Published:Updated:

'ஒன்ப்ளஸ்ஸுக்கு வாவே போனிலிருந்து விளம்பரம்!' - அயர்ன்மேனை காட்டிக்கொடுத்த பதிவு

ராபர்ட் டௌனி ஜூனியர்
News
ராபர்ட் டௌனி ஜூனியர்

இவர் தோன்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ விளம்பரங்களை நம்மில் பலரும் நிச்சயம் பார்த்திருப்போம்!

தற்போது, மற்ற இடங்களைவிட சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வதையே நிறுவனங்கள் பெரிதும் விரும்புகின்றன. விளம்பர உலகில் Social media Influencers என அழைக்கப்படும் மக்களிடையே நல்ல ஒரு தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பிரபலங்களுக்குத்தான் மவுசு அதிகம். அதிலும் பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட மார்வெல் படங்களில் அயர்ன்மேனாக நடித்திருக்கும் ராபர்ட் டௌனி ஜூனியருக்கு இருக்கும் மவுசைப் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா?! இவரைத் தங்களது போன்களுக்கு விளம்பர தூதுவராகப் பிடித்தது ஒன்ப்ளஸ் நிறுவனம். இவர் தோன்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ விளம்பரங்களை நம்மில் பலரும் நிச்சயம் பார்த்திருப்போம்.

இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் கில்லியாக இருக்கும் ஒன்ப்ளஸ், உலக அரங்கிலும் ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய கைகளுடன் நேருக்கு நேர் மோதத் தயாராகிவருகிறது. இதற்கு ராபர்ட் டௌனி ஜூனியரின் இமேஜ் பெரிதும் உதவும் என நம்புகிறது ஒன்ப்ளஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், சீனாவில் மிகப்பிரபலமாக இருக்கும் Weibo என்னும் சமூக வலைதளத்தில் ஒன்ப்ளஸ் குறித்த பதிவு ஒன்றைப் பகிர்ந்தார். அதில்தான் சிக்கியிருக்கிறார் நம்ம அயர்ன்மேன். அந்தப் பதிவு, வாவே (Huawei) P30 ப்ரோவிலிருந்துதான் பதிவாகியிருக்கிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வாவே (Huawei) P30 ப்ரோவிலிருந்துதான் பதிவான பதிவு
வாவே (Huawei) P30 ப்ரோவிலிருந்துதான் பதிவான பதிவு

'உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?' என ரசிகர்கள் கலாய்க்கத்தொடங்கினர். ஆனால், இதற்கு சாமர்த்தியமாகப் பதிலளித்தார் ராபர்ட் டௌனி ஜூனியர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் 'என் அசிஸ்டன்ட்டை ஒன் ப்ளஸ் 7 ப்ரோவிற்கு அப்டேட் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது, இனிமேல் தவறு நடக்காது' என்று இருந்தது. இது ஒன்ப்ளஸ் 7 ப்ரோவிலிருந்துதான் பதிவாகியிருக்கிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ராபர்ட் டௌனி ஜூனியரின் கலகல ரிப்ளை!
ராபர்ட் டௌனி ஜூனியரின் கலகல ரிப்ளை!

இதற்காக, நிறுவனங்களிடம் இழப்பீடு தொகைகள் கட்டிய பிரபலங்களும் உண்டு. ஆனால், இந்தத் தடவை இதை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் ராபர்ட் டௌனி ஜூனியர் என மெச்சிவருகின்றனர், அவர் ரசிகர்கள். ஆனால், இன்று பெரும்பாலான பிரபலங்களின் சமூக வலைதளங்களைப் பார்த்துக்கொள்வதற்கே தனி குழுக்கள் இருப்பதால், இதையும் ராபர்ட் டௌனிதான் பண்ணியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.