Published:Updated:

'புதிய எமோஜிகள்; டீப் ஃப்யூசன் போட்டோகிராபி; 24,900 ரூபாய் ஹெட்போன்ஸ்' - இது ஆப்பிள் அப்டேட்ஸ்

ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 13.2-வில் என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ | Apple Airpods Pro
ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ | Apple Airpods Pro

ஆப்பிளின் ஐபோன் 11 சீரிஸை செப்டம்பர் மாதம் 20-ம் தேதி அறிமுகப்படுத்தியிருந்தது. முதலில் கேமரா வைக்கப்பட்டிருக்கும் விதத்துக்காகக் கலாய்க்கப்பட்டாலும் விற்பனையில் சாதித்துக்காட்டியது இந்த ஐபோன் 11 சீரிஸ். இந்த ஐபோன் வெளியாகும்போதே புதிய ஐஓஎஸ் 13 இயங்குதளத்துடன் வெளிவந்தது. ஆனால், இதில் சில சிறிய கோளாறுகள் இருப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

டீப் ஃப்யூசன் போட்டோகிராபி
டீப் ஃப்யூசன் போட்டோகிராபி
Apple

இந்நிலையில் இந்தக் குறைகளைச் சரி செய்யும் வண்ணம் இதன் அடுத்த அப்டேட்டாக ஐஓஎஸ் 13.2-வை வெளியிட்டுள்ளது ஆப்பிள். இந்த அப்டேட்டில் புதிய அம்சமாக "டீப் ஃப்யூசன் போட்டோகிராபி" (Deep Fusion Photography) என்னும் வசதி உள்ளது. இதை ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்தப் புதிய அம்சமானது கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் மொபைல்களில் பயன்படுத்தும் இமேஜ் பிராசஸிங் முறைக்குப் போட்டியாக அமையும். ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை துணைத் தலைவர் பில் ஸ்கில்லர் கூறுகையில், "இந்த டீப் ஃப்யூசன் போட்டோகிராபி 'Computational Photography Mod Science' என்னும் தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. இதில் எடுக்கப்படும் படங்கள் நிஜத்தில் பார்ப்பதைப் போன்று துல்லியமாக நல்ல தரத்தில் இருக்கும்" என்றார். இந்தப் புதிய வசதி குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்களை மேலும் சிறப்பாக எடுக்க உதவும்.

புதிய எமோஜிகள்
புதிய எமோஜிகள்
Emojipedia
மாற்றியமைக்கப்பட்ட எமோஜிகள்
மாற்றியமைக்கப்பட்ட எமோஜிகள்
Emojipedia
`இறங்கி அடித்திருக்கும் ஆப்பிள்!' புதிய யுக்தி கைகொடுக்குமா? #AppleEvent

இதுமட்டுமல்லாமல் இந்த ஐஓஸ் 13.2-ல் புதியதாக 70 எமோஜிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஏற்கெனவே இருந்த உணவுகள், விலங்குகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜிகளில் கூடுதலாகச் சில சேர்க்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஆப்பிளின் ஏர்பாட்ஸ் ப்ரோ இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாய்ஸ் கான்சலேஷன் வசதியுடன் வரும் இது முந்தைய ஏர்பாட்ஸைவிட மேம்பட்டதாக இருக்குமாம். இது இந்தியாவில் 24,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். இதை iOS 13.2 , iPadOS 13.2 , WatchOS 6.1, TvOS 13.2, MacOS Catalina 10.15.1 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனுடன் வரும் Announce Messages என்னும் புதிய வசதி செயற்கை நுண்ணறிவு அசிஸ்டன்ட் சிரி உங்களுடைய மெசேஜ்களை ஏர்பாட்ஸில் வாசிக்கும்.