Published:Updated:

OnePlus: `குறையாத டிமாண்ட்!’ -ஃபிளாஷ் சேலில் மீண்டும் கலக்கிய ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

கடந்த ஆண்டிலிருந்து தங்களது 'ப்ரோ' வெர்ஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ வெளிவந்துள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல இதில் இருக்கும் அம்சங்கள் அனைத்துமே 'ப்ரோ'தான்.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பல தடங்கல்களுக்குப் பிறகு சமீபத்தில் விற்பனைக்கு வந்தன. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்ப்ளஸ் 8 ப்ரோவின் விற்பனைத் தேதி கொரோனாவின் காரணத்தால் பல முறை தள்ளிவைக்கப்பட்டது. இப்போதும் சராசரியை விடக் குறைந்த அளவிலான போன்களையே விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ஒன்ப்ளஸ். முக்கியமாக ஒன்ப்ளஸ் 8 ப்ரோ சிறப்பு ஃபிளாஷ் சேல்களில்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஒன்ப்ளஸ் 8 கூட எப்போதும் போல விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ நிலை மாறவில்லை. கடைசியாக ஜூன் 25 விற்பனை செய்யப்பட்ட ஒன்ப்ளஸ் 8 ப்ரோ அப்படியான ஒரு ஃபிளாஷ் சேலில் இன்றும் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை பற்றிப் பார்ப்பதற்கு முன்பு ஒன்ப்ளஸ் 8 ப்ரோ குறித்து ஒரு சின்ன அறிமுகம் ஒன்றைப் பார்ப்போம்.

ஒன்ப்ளஸ் 8 pro
ஒன்ப்ளஸ் 8 pro

மிட்ரேஞ்ச் ப்ரீமியம் போன்களுக்கு (ரூ.30,000 - 40,000) பெயர்பெற்ற ஒன்ப்ளஸ் நிறுவனம், ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு டஃப் கொடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டிலிருந்து தங்களது 'ப்ரோ' வெர்ஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ வெளிவந்துள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல இதில் இருக்கும் அம்சங்கள் அனைத்துமே 'ப்ரோ'தான்.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் QHD+ Fluid டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 ப்ராசஸர் மற்றும் 5G சப்போர்ட் இருக்கிறது. மொத்தம் நான்கு கேமராக்களுடன் வெளிவந்திருக்கிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. 48 MP மெயின் கேமரா (சோனி IMX689 சென்ஸார்), 48 MP அல்ட்ரா வைடு கேமரா (சோனி IMX586 சென்ஸார்), 8 MP டெலிபோட்டோ கேமரா மற்றும் ஒரு கலர் ஃபில்டர் கேமரா என நான்கும் ஒவ்வொரு விஷயத்திற்காக இருக்கின்றன. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் அல்ட்ரா வைடு கேமராவுக்கும், மெயின் கேமரா அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான். 48 MP சோனி IMX586 சென்ஸாருடன் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் எந்த போனை விடவும் சிறந்த வைடு ஆங்கிள் புகைப்படங்களை எடுக்கும் திறனுடையது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. ஒன்ப்ளஸ் 8 ப்ரோவின் முழுமையான அம்சங்களை கீழ்க்காணும் படத்தில் காணலாம்.

ஒன்ப்ளஸ் 8 pro specs
ஒன்ப்ளஸ் 8 pro specs

மேலும் இது குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.

விலையில் ஐபோனை முந்தும் ஒன்ப்ளஸ்... 8 சீரிஸில் என்ன ஸ்பெஷல்? #FirstImpressions

விலை

8GB + 128GB - ரூ.54,999

12GB + 128GB- ரூ.59,999

சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை இருக்கும் இந்த நேரத்தில் ஒன்ப்ளஸ் விற்பனை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால் இன்று 12 மணிக்குத் தொடங்கிய விற்பனையில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ போன்கள் அனைத்துமே விற்றுத் தீர்ந்துவிட்டன.

அடுத்த கட்டுரைக்கு