`டிஸ்ப்ளே செம, ஆனா கேமரா..?' எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ? #VikatanGadgetReview

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ!
`ஃபிளாக்ஷிப் கில்லர்' என்ற ஸ்டேட்டஸிலிருந்து `பிரீமியம் ஃபிளாக்ஷிப்' ஸ்டேட்டஸுக்கு உயர நினைத்திருக்கும் ஒன்ப்ளஸுக்கு கைகொடுக்குமா இந்த ஒன்ப்ளஸ் 8 ப்ரோ?
அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பல தடங்கல்களுக்குப் பிறகு விற்பனைக்கு வந்துவிட்டன. கடந்த ஏப்ரல் மாதமே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும், இதன் விற்பனை என்பது கொரோனாவால் பல முறை தள்ளிவைக்கப்பட்டது. `McLaren edition' போன்ற லிமிடெட் எடிஷன் போன்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் ஒன்ப்ளஸ். ஆனால், கொரோனா நெருக்கடியால் 8 ப்ரோவே லிமிடெட் எடிஷன் போன் போலத்தான் விற்பனைக்கு வந்திருக்கிறது. சிறப்பு ஃபிளாஷ் சேல்களில்தான் விற்கப்படுகிறது. மொத்தமாக `ஃபிளாக்ஷிப் கில்லர்' என்ற ஸ்டேட்டஸிலிருந்து `பிரீமியம் ஃபிளாக்ஷிப்' ஸ்டேட்டஸுக்கு உயர நினைத்திருக்கும் ஒன்ப்ளஸுக்கு கைகொடுக்குமா இந்த ஒன்ப்ளஸ் 8 ப்ரோ? சுமார் இரண்டு வாரப் பயன்பாட்டுக்குப் பின்னான அனுபவத்தை இங்கு பகிர்கிறோம்.