Published:Updated:

மேட் ஃபினிஷ்... டிரிபிள் கேமரா..! - இதுதான் மக்களே ஒன்ப்ளஸ் 7T

இன்னும் சில நாள்களில் ஒன்ப்ளஸ் 7T வெளியாக உள்ளது.

OnePlus 7T
OnePlus 7T

இந்த மாதம் 26-ம் தேதி, புதிய போனை அறிமுகப்படுத்தத் தயாராக இருக்கிறது, ஒன்ப்ளஸ் நிறுவனம். வழக்கமாக, ஆண்டின் தொடக்கத்தில் ஒரு போனையும் அதன் பின்னர், அதன் அப்டேட்டாக சில மாதங்கள் கழித்து ஒரு போனையும் ஒன்ப்ளஸ் வெளியிடுவது வழக்கம். அப்படி, இந்த வருடம் ஏற்கெனவே ஒன்ப்ளஸ் 7 மற்றும் 7 ப்ரோ ஆகிய மொபைல்கள் வெளியாகிவிட்டன. அடுத்து வெளியாகவிருப்பதுதான், ஒன்ப்ளஸ் 7T.

OnePlus 7T
OnePlus 7T

அந்த போன் தொடர்பான புகைப்படங்கள், கடந்த சில நாள்களாகவே ட்விட்டரில் வலம் வந்துகொண்டிருந்தன. தற்போது, அந்த போனின் அதிகாரபூர்வமான புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார், ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ்.

₹1000 கோடி முதலீடு, 1,500 பேருக்கு வேலை... ஹைதராபாத்துக்கு ஒன்ப்ளஸ்  ஜாக்பாட்!

இவர் வெளியிட்டிருக்கும் போட்டோவால், போனின் பின்பக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவந்திருக்கிறது. ஒன்ப்ளஸ் 7T ஸ்மார்ட்போனில் மூன்று ரியர் கேமராக்கள் இருப்பது உறுதியாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஐபோன் 11 ப்ரோவிலும் மூன்று கேமராக்கள்தான் இருந்தன. ஆனால், அதன் வடிவமைப்பு கொஞ்சம் விநோதமாக இருந்ததாகவே பலருக்கும் தோன்றியது. இந்த போனில், மூன்று கேமராக்களும் Horizontal வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வடிவத்தை 50 மாடல்களில் இருந்து பரிசீலித்த பின்னரே தேர்வு செய்ததாக, பீட் லாவ் தெரிவித்திருக்கிறார்.

OnePlus 7T
OnePlus 7T

இது மட்டுமின்றி, போனின் பின்பக்கம் மேட் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. ``கடந்த 2018-ம் ஆண்டில், முதன் முதலாக matte-frosted கிளாஸ் பயன்படுத்திய போனாக ஒன்ப்ளஸ் 6-ஐ அறிமுகம் செய்தோம். அதற்கே எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் தேவைப்பட்டது. இப்போது, அதைவிடவும் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ள metallic radiance கிளாஸ் பேக்கை ஒன்ப்ளஸ் 7T போனில் அறிமுகப்படுத்த உள்ளோம்'' எனவும் ஒன்ப்ளஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ஐபோன் ₹5000... ஒன்ப்ளஸ் ₹6000!' - டெலிகிராம் ஆப்பில் நடக்கும் கேட்ஜெட் மோசடி