“ஸ்மார்ட் போன் எனக்கெதுக்கு?” எனக் கேட்டவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். எல்.கே.ஜி குழந்தைக்குக்கூட புத்தகங்களோடு ஆண்ட்ராய்டு மொபைல் ஒன்று வாங்க வேண்டிய ஆன்லைன் க்ளாஸ் காலமிது. ஸ்மார்ட் போன் காதலர்களின் சாய்ஸில் முக்கியமானது ஒன் ப்ளஸ்.

ஐபோன் தரம், ஆண்ட்ராய்டு விலையில் என்கிற தாரக மந்திரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். பெயர்தான் ஒன் ப்ளஸ், ஆனால் வசதியில் ஏகப்பட்ட ப்ளஸ் என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு விலையைக் கூட்டிக்கொண்டே செல்ல ‘இனி ஒன் ப்ளஸ்ஸுக்கும் ஆப்பிள் மாதிரி லோன் போட்டு வாங்கணும் போலயேப்பா’ என மக்கள் நகர ஆரம்பித்தனர். அதனுடன், பொருளாதார வீழ்ச்சி, சீன மொபைல் போன்ற ஆபத்தான ஹேஷ்டேகும் ஒன்றுசேர உஷாரானது ஒன் ப்ளஸ். தற்போது, பட்ஜெட் விலையில் பக்கா மொபைலை லாஞ்ச் செய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம்தான் வெளியாகிறது என்றாலும், இப்போதிருந்தே மக்கள் காத்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSப்ளஸ்
ஆப்பிள், சாம்சங், கூகுள் எனப் பெரிய நிறுவனங்கள் எல்லாமே பட்ஜெட் மொபைல்கள் என மாடல்களைக் களமிறக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவை பெரிதாக எடுபடவில்லை. ஒன் ப்ளஸ் நார்டு ஆல்-ரவுண்டு நல்ல பேக்கேஜாக வெளியாகியிருக்கிறது.
கேமரா, லுக், பேட்டரி எல்லாமே பக்கா.
பட்ஜெட் விலை.
தொலைநோக்குப் பார்வையுடன் 5G சப்போர்ட்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைனஸ்
விலையைக் கட்டுக்குள் வைக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 865-க்கு பதிலாக 765G புராசஸர் தரப்பட்டிருக்கிறது.
ஹைலைட்ஸ்
செல்ஃபி பிரியர்களுக்கென முன்பக்க டூயல் கேமரா, பின்பக்க நாலு கேமரா என ஒன் ப்ளஸ்ஸில் முதன்முறையாக ஆறு கேமராக்கள்.
இன்டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார்.
ப்ரீமியம் லுக்குடன் கூடிய கிளாஸ் ஃபினிஷ்
90Hz ரீஃப்ரெஷ் ரேட் திறன் கொண்ட AMOLED Full-HD+ 6.44” டிஸ்பிளே
Warp 30T ஃபாஸ்ட் சார்ஜருடன் கூடிய 4115 mAh பேட்டரி. 30 நிமிடத்தில் 70% சார்ஜ் ஆகிவிடுமாம்.

விலை
6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னெல் மெமரி ~ 24,999 (செப்டம்பர் மாதம்தான் வெளியாகிறது)
8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னெல் மெமரி - 27,999
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னெல் மெமரி - 29,999

ஒன் லைன் ரிவ்யூ
ஹை பட்ஜெட் மாடல்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருந்த ஒன் ப்ளஸ், மீண்டும் மிட் பட்ஜெட் ஏரியாவுக்குள் கெத்தாகக் களமிறங்கி யிருக்கிறது. ஒன் ப்ளஸ் நார்டு பல செக் பாக்ஸை டிக் அடிக்கிறது என்பதால், பட்ஜெட்டில் பக்காவாக அமர்கிறது.