Published:Updated:

₹10,000 வரை விலை குறைந்த நோக்கியா ஸ்மார்ட்ஃபோன்... அதிரடி ஆஃபர்!

நோக்கியா 6.1 அடிப்படை மாடலின் விலை அறிமுகம் ஆனபோது 16,999 ரூபாய். இப்போது அது, 6,999 ரூபாய்தான்.

நோக்கியா 6.1
நோக்கியா 6.1 ( நோக்கியா )

நோக்கியா மொபைல்களை சந்தையில் பார்ப்பதே இன்று அரிதாகிவிட்டது. ஆனாலும் நோக்கியா ரசிகர்கள் நிறைய பேர் இருக்கத்தான்செய்கிறார்கள். விண்டோஸ் மொபைல்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு , ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் பக்கம் நோக்கியா வந்தபோது, அதிரடியாக பல மொபைல்களை வெளியிட்டது. நோக்கியாவின் விசுவாசமான ரசிகர்கள் அதற்கும் நல்ல வரவேற்பு தந்தார்கள். ஆனால், அதைத் தொடரவில்லை நோக்கியா. இப்போது, தனது ஸ்மார்ட் போன்களின் விலையை 10,000 வரைக்கும் குறைத்து, மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 16 மெகாபிக்ஸல் கேமரா, 8 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா, யு எஸ் பி டைப் ‘சி’, ஆண்ட்ராய்டு பை என எல்லாமே குறிப்பிடத்தக்க வசதிகள்தாம்.

நோக்கியாவின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது நோக்கியா 6.1. 4ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன்630 பிராசஸர், 16 மெகாபிக்ஸல் கேமரா, 8 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா, யு எஸ் பி டைப் `சி’, ஆண்ட்ராய்டு பை என எல்லாமே குறிப்பிடத்தக்க வசதிகள்தாம். விலை மட்டும் 16,999. அப்போது அந்த வசதிகளைக் கொண்ட மொபைல்களை 10,000 முதல் 12,000 ரெட்மி தந்துகொண்டிருந்தது. அதனால் இந்த மாடலுக்கு பெரிய வரவேற்பு இல்லை. நல்ல வசதிகள், சுமாரான ஃபெர்பார்மென்ஸ், ஆனால் விலை அதிகம் என்பதுதான் பிரச்னை. அதைச் சமாளிக்கவோ அல்லது தயாரித்த மொபைல்களை விற்றுத் தீர்க்கவோ இப்போது அதிரடி விலை குறைப்பை நோக்கியா அறிவித்திருக்கிறது.

நோக்கியா 6.1 அடிப்படை மாடலின் விலை அறிமுகம் ஆனபோது 16,999. இப்போது அது வெறும் 6,999. இதன் ஹை எண்ட் மாடலின் விலை இப்போது 9,999. நோக்கியாவின் இணையதளத்தில் இந்தப் புதிய விலை அப்டேட் ஆகிவிட்டது. அமேஸான், ஃப்ளிப்கார்ட்டிலும் இந்த ஆஃபர் உண்டு.

நோக்கியாவுக்கு இந்த முறை என்ன காத்திருக்கிறது எனத் தெரியவில்லை.