Published:Updated:

``கேமரா... சிப்செட்... ஓஎஸ்... எல்லாவற்றிலும் நம்பர் ஒன்!"

ஒன்ப்ளஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒன்ப்ளஸ்

- `ஒன்ப்ளஸ்’ நவ்னீத் நக்ரா | விஜபி பேட்டி

- `ஒன்ப்ளஸ்’ நவ்னீத் நக்ரா
- `ஒன்ப்ளஸ்’ நவ்னீத் நக்ரா

ஆண்ட்ராய்டு மொபைல்களில் தனக்கென ஒரு தனி மார்க்கெட்டைப் பிடித்து வைத்திருக்கிறது ஒன்ப்ளஸ். பெரிய பட்ஜெட் மொபைல்களால் மட்டுமே சிறப்பானதொரு அனுபவத்தைத் தர முடியும் என்கிற நிலையை முதலில் உடைத்தது ஒன்ப்ளஸ். ஆண்ட்ராய்டு சாஃப்ட்வேரில் ஓர் உன்னத அனுபவத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் சர்ச்சைகளையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. `ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்’ என்பதை அறிய, ஒன்ப்ளஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி நவ்னீத் நக்ராவிடம் உரையாடினேன்.

ஹெட்செட்கள், ஒயர்லெஸ் என்பதைக் கடந்து வெறுமனே TWS (ஒயரே இல்லாத ஹெட்செட்டுகள்) ஆக வேகமாக மாறி வருகிறது. ஒன்ப்ளஸ்ஸின் திட்டங்கள் என்ன ?

கேட்ஜெட்டுகளின் விற்பனையில், இந்தியாவின் முதல் மூன்று இடங்களில் இருக்கிறது ஒன்ப்ளஸ். அதிலும் குறிப்பாக, 2021-ம் ஆண்டின் முதல் காலிறுதியில், அதிகம் விற்கப்பட்ட TWS ஹெட்செட் ஒன்ப்ளஸ் பட்ஸ் Zதான். வாடிக்கையாளர்களுக்குத் தகுந்த விற்பனை விலையில், அடுத்தடுத்து இன்னும் நிறைய TWS ஹெட்செட்டுகளை வெளியிடும் திட்டங்களை வைத்திருக்கிறோம்.

ஆன்லைன் அளவுக்கு, ஆஃப்லைன் மார்க்கெட்டில் இன்னும் ஒன்ப்ளஸ் கால் பதிக்கவில்லையே?

ஆன்லைனில் முதலிடம் பிடிப்பதே எங்கள் தாரக மந்திரமாக இருந்தாலும், ஆஃப்லைன் மார்க்கெட்டிலும் காலூன்ற தொடர்ந்து முயன்று வருகிறோம். இந்தியாவில் 10000 ஸ்டோர்களில் (பார்ட்னர் ஸ்டோர்கள் உட்பட) எங்கள் தயாரிப்புகளை நீங்கள் வாங்க முடியும். தற்போது 80 இடங்களில் ஒன்ப்ளஸ்ஸுக்கென பிரத்யேகமான ஸ்டோர்கள் உண்டு. இந்தாண்டின் இறுதிக்குள் அவற்றை நூற்றுக்கு மேல் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கென 2020-ம் ஆண்டு தனியாக நூறு கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறோம்.

கொரோனா சூழலை எப்படிக் கையாண்டது ஒன்ப்ளஸ்?

சற்றே இது சோதனைக் காலம்தான் என்றாலும், அதைச் சிறப்பாகக் கடந்து வந்திருக்கிறது ஒன்ப்ளஸ். 9 சீரிஸில் நாங்கள் வெளியிட்ட 9 மற்றும் 9PRO மாடல்கள் இரண்டும் வெளியான நாள் முதல் தொடர்ந்து ஆன்லைன் (அமேஸான் தளத்தில்) விற்பனையில் நம்பர் ஒன்னில் இருக்கிறது. ஒன்ப்ளஸ் நார்டு, 8T ஷிப்மென்ட்டுகளின் மூலம் 300% அதிக வளர்ச்சியை எட்டியிருக்கிறோம். 2023-ம் ஆண்டு இறுதியில் 2.5 கோடி நார்டு மொபைல்கள் விற்கத் திட்டம் தீட்டியிருக்கிறோம்.

ஆனாலும், இனி ஒன்ப்ளஸ் மொபல்களில் கலர் OS தலையீடு இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

`வாங்கக் கூடிய விலையில் சமரசமற்ற அனுபவம்’ என்கிற டேக்லைனுடன்தான் நார்டு மொபைல்களை வெளியிட முடிவு செய்தோம். ஒன் ப்ளஸ் மொபைல்களுடன், ஓப்போ மொபைல்களின் அனுபவத்தையும் இணைந்து தர, இதை நாங்கள் செய்ய வேண்டியிருந்தது. கலர் OSயில் இருக்கும் நிறைய features ஒன்ப்ளஸ்ஸின் ஆக்ஸிஜன் OSயில் இருக்காது. எனவேதான், ஒன்ப்ளஸ்ஸில் இருக்கும் அட்டகாசமான OS அனுபவம், கலர் OSயின் features இரண்டையும் ஒன்றிணைக்க முடிவு செய்தோம். கொரோனா சூழலில் இப்படி நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வேலை செய்வது ஒருவகையில் நன்மையாக முடிந்திருக்கிறது. வரும் காலங்களில் எல்லா மொபைல்களுக்கும் ஒரே OS கொண்டுவரும் திட்டமும் வைத்திருக்கிறோம்.

ஸ்பெஷல் எடிஷன் மாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறீர்கள்?. இதற்கான திட்டங்கள் என்னென்ன?

எங்கள் மொபைலுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும், கேமரா பெர்ஃபாமன்ஸில் சற்று எங்களைக் குறைவாகத்தான் மதிப்பீடு செய்து வந்தார்கள். மூன்றாண்டுகளுக்கு ஸ்வீடன் கேமரா நிறுவனமான ஹேஸல்பிளாடுடன் இணைய ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஒன்ப்ளஸ் 9, ஒன்ப்ளஸ் 9 ப்ரோ மாடல்களில் இதை முதன்முதலில் பயன்படுத்தியது பலரின் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது. ஒன்ப்ளஸ் நார்டு 2 மொபைலுக்காக முதல் முறையாக, மீடியாடெக் நிறுவனத்துடன் கைகோர்த்தோம். எங்களுக்கென பிரத்யேகமான Dimensity 1200 AI என்கிற சிப்செட்டை வடிவமைத்துக் கொடுத்திருந்தனர். நார்டு 2 மொபைலில் தற்போது ஆர்கேடு கேம்களின் ராஜாவான பேக்மேனை மையமாக வைத்து, புதியதொரு மாடலை வெளியிட்டிருக்கிறோம்.

இறுதியாக ஒரு கேள்வி, ஒன்ப்ளஸ் 9T மொபைல் வருகிறதா... இல்லையா?

பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு ஏற்றவாறு பல்வேறு மொபைல் மாடல்கள் வெளியிட்டு வருகிறோம். உங்களிடம் மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இந்தாண்டு T மாடல் மொபைல் கிடையாது. யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.

- `ஒன்ப்ளஸ்’
- `ஒன்ப்ளஸ்’
- `ஒன்ப்ளஸ்’
- `ஒன்ப்ளஸ்’