Published:Updated:

ஆன்லைன்... ஆஃப்லைன் - 9

ஆன்லைன்... ஆஃப்லைன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன்... ஆஃப்லைன்

எமோஜி

ஆன்லைன்... ஆஃப்லைன் - 9

எமோஜி

Published:Updated:
ஆன்லைன்... ஆஃப்லைன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன்... ஆஃப்லைன்

ங்கள் மொபைல் ரிங்டோன் என்ன?

நம்மில் பெரும்பாலானோருக்கு மொபைல் ரிங்டோன் பற்றிப் பெரிய அக்கறை இல்லை. ஒன்று, அந்த மொபைல் நிறுவனத்தின் டீஃபால்ட் ரிங்டோனையே கடைசி வரை வைத்திருப்போம். அல்லது, ஊரே அலரும்படியான பாடல் ஒன்றை வைத்துக்கொள்வோம். ரிங்டோன் வைப்பதில்கூட ஸ்மார்ட்டாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. “ஜட்டில என்னப்பா டிசைன்?” என்பதுபோல ``ரிங்டோனில் என்னய்யா ஸ்மார்ட்’’ எனக் கேட்கலாம். விஷயம் இருக்கிறது.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 9

“இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...”

அலுவலக மீட்டிங்கில், ஹெச்.ஆர் துறையைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் அப்ரைசல் பற்றியும் சம்பள உயர்வு பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது யாரோ ஒருவருக்கு மொபைலில் அழைப்பு வர, அவரது ரிங்டோனாக இந்தப் பாடல் ஒலித்தால் எப்படியிருக்கும்? ஒரு விதத்தில் அது உண்மைதான் என நக்கலாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இதே ரிங்டோன் நம் கிளையன்ட் உடனான மீட்டிங்கில் ஒலித்தால்?

நான் சொல்லப்போகும் சம்பவத்தை நம்பாமலிருக்கத்தான் வாய்ப்பு அதிகம். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும். கதையின் நாயகன் பெயர் மிஸ்டர்.வொயிட் அலுவலகரீதியாக கிளையன்ட் ஒருவரைச் சந்திக்கப் போயிருக்கிறார். அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் மூன்று பேருடன் அவருக்கு முக்கியமான சேல்ஸ் மீட்டிங். மீட்டிங் தொடங்கிய 3வது நிமிடம் அவருக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. “You made me a, you made me a believer, believer” என ஹை டெசிபலில் அலற அசால்ட்டாக எடுத்து சைலன்ட்டில் போட்டிருக்கிறார் வொயிட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

8-வது நிமிடம். மீண்டும், “You made me a, you made me a believer, believer.” இந்த முறை அழைப்பு வந்தது அவர் மேலாளரிடமிருந்து என்பதால் கிளையன்டிடம் அனுமதி கேட்டு அந்த அழைப்பை எடுத்துப் பேசியிருக்கிறார். விஷயத்தைச் சொல்லிவிட்டு கட் செய்துவிட்டார் வொயிட். 2 நிமிடம் பேசிக்கொள்கிறேன் என அவர்களிடம் அனுமதி வாங்கியது ஸ்மார்ட்டான செயல்தான். அது போதுமென இருந்துவிட்டார் வொயிட்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 9

12-வது நிமிடம். மீண்டும், “You made me a, you made me a believer, believer.”

இந்த முறை வொயிட்டுக்கு எதிரிலிருந்தவர் “Let’s end this meeting” எனச் சொல்லிவிட்டு நடையைக் கட்டிவிட்டார். வொயிட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. ``எல்லோருக்கும் கால் வரத்தானே செய்யும்? இவரென்ன” என நினைத்து அலுவலகம் திரும்பிவிட்டார். வந்தவருக்கு மின்னஞ்சலில் அந்தச் செய்தி காத்திருந்தது. அவர் வேலை போய்விட்டது.

வொயிட் செய்வதுபோல நம்மில் எத்தனை பேர் செய்திருக்கிறோம்? முக்கியமான மீட்டிங்குக்கோ அல்லது மருத்துவமனை போன்ற இடங்களுக்கோ போகும்போது நம் ரிங்டோன் ஒலியைக் குறைக்க வேண்டும். ஒருவேளை மறந்துபோனாலும் முதல் முறை நம் மொபைலோ அல்லது அந்த அறையிலிருக்கும் வேறொருவர் மொபைலோ அடித்ததும் உஷாராக வேண்டும். அப்படியுமில்லாமல் சத்தமாக நம் மொபைல் ஒலிப்பது பிறருக்குப் பிரச்னை என்பதே உறுத்தாமலிருந்தால் வொயிட் போலத்தான் வருந்த வேண்டியிருக்கும்.

நம் மொபைல் எங்கெல்லாம் ஒலிக்க வேண்டும், எங்கெல்லாம் சைலன்ட் ஆக இருக்க வேண்டுமென்பது மிக முக்கியமான விஷயம். சில மொபைல்களில் அதிக சிரமப்படாமல் ஒரே ஒரு பட்டனைக் கீழிறக்கி சைலன்ட்டில் போட முடியும். பெரும்பாலான ஆண்ட்ராய்டு மொபைல்களில் திரையின் மேலே இருக்கும் நேவிகேஷன் பார் மூலம் சைலன்ட்டில் போடலாம். போலவே, நம் ரிங்டோன் எது என்பதும் முக்கியம். மற்றவர்களைக் காயப்படுத்தும் பாடல்களையோ வசனங்களையோ ரிங்டோனாக வைப்பது ஸ்மார்ட்டான செயல் கிடையாது. அது நம்மை தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளிவிடலாம்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 9

மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், திரையரங்குகள், அலுவலக மீட்டிங்குகள், கோயில்கள், ஜிம் அல்லது யோகா பயிற்சி மையங்கள், நூலகம் போன்ற இடங்களுக்குள் நுழையும்போதே உங்கள் மொபைல் ரிங்டோன் ஒலி எவ்வளவு என்பது பற்றி உங்களுக்கு யோசனை வர வேண்டும். தேவையெனில், வைப்ரேஷன் மோடில் வைத்துக்கொள்ளலாம். அது சத்தம் எழுப்பாமல் நம்மை அலர்ட்டாக வைத்திருக்க உதவும்.

இப்போது சொல்லுங்கள். உங்கள் மொபைல் ரிங்டோன் என்ன?

- ஸ்மார்ட் ஆவோம்