Published:Updated:

மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

கேட்ஜெட்ஸ் விருதுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ் விருதுகள்

‘உலகமே ஒயர்லெஸ், TWS ஹெட்செட்டுகள் பக்கம் திரும்பிவிட்டது, ஒன்ப்ளஸ்ஸும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதிக விலை காரணமாக அதைப் பலர் பெரிதாக விரும்பவில்லை.

கார் மற்றும் பைக் விருதுகளைத் தேர்ந்தெடுக்க, தேர்வுக் குழுவுக்குத் துணை நின்றதைப் போலவே - கேட்ஜெட்ஸ் விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும் ஆன்லைனில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு உதவிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள். தேர்வுக் குழுவின் முடிவுகளோடு பெருமளவுக்கு இயைந்து வாக்களித்த வாசகர்களான kowshick71@gmail.com மற்றும் ammanaan@gmail.com ஆகி்யோருக்குச் சிறப்புப் பாராட்டுக்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

சிறந்த ஆடியோ கேட்ஜெட் - ஒன்ப்ளஸ் புல்லட்ஸ் Z

‘உலகமே ஒயர்லெஸ், TWS ஹெட்செட்டுகள் பக்கம் திரும்பிவிட்டது, ஒன்ப்ளஸ்ஸும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதிக விலை காரணமாக அதைப் பலர் பெரிதாக விரும்பவில்லை. அப்போதுதான் அதிவேக சார்ஜிங் வசதி, வாட்டர் ப்ரூஃப் என பக்கா செட்டிங்குடன் 2,000 ரூபாய்க்கு நெக் பேண்ட் மாடலான புல்லட்ஸ் Z-யை வெளியிட்டது ஒன் ப்ளஸ். கிட்டத்தட்ட விலையுர்ந்த அதன் அண்ணன், அக்கா மாடல்களில் இருக்கும் எல்லா வசதிகளையும் இதில் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். எதை கட் செய்தால் விலை குறையும் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ப வெட்டியிருக்கிறார்கள். அது பக்காவாகப் பொருந்தியும் இருக்கிறது. ஒரே விலையில் கூடுதல் பேஸ் மாடல், நார்மல் மாடல் என இருவேறு வேரியன்ட்டுகளை வெளியிட்டு, இரண்டிலும் ஹிட்டும் அடித்திருக்கிறது ஒன்ப்ளஸ். TWS சூழ் உலகில், நம் காதுகளுக்கும் பர்ஸுக்கும் பெரிய தொந்தரவு செய்யாமல் பக்காவாக செட் ஆகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது ஒன்ப்ளஸ் புல்லட்ஸ் Z.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

சிறந்த மிட்ரேஞ்ச் போன் - ஒன்ப்ளஸ் நார்டு

இந்திய மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சந்தை முன்புபோல இல்லை. கூகுள், சாம்சங்... ஏன் ஆப்பிள் கூட கொஞ்சம் கொஞ்சமாகக் கவனத்தை இந்த பக்கம் திருப்பத் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில் ப்ரீமியம் ஏரியாவில் கவனம் செலுத்திவந்த ஒன்ப்ளஸ், ‘எங்க ஏரியா உள்ள வராதே’ என மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் தடம் பதிக்க நினைக்கும் நிறுவனங்களுக்குக் கொடுத்த ரெட் அலெர்ட்தான் ஒன்ப்ளஸ் நார்டு.

எதிலும் டிஸ்டிங்க்ஷன் பெறாது என்றாலும், அனைத்து அம்சங்களிலும் வெரிகுட் சொல்ல வைக்கிறது நார்டு. ஸ்டைலிஷ் டிசைன், தரமான டிஸ்ப்ளே, வெரைட்டியான கேமராக்கள், நல்ல பேட்டரி, ஒன்ப்ளஸ்ஸுக்கேயான ஸ்மூத்தான மென்பொருள் அனுபவம் என 30,000 ரூபாய்க்குள் அல்டிமேட் பேக்கேஜாக மக்களின் அபிமானம் பெற்று வெற்றி பெறுகிறது ஒன்ப்ளஸ் நார்டு.

மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

சிறந்த டிவி - Mi டிவி 4A ஹோரைஸன் எடிஷன்

வந்து சில வருடங்கள்தான் இருக்கும் என்றாலும், முன்னணி நிறுவனங்களையெல்லாம் தாண்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது ஷாவ்மி! குறைந்த விலை தொடங்கி, ஆஃப்டர் சேல்ஸ் வரை அனைத்திலும் கலக்குகிறது ஷாவ்மி. ஏற்கெனவே Mi டிவி 4A வேற லெவல் ஹிட். அதில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் இன்றைய சூழலில் மாற்றங்களும், மெருகேற்றல்களும் மிகவும் அவசியம் எனத் தெரிந்துள்ள ஷாவ்மி, பழைய 4A டிவிக்குப் புது வடிவம் கொடுத்து Mi டிவி 4A ஹோரைஸன் எடிஷனை வெளியிட்டது. இந்த விலையில் இவ்வளவு ஸ்டைலிஷான டிவியா என அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இதுதான் இந்த ஆண்டின் சிறந்த டிவி.

மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

சிறந்த லேப்டாப் - ஹானர் மேஜிக்புக் 15

`வொர்க் ஃப்ரம் ஹோம்’ சூழலில் புதிய லேப்டாப் வாங்கிய பலரின் முதல் சாய்ஸ் இந்த ஹானர் மேஜிக்புக்தான். AMD நிறுவனத்தின் Ryzen 5 Quad Core புராசஸர், DDR4 RAM, பவர் பட்டனில் ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார், பாப்-அப் முறையிலான வெப் கேமரா, பெரிய பெஸல் இல்லாத டிஸ்ப்ளே எனப் பல அட்டகாசமான அம்சங்களுடன் கவனம் ஈர்த்தது ஹானர். டிசைன் மட்டுமல்ல; அலுமினியம் பாடியுடன் பில்டு குவாலிட்டியும் வேற லெவல்தான். இத்தனைக்கும் இதன் எடை 1.5 கிலோ மட்டுமே! விற்பனை என்ற அறிவித்த சில நிமிடங்களிலேயே பலமுறை விற்றும் தீர்ந்துள்ளது இந்த மேஜிக்புக். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மேம்பட்ட வசதிகளான டைப் சி சார்ஜர், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றை லேப்டாப்புக்கு எடுத்து வந்து சராசரி லேப்டாப்புக்குப் புது வடிவம் தந்திருக்கிறது ஹானர்.

மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

சிறந்த டேப்லெட் - ஆப்பிள் ஐபேட் ஏர் (2020)

சிறந்த டேப்லெட் வேண்டும் என்கிறவர்களின் முதல் சாய்ஸ் ஆப்பிள் ஐபேடுகள்தான். பொழுதுபோக்கு அம்சங்களுக்காக டேப்லெட் வாங்க நினைப்பவர்கள், பேஸிக் வெர்ஷனோடு ஒதுங்கிக் கொள்வார்கள். ஹெவி பெர்ஃபாமன்ஸை எதிர்பார்ப்பவர்கள் ஐபேட் ப்ரோவுக்கு டிக் அடிப்பார்கள். ஆனால், இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து, எல்லாம் கலந்த ஸ்மார்ட்டான டேப்லெட் வேண்டும் என்பவர்களைக் குறிவைத்து வந்ததுதான் ஐபேட் ஏர் (2020). ஐபேட் ப்ரோவிலிருந்து சில வசதிகளை உருவி, ஐபேட் ஏர் 2020-ல் செருகி இந்த சக்ஸஸ் காம்போவை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள். ஐபேட் ப்ரோவின் ஸ்டைலிஷ் டிசைன், அதைவிட அட்வான்ஸ்டு சிப், ப்ரோவின் ஆக்சஸரீஸ் சப்போர்ட், அதைவிடக் குறைந்த விலை என ஐபேட் ஏர் 2020-ஐ பக்கா பேக்கேஜாக இறக்கியிருக்கிறது ஆப்பிள்.

மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

சிறந்த ஸ்மார்ட்வாட்ச்: - சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3

ஸ்மார்ட்வாட்ச்களின் கோல்டன் ஸ்டாண்டர்டாகப் பார்க்கபடுவது ஆப்பிள் வாட்ச்கள்தான். ஆனால், ஐபோன் இருந்தால் மட்டுமே ஆப்பிள் வாட்ச்சைப் பயன்படுத்த முடியும் என்பதால் பலருக்கும் அது எட்டாக் கனி! ஆண்ட்ராய்டு போன்களுக்கென இருக்கும் பல ஸ்மார்ட்வாட்ச்களும் ஃபிட்னஸ் பேண்ட்களின் நீட்சியாகவே இருக்கின்றன. ‘எங்களுக்கெல்லாம் முழுமையான ஸ்மார்ட்வாட்ச் அனுபவமே கிடைக்காதா’ எனப் புலம்பிக்கொண்டிருந்த ஆண்ட்ராய்டு ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக ‘சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3’-ஐ அறிமுகம் செய்தது சாம்சங். இன்னும் ஸ்டைலிஷாக, பல வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததுடன் ஐபோன் வைத்திருப்பவர்களையும் அதன் பக்கம் ஈர்த்தது சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3. ஸ்மார்ட்வாட்ச்களில் பெரிய மைனஸாக இருக்கும் பேட்டரிதான் இதில் முக்கிய ப்ளஸ் என்பது இதன் கூடுதல் சிறப்பு.

மோட்டார் விகடன் - கேட்ஜெட்ஸ் விருதுகள் 2021

சிறந்த ஃபிட்னெஸ் பேண்ட்:  Mi ஸ்மார்ட் பேண்ட் 5

இந்தியாவில் மிகவும் பாப்புலரான ஷாவ்மி கேட்ஜெட், அதிகம் விற்கும் ஸ்மார்ட்பேண்ட் என ஏகப்பட்ட ஹைலைட்ஸுடன் - இந்த ஆண்டு ‘சிறந்த ஃபிட்னஸ் பேண்ட்’ மோட்டார் விகடன் விருதையும் அள்ளியிருக்கிறது Mi ஸ்மார்ட் பேண்ட் 5. பக்கா பேட்டரி, துல்லியமான இதயத்துடிப்பு டிராக்கிங், கலர்ஃபுல்லான டிஸ்ப்ளே, லைட்வெயிட், பட்ஜெட் விலை என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அத்தனை குட்டிக் குட்டி செக் பாக்ஸிலும் டிக் அடித்து ஹிட் அடித்திருக்கிறது Mi ஸ்மார்ட் பேண்ட் 5. முந்தைய மாடல்களில் ஒரு சின்னப் பிரச்னையாக இருந்த சார்ஜ் செய்யும் முறையும் இதில் சரி செய்யப்பட்டிருப்பது கூடுதல் ப்ளஸ். ஃபிட்ெனஸ் ஏரியாவில் காலடி வைக்க நினைக்கும் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய கேட்ஜெட்.