Published:Updated:

விலை குறைந்த 7 ப்ரோ... வாங்கியவர்களுக்குப் பணம் திரும்பத் தரும் ஒன் ப்ளஸ்!

ஒன் ப்ளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மொபைல்களிலேயே அதிக விலைமிக்கது 7 ப்ரோ மாடல்தான். வாடிக்கையாளர்கள் நினைத்ததைவிட அதிக விலை வைத்திருந்தது, ஒன் ப்ளஸ் 7 ப்ரோ.

One plus 7 pro
One plus 7 pro ( One plus )

ஒன் ப்ளஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட மொபைல்களிலேயே அதிக விலைமிக்கது 7 ப்ரோ மாடல்தான். வாடிக்கையாளர்கள் நினைத்ததைவிட அதிக விலை வைத்திருந்தது, ஒன் ப்ளஸ் 7 ப்ரோ. ஆனால், அதே வசதிகள்கொண்ட மற்ற ஸ்மார்ட் போன்களோடு ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு என சமாதானம் ஆனார்கள் ரசிகர்கள். அதனால் விற்பனையும் சக்கைப் போடு போடுகிறது.

One plus 7 pro
One plus 7 pro
One plus

இப்போது, கனடா நாட்டு மொபைல் பயனர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. மொபைல் அறிமுகமானபோது அதன் விலை, 999 கனடியன் டாலர்கள். சென்ற வாரம் இந்த விலையைக் குறைத்து 899 டாலர்கள் என அறிவித்தது, ஒன் ப்ளஸ். இது ஆஃபர் கிடையாது. இனி, ஒன் ப்ளஸ் 7 ப்ரோவின் விலையே இதுதான். ஆச்சர்யம் என்னவென்றால், இதற்குமுன் வாங்கியவர்களுக்கும் அந்த 100 டாலரை ஒன் ப்ளஸ் கிரெடிட் செய்யப்போகிறது என்பதுதான். ரெடிட் தளத்தில் ஒரு பயனர் இது பற்றி இன் ப்ளஸ் தனக்கு அனுப்பிய மின்னஞ்சலைப் பகிர்ந்திருக்கிறார். நீங்களும் கனடாவில் ஒன் ப்ளஸ் வாங்கியிருந்தால், உடனே மெயில் செக் செய்துவிடுங்கள். ஜூலை 15-க்குள் கிரெடிட் ஆகும் என்கிறது ஒன் ப்ளஸ்.

மொபைலின் விலை குறைந்திருப்பது உண்மைதான். ஒன் ப்ளஸ்ஸின் கனடா இணையதளத்தில் இதை உறுதிசெய்யலாம். ஆனால், ஏற்கெனவே மொபைல் வாங்கியவர்களுக்கு 100 டாலர் தருகிறது என்பது பயனர் ஒருவர் சொல்லியிருக்கும் தகவல்தான்.

One plus 7 pro
One plus 7 pro
One plus

இதுபற்றி ஒன் ப்ளஸ் இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை.ஒன் ப்ளஸ் 7 ப்ரோ வெளியாகி ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்போது, இதை நாம் ரிவ்யூ செய்திருந்தோம். இந்த ஒரு மாத பயன்பாட்டிலும் ஒன் ப்ளஸ் அட்டகாசமாகவே இருக்கிறது. எந்தப் பிரச்னையும் இதுவரை வரவில்லை.