Published:Updated:

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

கேம்பஸ் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
கேம்பஸ் ரிப்போர்ட்

- ந. ஹர்ஷினி நடராஜன்

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

- ந. ஹர்ஷினி நடராஜன்

Published:Updated:
கேம்பஸ் ரிப்போர்ட்
பிரீமியம் ஸ்டோரி
கேம்பஸ் ரிப்போர்ட்

`எப்பப் பார்த்தாலும் மொபைலும் கையுமா'ங்கிற அர்ச்சனையைக் கேட்காத காலேஜ் ஸ்டூடன்ட்ஸே இருக்க முடியாது. அதுலயும் இப்போ, `அம்மா ஆன்லைன் கிளாஸ்ம்மா...'னு சொல்லி அலும்பு பண்றாங்க. சரி, கேர்ள்ஸ் அண்டு கைஸுக்குப் பிடிச்ச மொபைல் பிராண்டுகள் / மாடல்கள் என்னென்ன? வாங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

ரெட்மி/ஷாவ்மி (Redmi Xiaomi)

பட்ஜெட்தான் ரெட்மியோட பிளே கிரவுண்டு. மிட்ரேஞ்ஜ் மாடல்கள்ல இருக்க வசதிகளை, பட்ஜெட் போன்லயும், ப்ரீமியம் மாடல்கள்ல இருக்க வசதிகளை மிட்ரேஞ்ஜ் போன்கள்லயும் வெச்சு பக்கா காம்போவா டெலிவரி பண்றதுதான் ரெட்மியோட ஸ்பெஷல். ஒவ்வொரு சீரிஸ்லயும் அடுத்தடுத்த மாடல்கள்ல அப்டேட்டடா ஏதாச்சும் ஒண்ண சேர்த்துடுவாங்க. `இப்ப இருக்க ரெட்மி மாடல்கள்ல எதுக்கு உங்க ஓட்டு?'ன்னு கேட்டோம். `ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்'க்குதான்னு கையத் தூக்கினாங்க அஞ்சு கேர்ள்ஸ். அதோட ஆரம்ப விலை ₹14,999/-

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

ஒன்ப்ளஸ் (OnePlus)

`பத்து பேர் அடிச்சு அவன் டான் ஆகல; அவன் அடிச்ச பத்து பேருமே டான்'றது ராக்கி பாய்க்கு மட்டுமல்ல; ஒன்ப்ளஸுக்கும் பொருந்தும். ப்ரீமியம் மொபைல் மார்க்கெட்ல ஜம்முனு வாழ்ந்திட்டிருந்த பல பிராண்டுகளுக்கு அப்படித்தான் ஷாக் கொடுத்தது ஒன்ப்ளஸ். `ப்ரீமியம் போன்ல இருக்க எல்லாமே இதுல இருக்கு சார். ஆனா, விலை கம்மி'னு பிதாமகன் சூர்யா மாதிரி பேசிட்டிருந்தவங்க, இப்ப 50K விலையையே தாண்டிட்டாங்க. கேட்டா, `இப்ப நாங்களே ப்ரீமியம் போன்தான்'னு சொல்றாங்க. ஆனா, சும்மா சொல்லக் கூடாது; விலைக்கேத்த மாதிரியே டிஸ்ப்ளே, கேமரா, பர்ஃபாமன்ஸ்னு எல்லாத்துலயும் கில்லின்றதால ஒன்ப்ளஸுக்கு இன்னமும் ஹார்ட்டின்கள் பறக்குது. இப்போ இதுல ஃபேவரைட் `ஒன்ப்ளஸ் 8 ப்ரோ'தானாம். விலை ₹59,999/-

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

ஆப்பிள் (Apple)

