Published:Updated:

Mi TV Stick: அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்குக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷாவ்மி!

Mi TV Stick

ஆண்ட்ராய்டு டிவி அனுபவமும், கூகுள் பிளே ஸ்டோர் ஆப்ஸும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கைவிட Mi TV Stick-ஐ நல்லதொரு சாய்ஸ் ஆக்குகிறது.

Mi TV Stick: அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்குக்கு போட்டியாகக் களமிறங்கும் ஷாவ்மி!

ஆண்ட்ராய்டு டிவி அனுபவமும், கூகுள் பிளே ஸ்டோர் ஆப்ஸும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கைவிட Mi TV Stick-ஐ நல்லதொரு சாய்ஸ் ஆக்குகிறது.

Published:Updated:
Mi TV Stick

ஷாவ்மி நிறுவனம் சமீபத்தில்தான் அதன் Mi Box 4K சாதனத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. எந்த டிவியையும் ஆண்ட்ராய்டு டிவியாக மாற்றும் இந்தச் சாதனம் 3,499 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது. இப்போது இதன் தொடர்ச்சியாகப் புதிய Mi Tv Stick சாதனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மி.

Mi TV Stick
Mi TV Stick

கிட்டத்தட்ட Mi Box 4K-ல் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் இதிலும் இருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ் என முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சப்போர்ட் இதில் கிடைக்கும். அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் சாதனத்தின் நேரடி போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது Mi Tv Stick. ஃபயர் டிவி ஸ்டிக் உடன் போட்டியிட முன்னேறுகிறது. பென்டிரைவ் போல இருக்கும் இது HDMI மூலம் டிவி மற்றும் பிசி டிஸ்ப்ளேக்களில் கனெக்ட் ஆகும். Full-HD சப்போர்ட் (1920 x 1080) சப்போர்ட் இதில் உண்டு. 4K சப்போர்ட் கிடையாது. 4K சப்போர்ட் வேண்டுமானால் Mi Box 4K தான் வாங்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் விலை ரூ.2,799. இது ஆகஸ்ட் 7 முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது. இது Mi.com, Flipkart மற்றும் Mi Home கடைகளில் கிடைக்கும். அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கின் விலை ரூ.2,399 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், Mi TV Stick-ல் இருக்கும் பல ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான சப்போர்ட் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கில் கிடையாது. ஆண்ட்ராய்டு டிவி அனுபவமும், கூகுள் பிளே ஸ்டோர் ஆப்ஸும் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கை விட Mi TV Stick-ஐ நல்லதொரு சாய்ஸ் ஆக்குகிறது.

Quad-core Cortex-A53 புராஸசர் கொண்டுள்ளது Mi TV Stick. இத்துடன் ARM Mali-450 GPU-வும் இருக்கிறது. 1GB RAM மற்றும் 8GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Wi-Fi, ப்ளூடூத் v4.2 சப்போர்ட்டும் உண்டு. இத்துடன் Mi டிவிகளுடன் வரும் அதே ரிமோட்டும் கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு TV 9.0 இயங்குதளத்தில் இது இயங்கும். VP9-10, H.265, H.264, VC-1, MPEG1/2/4, Real8/9/10 ஆகிய வீடியோ CODEC-களுக்கும் Dolby மற்றும் DTS ஆடியோவுக்கும் சப்போர்ட் இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism