Published:Updated:

`கலக்கிய கல்லூரி பேண்டுகள்...' ஒன்ப்ளஸ் நடத்திய இசைவிழா!

மொபைல் விற்பனையைத் தாண்டி, மக்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் பல முயற்சிகளை ஒன்ப்ளஸ் தற்போது மேற்கொண்டுள்ளது.

ஒன்ப்ளஸ் இசைவிழா
ஒன்ப்ளஸ் இசைவிழா

ஒன்ப்ளஸ் நிறுவனம், முதல்முறையாக 'இண்டிபெண்டன்ட் மியூசிக்' தயாரிக்கும் இளைஞர்களை வளர்க்கும் விதமாக, 'ஒன்ப்ளஸ் ரெட் கேபிள்' எனும் பெயரில் கல்லூரி அளவிலான போட்டி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் லைட், ராக், ஹிப் ஹாப் எனப் பல்வேறு பிரிவுகளில் இசை வாசிக்கும் இளைஞர்கள் கலந்துகொண்டனர். இது, அக்டோபர் 9-ம் தேதி அன்று இந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்லூரியிலும், அக்டோபர் 10,11 தேதிகளில் பார்டிசியன் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் கல்லூரியிலும் நடைபெற்றது. இதிலிருந்து ஃபைனலுக்குத் தகுதியானவர்களுக்கான இறுதிச்சுற்று நேற்று நடந்தது.

சக்தி ஸ்ரீ கோபாலன்
சக்தி ஸ்ரீ கோபாலன்

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தர்ஷனா பேசுகையில், ``ஒன்ப்ளஸ் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கு எங்களின் வாடிக்கையாளர்கள்தான் காரணம். அதிலும் குறிப்பாக இளைஞர்கள்தான். அவர்களுக்குத் திருப்பி என்ன கைம்மாறு செய்வது என்று தெரியவில்லை. அப்போது உருவான ஐடியாதான், 'ஒன்ப்ளஸ் ரெட் கேபிள்'. இதுபோன்ற திறமையைக் கண்டறியும் போட்டிகளைத் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடந்தத் திட்டமிட்டுள்ளோம். பெங்களூரில் அடுத்த நிகழ்ச்சி நடக்கும்" என்றார்.

`PUBG-க்கு பெஸ்ட்!' - வெளியானது ஒன்ப்ளஸ் 7T புரோ மற்றும் மெக்லாரன் எடிஷன்

போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளும், ஒரு லட்சம் வரையிலான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. போட்டியின் நடுவர்களாக சக்தி ஸ்ரீ கோபாலன், அமிதாஸ் பிரதன், ஷான் ரோல்டன், விஜய் பிரகாஷ் அமர்ந்தனர். இதில் 'யுவராஜ் ஆன் தி ஃப்ளோர்', 'டிவாய்', 'கர்னாடிக் பேண்ட்', 'தீப்பெட்டி அணி', 'சைலைஜி', 'மசால் வடை' எனப் பல இசைக்குழுக்கள் பரிசுகள் வென்றன. ஆர்கனைஸ்டு கிராஸ் அணி, வின்னராக அறிவிக்கப்பட்டது. விருதுகள் வழங்கப்பட்ட பிறகு, சக்தி ஸ்ரீ கோபாலன் பாடும் நிகழ்ச்சியும் நடந்தது. இப்படி மொபைல் விற்பனையைத் தாண்டி, மக்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் பல முயற்சிகளை ஒன்ப்ளஸ் தற்போது மேற்கொண்டுள்ளது.