`விலை மட்டும்தாங்க ஓவர்; மத்தபடி ஐ லவ் யூங்க!' என்பதுதான் ஆப்பிள் ரசிகர்களின் ஆண்டாண்டுக்கால ஸ்டேட்மென்ட். பிரைவசிக்கான முக்கியத்துவம், எப்போதும் டெக்னாலஜி விஷயத்தில் மற்ற பிராண்டுகளுக்கு முன்னோடியாக இருப்பது, யாரும் கிட்டவே நெருங்க முடியாத குவாலிட்டி என ஆப்பிளை ரசிக்க ஏகப்பட்ட காரணங்கள் சொல்கிறார்கள். முக்கியமாக ஐபோன் வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிளாகவே கருதப்படுவதால் இதன் மவுசு குறைவதே இல்லை. ஐபோன் விலை மட்டுமல்ல; அதற்கான ஆக்ஸசரீஸ்களின் விலையும் ரொம்பவே அதிகம் என்பதால் கொஞ்சம் யோசித்துப் பார்த்து டிக் அடிக்கலாம். இதுல எது கேர்ள்ஸ் ஃபேவரைட் எனக் கேட்டால், `ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்'தான்; `இப்ப எங்ககிட்ட இல்ல; ஆனா, கண்டிப்பா ஒரு நாள் வாங்கிடுவோம்ல?' என்கிறார்கள். விலை ₹1,29,900

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

ஓப்போ

2K கிட்ஸ்கிட்ட அதிகம் பிரபலமா இருக்க பிராண்டுகள்ல ஓப்போவும் ஒண்ணு. விவோ, ஒன்ப்ளஸ் மாதிரியே ஓப்போலயும் கேமரா டிபார்ட்மென்ட் கெத்து. அதோட சேர்த்து டிஸ்ப்ளே, பர்ஃபாமன்ஸ்லயும் ஓப்போ மாடல்களுக்கு நல்ல ஸ்கோர்தான். இதுல `ஓப்போ F19 ப்ரோ'தான் இப்ப எங்க சாய்ஸ்னு சொல்றாங்க கேர்ள்ஸ். விலை ₹24,990/-

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

விவோ (Vivo)

ரெட்மி, ரியல்மீ, ஒன்ப்ளஸ் மாதிரியே அதிகம் பலருக்கும் அதிகம் பிடிச்ச பிராண்டுல ஒண்ணு விவோ. கேமிங், கேமரா, பர்ஃபாமன்ஸ்னு நமக்கு எது முக்கியமோ அதுக்கேத்த மாதிரி ஒரு மாடல் நிச்சயம் விவோ பட்டியல்ல இருக்கு. ஃப்ரன்ட் கேமரால விவோ ஒரு வித்துவான். அதனால நீங்க செல்ஃபி பிரியர்னா விவோ பக்கம் ஒரு கண்ணு வைக்கலாம். இதுல `விவோ V21'தான் எங்க சாய்ஸ்னு நிறைய பேர் சொன்னாங்க. விலை ₹29,999/-

2k kids: மொபைல் எங்க சாய்ஸ்! - கேம்பஸ் ரிப்போர்ட்

சாம்சங் (Samsung)

மொபைல் மார்க்கெட்டின் அண்ணாச்சி சாம்சங்தான். இந்தப் பெயர், டெக்னாலஜிகளோட சேர்த்து இன்னமும் நம்பகமும் நாணயமும் கூடவே இருக்குறதால மட்டுமல்ல; இன்னமும் ஆஃப்லைன் ஸ்டோர்கள்ல ராஜாவா இருக்குறதாலயும்தான். மொபைல் சந்தைல சமீபமா வந்த ரெட்மி, ரியல்மி, விவோ, ஒப்போ, ஒன்ப்ளஸ்னு எல்லாரும் கைவச்சது சாம்சங் மடியிலதான். இதனால கொஞ்சம் பாதிக்கப்பட்டாலும், அப்பப்ப ஏதாச்சும் ஒரு மாடல்ல செமய்யா கம்பேக் கொடுத்துடும் சாம்சங். அப்படி சமீபமா சாம்சங் அடிச்ச சிக்ஸரா `M30'-ஐ கை காட்றாங்க நிறைய பேர். விலை ₹14,999/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism