Published:Updated:

`மேக் புக்கே சொல்றாரு கேளுங்க....!' - ஆப்பிளைக் கலாய்க்கும் மைக்ரோசாப்ட்

தினேஷ் ராமையா

ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பு லேப்டாப்புகளைக் கலாய்க்கும் விதமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய லேப்டாப் விளம்பரம் அமைந்திருக்கிறது.

Microsoft Ad
Microsoft Ad ( Microsoft Surface YouTube )

டெக் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல, தங்களின் விளம்பரங்களில் மற்ற நிறுவனங்களை கலாய்ப்பது ஒன்றும் புதிதல்ல. அந்தவரிசையில் இணைந்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் தயாரிப்பான சர்ஃபேஸ் லேப்டாப்புகளுக்கான விளம்பரம் ஒன்றை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.

அதில், ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான மேக் புக் லேப்டாப்புகளைக் கலாய்க்கும் விதமாகக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த விளம்பரத்தில் தொடக்கத்தில் மேக் புக் என்று ஒருவர், தனது பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவரது முழுப் பெயர் மெக்கன்சி புக் எனப் பின்னணியில் ஒரு குரல் ஒலிக்கிறது. ஆப்பிளின் மேக் புக் லேப்டாப்பை விட மைக்ரோசாப்டின் சர்ஃபேஸ் லேப்டாப் பல்வேறு வகைகளில் சிறந்தது என மெக்கன்சி சொல்வது போல் அந்த விளம்பரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

Microsoft Ad
Microsoft Ad
Microsoft Surface YouTube

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன லேப்டாப்புகள் திரையில் இருக்கையில் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு இவற்றில் சிறந்தது எது என்ற கேள்வி அவரிடம் கேட்கப்படவே, அந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார். இந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்பிளை சீண்டும் வகையில் அமைந்திருக்கும் இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.