Published:Updated:

`PUBG-க்கு பெஸ்ட்!' - வெளியானது ஒன்ப்ளஸ் 7T புரோ மற்றும் மெக்லாரன் எடிஷன்

இந்தப் புதிய போன்களில் என்ன ஸ்பெஷல்!

ஒன்ப்ளஸ் 7T புரோ
ஒன்ப்ளஸ் 7T புரோ ( மெக்லாரன் )

சமீபத்தில் இந்தியாவில் தங்களது ஒன்ப்ளஸ் 7T மொபைலை வெளியிட்டிருக்க, தற்போது லண்டனில் கூடுதலாக 7T புரோ மாடல் மொபைல்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். இந்த நிகழ்வு இணை நிறுவனரான கார்ல் பேவுடன் தொடங்கப்பட்டது. இங்கு அறிமுகமான 7T-யை உலக அரங்கில் அறிமுகம் செய்ததோடு புதிய ஆக்ஸிஜன் ஓஎஸ் பற்றிய அறிமுகத்தையும் கொடுத்தார் அவர். இதைப் பற்றி ஏற்கெனவே இந்தியாவில் தெரிவிக்கப்பட்டுவிட்டதால் புதிதாக அறிமுகமான ஒன்ப்ளஸ் 7T புரோவின் சிறப்பம்சங்களை முதலில் பார்ப்போம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC, வார்ப் சார்ஜ் 30T உடன் 4085 mAh பேட்டரி, 8 GB RAM-முடன் 256 GB வரை storage வசதியுடன் வருகிறது.

ஒன்ப்ளஸ் 7T புரோ ஸ்பெக்ஸ்
ஒன்ப்ளஸ் 7T புரோ ஸ்பெக்ஸ்

இத்துடன் ஸ்பெஷல் 7T புரோ மெக்லாரன் எடிஷனையும் வெளியிட்டுள்ளது. சிறு மேம்பாடுகளைத் தவிர்த்துக் கிட்டத்தட்ட 7T புரோவின் அனைத்து அம்சங்களையும் ஒன்ப்ளஸ் 7T புரோ மெக்லாரனிலும் கொடுத்திருக்கிறது. இந்த மெக்லாரன் பதிப்பு 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை மெக்லாரன் கார்களை நினைவுபடுத்தும் வண்ணம் இது இருக்கிறது. பாப்-அப் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்டம் ஐகான்கள் (Custom-made icons) பிரத்யேக அனிமேஷன்கள், themes மற்றும் வால்பேப்பர்கள் போன்ற சில மென்பொருள் மாற்றங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ஒன்ப்ளஸ் 7T புரோ மெக்லாரன் எடிஷனின் வெளிப்புறம் அல்காண்டரா எனும் ஃபைபர் பொருளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மேக்லாரன் கார்களில் பயன்படுத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

`ஒன்ப்ளஸ் 8 இப்படித்தான் இருக்கும்?' - கசிந்த புதிய படங்கள்! #Leaked

மேலும், PUBG-யுடனான புதிய பார்ட்னர்ஷிப் பற்றியும் அறிவிக்கப்பட்டது. ஒன்ப்ளஸ் தொலைபேசிகளுக்கு நீண்ட நேரம் PUBG விளையாடுவதற்கு உகந்ததாக இந்த எடிஷன் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில், ஒன்ப்ளஸ் 7T புரோவின் விலை ரூ. 53,999 ஆகவும், மெக்லாரன் எடிஷனின் விலை ரூ. 58,999 ஆகவும் உள்ளது.

ஒன்ப்ளஸ் 7T புரோ அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் ஆஃப்லைன், ஆன்லைன் ஸ்டோர்கள் வழியாக அக்டோபர் 12 நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.