Published:Updated:

வருகிறது ஒன்ப்ளஸின் ஃபிட்னஸ் பேண்ட்... என்ன ஸ்பெஷல், விலை எவ்வளவு? #OnePlusBand

#OnePlusFitBand
#OnePlusFitBand

ஸ்லீப் ட்ராக்கிங் தொடங்கி வொர்க்-அவுட் ட்ராக்கிங் வரை ஒரு ஃபிட்னஸ் பேண்ட்டில் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய வசதிகள் அனைத்தும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஆடம்பர பொருளாக மட்டுமே இருந்த ஃபிட்னஸ் பேண்ட் இன்று அனைவருக்குமானதாக மாறியிருக்கிறது. ஷாவ்மி போன்ற நிறுவனங்கள் இந்த சந்தையில் களம் கண்டதை இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லலாம். ஷாவ்மியின் ஃபிட்னஸ் பேண்ட் அனைத்துமே இந்தியாவில் பெரிய ஹிட்டடிக்க ரியல்மீ போன்ற நிறுவனங்களும் இந்த ஃபிட்னஸ் பேண்ட் சந்தையில் களம் கண்டன. இருந்தும் பட்ஜெட் ஃபிட்னஸ் பேண்ட் செக்மென்ட்டில் ஷாவ்மியின் ஆதிக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்ப்ளஸ் புதிய ஸ்மார்ட் பேண்ட் மூலம் இந்திய ஃபிட்னஸ் பேண்ட் சந்தையில் விரைவில் களமிறங்கவுள்ளது.

OnePlus Band
OnePlus Band
@Stufflistings

சில வாரங்களாகவே ஒன்ப்ளஸ் அதன் புதிய ஸ்மார்ட் பேண்ட் அறிமுகத்தை பல்வேறு விதங்களில் டீஸராக வெளியிட்டுவருகிறது. 'ஒன்ப்ளஸ் பேண்ட்' என்ற பெயருடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் இது குறித்துப் பல தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. அதன்படி 1.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஒன்ப்ளஸின் முதல் ஃபிட்னஸ் பேண்ட். பிரைட்னெஸ் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கும். பிரீமியம் சிலிக்கான் ஸ்ட்ராப்ஸுடன் வெளிவரும். எடை 22.6 கிராம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிட்னஸ் வசதிகளாக SpO2 blood oxygen sensor, Optical heart rate sensor இடம்பெறும். 5ATM/IP68 வாட்டர்ப்ஃரூப் ரேட்டிங்குடன் வெளிவரும் இந்த ஒன்ப்ளஸ் பேண்ட். ஸ்லீப் ட்ராக்கிங் தொடங்கி வொர்க்-அவுட் ட்ராக்கிங் வரை ஒரு ஃபிட்னஸ் பேண்ட்டில் மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய வசதிகள் அனைத்தும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக ஒன்ப்ளஸ் பிரத்யேகமாக சில வசதிகளைக் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். பேண்ட் தகவல்களை சிங்க் செய்து ரிப்போர்ட் கொடுக்க OnePlus Health என்ற ஆப் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. 100mAh பேட்டரியில் 14 நாள் பேட்டரி பேக்-அப் எதிர்பார்க்கலாம். இதன் விலை 2,499 ரூபாய் இருக்கும். இந்த பேண்ட் வரும் திங்கள் அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

இது இல்லாமல் ஒரு ஸ்மார்ட்வாட்ச்சையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது ஒன்ப்ளஸ். இதை ஒன்ப்ளஸ் CEO பீட் லவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது ஒன்ப்ளஸ் 9 சீரிஸ் போன்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு