Published:Updated:

ஒன்ப்ளஸ்ஸின் முதல் டிவி... முதன்முதலில் இந்தியாவில் வெளியாகிறது

மு.ராஜேஷ்

தீபாவளிக்கு முன்பாக இதை விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறது ஒன்ப்ளஸ்.

OnePlus Tv
OnePlus Tv

ஸ்மார்ட்போன் சந்தையில் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் ஒன்ப்ளஸ் நிறுவனம் கூடிய விரைவில் டிவி ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளது. சீன நிறுவனமான ஒன்ப்ளஸ் தற்போது ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதற்கான ஆக்ஸசரீஸ்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

OnePlus Tv
OnePlus Tv

ஒன்ப்ளஸ் நிறுவனம் வெளியிட்ட அனைத்து போன்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதால் வரப்போகும் டிவி மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த டிவி முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் தற்போது உறுதிப்படுத்தியிருக்கிறார். டிவியில் QLED பேனல் பயன்படுத்தப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Android TV OS இதில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Tv
OnePlus Tv

வரும் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி இந்த டிவி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த டிவியின் அளவு 43 முதல் 75 இன்ச் வரைக்கும் இருக்கலாம். இந்த டிவி அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. முதலில் இந்தியாவில் வெளியாகும் இந்த டிவி கூடிய விரைவில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா பகுதிகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் எனவும் ஒன்ப்ளஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.