Published:Updated:

வயது 100... பிரச்னைகள் 0... சென்னையின் மூத்த தொலைபேசி இதுதான்!

துரை.நாகராஜன்
ராகேஷ் பெ

வீட்டில் செல்போன் சிக்னல்கள் கிடைக்காதபட்சத்தில் இந்த தொலைபேசியில் பேசுவேன். இதிலும் சத்தத்தை குறைக்க சைலண்ட் மோட் வசதியும் இருக்கிறது.

பழைமையான தொலைபேசி
பழைமையான தொலைபேசி

பேசுவதற்காக மட்டுமே கண்டறியப்பட்ட தொலைபேசி இன்று அலைபேசியாக உருமாறி நிற்கின்றன. இன்றைய அவசர யுகத்துக்கு அவை அவசியமும் கூட. ஆனால், இன்றும் தன் தாத்தா வாங்கிய தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங்.

பழைமையான தொலைபேசி பற்றி நம்மிடம் பேசிய ஜஸ்வந்த் சிங், ``இப்போது நானே ஐபோன் 10x மொபைல் வைத்திருக்கிறேன். ஆனால், இந்தத் தொலைபேசியைவிட மனமில்லை. இன்றைய தலைமுறைகளுக்கு இதன் அருமை தெரியாது. அந்தக் காலத்தில் தொலைபேசி இருக்கும் வீட்டுக்கு ராஜ மரியாதை இருக்கும். இப்போதிருக்கும் செல்போன் கதிர்வீச்சுகள் பிரச்னை அப்போது இல்லை. இந்த போனில் ஒரு முனையை மட்டும் காதில் வைத்து போன் பெட்டியில் உள்ள மைக்கில் பேச வேண்டும். எதிர்முனையில் மெல்லிய சத்தம் மட்டுமே கேட்கும். நாம் கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டும்.

இதை என் தாத்தா வாங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்பாவும், நானும் பாதுகாத்து வருகிறோம். என் பிள்ளைகளும் பாதுகாப்பார்கள் என நம்புகிறேன். வீட்டில் செல்போன் சிக்னல்கள் கிடைக்காதபட்சத்தில் இந்தத் தொலைபேசியில் பேசுவேன். இதிலும் சத்தத்தைக் குறைத்து சைலண்ட் மோட் வசதியும் இருக்கிறது" என்றவர், நம்மிடம் போனுக்கு அழைப்பு விடுத்து செயல்படுத்திக் காட்டினார். 100 வருடங்கள் தாண்டியும் இன்னும் அந்த போன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்தபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.