Published:Updated:

`மீண்டும் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்!’ -எத்தனை வசதிகள்.. என்ன விலை? #Nokia5310

நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் | Nokia 5310 Xpress Music
நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் | Nokia 5310 Xpress Music

இதிலும் பழைய மாடல் போலவே மியூசிக் பட்டன் வலது புறத்தில் இடம்பெற்றிருக்கும். ஸ்மார்ட்போன்களைப் போல சின்ன சிம்கார்டையே(Mini-Sim) புதிய நோக்கியா 5310-வில் பயன்படுத்த முடியும்.

முன்னதொரு காலத்தில் மொபைல் என்றாலே அது நோக்கியாதான் என்ற நிலை இருந்தது. 3310, C2-00 என நோக்கியா பெயர் சொல்லும் மாடல்கள் பல. அப்படியான ஒரு மாடல்தான் நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக். இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும் உங்களில் பலரும் இந்த போனை ஒருமுறையேனும் பயன்படுத்தியிருப்பீர்கள். இந்த மொபைலானது 2007-ல் அறிமுகம் அறிமுகமானது. அப்போது தான் மொபைலில் பாடல்கள் கேட்பதும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது. இதற்கடுத்த ஐந்து ஆண்டுகள் மொபைல் சந்தையில் ராஜாவாக இருந்தது நோக்கியா. அதில் இந்த மாடலும் மிக முக்கிய பங்கு வகித்தது. இப்போது இந்த போன் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்
நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்

வரும் ஜூன் 23, நோக்கியா இணையதளத்திலும், அமேசானிலும் இது விற்பனைக்கு வரும். ஜூலை 22 முதல் கடைகளிலும் இது கிடைக்கத்தொடங்கும் என நோக்கியா தெரிவித்திருக்கிறது. நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்கின் விலை இந்தியாவில் 3,399 ருபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மார்ச் மாதமே இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரவுள்ள நோக்கியா 5310 மாடலானது பழைய மாடலை விட சற்று கனமாகவே இருக்கும். இதுவும் இசைப் பிரியர்களுக்கென எக்ஸ்பிரஸ் மியூசிக் சீரிஸாகவே வருகிறது. இதிலும் பழைய மாடல் போலவே மியூசிக் பட்டன் வலது புறத்தில் இடம்பெற்றிருக்கும். ஸ்மார்ட்போன்களைப் போல சின்ன சிம்கார்டையே (Mini-Sim) புதிய நோக்கியா 5310-வில் பயன்படுத்த முடியும்.

 `ஒரு நாளில் எத்தனை நிமிடங்கள் ஸ்ட்ரீமிங்கில் இந்தியர்கள் செலவு?!'- நோக்கியா சொல்லும் ரிப்போர்ட்

இந்த மொபைல் போன் வயர்லெஸ் FM வசதியுடனும், இரண்டு முன்பக்க ஸ்பீக்கர்களுடனும், ப்ளூடூத் 3.0 வசதியுடனும் வருகிறது. 2.4 இன்ச் QVGA (Quarter Video Graphics Array) டிஸ்ப்ளே, 8 MB RAM,16 MB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாக 32 GB வரை MicroSD மெமரி கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் 1200mAh பேட்டரியில் சிங்கிள் சிம் பயன்பாட்டில் 20 மணி நேரம் வரை அழைப்புகள் பேசலாம். அதே நேரத்தில் டூயல் சிம்முக்கு இந்த டாக்டைம் 7 மணி நேரம் குறைவாக இருக்கும். இது கழட்டக்கூடிய 'removable battery' தான். ஒரு சார்ஜில் (சிங்கிள் சிம் பயன்பாட்டுக்கு) 'Stand by' டைம் ஒரு மாதம் வரை வருமாம். `நோக்கியால இது கூட இல்லைனா எப்படி பாஸ்!'

அடுத்த கட்டுரைக்கு