும் எடுத்துச் செல்லும் அளவில் இருக்கிறது. மெட்டல் பில்ட் என்பதால் பார்ப்பதற்கும் ப்ரீமியமாக இருக்கிறது.

கேஷுவல் கேமிங் மற்றும் அன்றாட பணிகளுக்குப் பக்கா பர்ஃபார்மன்ஸ் இவற்றில் இருக்கும் என நம்பலாம். முக்கியமாக Horizon edition-ல். சாதாரண Mi Notebook 14 மாடலிலும் பெரிய அளவில் பர்ஃபாமன்ஸ் சிக்கல்கள் இருக்காது.

பேட்டரியும் தற்போது இந்த விலையில் கிடைக்கும் லேப்டாப்களைவிட நன்றாகவே இருக்கிறது. ஆனால், இந்த விலைக்கு USB-C சார்ஜிங் சப்போர்ட் கொடுத்திருக்கலாம். அது இன்னும் கூட இதைச் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும் லேப்டாப்பாக ஆக்கியிருக்கும். i7 சிப்செட் பயன்படுத்தும் உயர்ரக வேரியன்ட்டில் மட்டும் USB-C போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால், அதிலும் USB-C சார்ஜிங் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

`MI என்றதும் இதிலும் விளம்பரம் வருமா?' என்ற சந்தேகம் சிலருக்கு வந்திருக்கலாம். இவை Windows 10 Home ஓ.எஸ்ஸுடன் வருகின்றன. Blaze Unlock என்ற ஒரே ஒரு ஆப் தவிர வேறு எதுவும் தேவையில்லாமல் கொடுக்கவில்லை ஷாவ்மி. அதுவும் உங்கள் ஸ்மார்ட் பேண்ட் வைத்து லேப்டாப்பை அன்லாக் செய்யும் வசதிக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்தான். மற்றபடி MI போன்களைப் போல விளம்பரங்களோ, பிற தொந்தரவுகளோ கிடையாது.

கீபோர்டு
கீபோர்டு

இந்த மாடல்களில் கீ-போர்டுகளுக்கு backlight வசதி கொடுக்கப்படாதது முக்கிய மைனஸான சொல்லலாம். இந்த விலையில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் டைப் செய்ய கீபோர்டுகளில் இன்-பில்ட்டாக backlight கூட கொடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதில் இருக்கும் 8 GB RAM உடன் கூடுதலாக RAM எதுவும் சேர்த்துக்கொள்ள முடியாது. அதற்கான வசதி இந்த மாடல்களில் இல்லை. வீடியோ எடிட்டிங் போன்ற பணிகளைச் செய்யும் சிலர் இந்தசிவராஜ்4 காரணத்திற்காகவே இந்த லேப்டாப்களை டிக் அடிக்காமல் போகலாம். ஸ்டோரேஜூம் 256GB / 512GB என்ற இரண்டே வேரியன்ட்களில்தான் வருகிறது.

வெப் கேமரா
வெப் கேமரா

இன்-பில்ட் வெப் கேமரா இல்லாதது இன்னொரு மைனஸ். வடிவமைப்பின் போது `இப்போதெல்லாம் யாருக்கும் லேப்டாப் கேமரா தேவைப்படவில்லை' என நினைத்து அதை ஷாவ்மி நீக்கியிருக்கிறது. ஆனால், கொரோனா இந்த நிலையை அப்படியே தலைகீழாகத் திருப்பி போட்டிருக்கிறது. பெருமளவில் வீடியோ மீட்டிங்கள் நடக்கும் இன்றைய சூழலில் இன்-பீல்ட் வெப்-கேமரா இல்லாதது பலருக்கும் ஏமாற்றத்தைத் தரும். தனியாக வெப் கேமரா ஒன்று கொடுக்கிறார்கள்தான். ஆனால், அதை எப்போதும் லேப்டாப்புடன் எடுத்துச் செல்வது பலருக்கும் சவுகரியமாக இருக்காது.

மற்றபடி கொடுக்கும் விலைக்கு நிறைவான வசதிகளுடனே வெளிவந்திருக்கின்றன இந்தியாவின் முதல் Mi Notebook மாடல்கள். ஸ்மார்ட்போன், டிவி போல இந்த லேப்டாப் பிரிவிலும் ஷாவ்மிக்கு வரவேற்பு அளிப்பார்களா இந்தியர்கள் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், அதைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த மாடல்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

இந்த புதிய Mi லேப்டாப்கள் பற்றிய உங்கள் கருத்து என்ன, கமென்ட்களில் பதிவிடுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு