Published:Updated:

ஆன்லைன்... ஆஃப்லைன் - 11

மொபைல்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல்

தென் தமிழகத்தில் நடந்த சம்பவம் இது. குடும்பப் பொருளாதாரத்தை முன்னேற்ற அமீரக நாடொன்றில் பணிபுரிகிறார் ஒரு குடும்பத் தலைவர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் அவரால் இந்தியா வர முடியும்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 11

தென் தமிழகத்தில் நடந்த சம்பவம் இது. குடும்பப் பொருளாதாரத்தை முன்னேற்ற அமீரக நாடொன்றில் பணிபுரிகிறார் ஒரு குடும்பத் தலைவர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் அவரால் இந்தியா வர முடியும்.

Published:Updated:
மொபைல்
பிரீமியம் ஸ்டோரி
மொபைல்
ஆன்லைன்... ஆஃப்லைன் - 11

வரும் அவர் மனைவியும் வாட்ஸ்அப் மூலம்தான் வீட்டுப்பிரச்னைகளிலிருந்து ரொமான்ஸ்வரை எல்லாமே பேசுவார்கள். அந்தப் பெண்ணின் மொபைலில் ஏதோ பிரச்னை. சொந்தக்காரர் மகன் ஒருவன் மொபைல் கடை வைத்திருந்ததால் அவரிடமே சரிசெய்யச் சொல்லித் தந்திருக்கிறார். அவரும் செய்து கொடுத்துவிட்டார். சில நாள்களுக்குப் பின் அந்தப் பெண்ணுக்குப் புதிய எண்ணிலிருந்து மிரட்டல் செய்திகள் வந்தன. அவரும் அவர் கணவரும் பேசிய அந்தரங்க சாட் முதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோவரை அந்த எண்ணிலிருந்து வந்தன. அதைப் பார்த்ததும் பயப்படுவதைத் தவிர அந்தப் பெண்ணுக்கு வேறு வழியில்லை. அந்தக் குரல் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கினார். கடைசியில், “நேரில் வருகிறேன். கேட்பதெல்லாம் கொடு” என்ற அந்தக் குரலின் சொந்தக்காரன், மொபைலை சரிசெய்து தந்த சொந்தக்காரன்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆன்லைன்... ஆஃப்லைன் - 11

நம் மொபைலை சர்வீஸுக்குத் தருகிறோம். புதிய மொபைல் வாங்கும்போது பழைய மொபைலை எக்ஸ்சேஞ்சுக்குத் தருகிறோம். அல்லது, உள்ளூர்க் கடையில் வந்த விலைக்கு விற்றுவிடுகிறோம். நம் அத்தனை அந்தரங்கமும் இருக்கும் மொபைலை அப்படியே கொடுக்க எப்படி நம்மால் முடிகிறது? நடந்ததை எழுதிவைக்கும் டைரியை யார் கண்ணிலும் படாமல் பார்த்துக்கொண்டது முந்தைய தலைமுறை. இத்தனைக்கும் அதில் ஆதாரங்கள் ஏதுமில்லை. நடந்ததாகச் சொல்லும் கதை மட்டும்தான். ஆனால், நடந்த அத்தனைக்கும் ஆதாரங்களை வைத்திருக்கும் மொபைலுக்கு போதிய பாதுகாப்பு தருகிறோமா? நிச்சயம் இல்லை. மொபைலை விற்பதற்கோ எக்ஸ்சேஞ்சுக்கோ சர்வீஸுக்கோ தருவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன்... ஆஃப்லைன் - 11

முதலில் மொபைலிலிருக்கும் டேட்டாவை ஒரு பென் டிரைவ் அல்லது ஹார்டு டிஸ்க்கில் பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மொபைலை ஃபேக்டரி ரீசெட் (Factory reset) செய்ய வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் மொபைல் வாங்கும்போது எப்படி இருந்ததோ அப்படி ஆகிவிடும். இருந்த டேட்டா அத்தனையும் அழிக்கப்படும். ஆனால் ஒரு ட்விஸ்ட். ஃபேக்டரி ரீசெட் செய்வதாலேயே மொபைலில் இருக்கும் அத்தனையையும் அழித்துவிட முடியும் எனச் சொல்ல முடியாது. ஃபேக்டரி ரீசெட் செய்த மொபைலிலிருந்தும் டேட்டாவை எடுக்க மென்பொருள்கள் உண்டு. அவற்றுக்கு Data recovery software எனப் பெயர்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 11

முதலில் டேட்டா எப்படிச் சேமிக்கப்படுகிறது என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். சிறுவர்கள் பயன்படுத்தும் சிலேட்டை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். கறுப்பு நிற சிலேட்டில் வெள்ளைப் பலப்பத்தால் உங்கள் பெயரை எழுதுகிறீர்கள். பின் அதை அழிக்கிறீர்கள். அழித்த பின்னும் கொஞ்சமே கொஞ்சம் உங்கள் பெயர் தெரிய வாய்ப்பிருக்கிற தில்லையா? அதைத்தான் டேட்டா ரெக்கவரி மென் பொருள்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அப்படி நடக்காமலிருக்க மொபைலை ‘வைப்(Wipe)’ செய்ய வேண்டும்.

வைப்பிங் செய்தால் ஏற்கெனவே இருக்கும் டேட்டாவை அழிப்பதோடு மட்டுமன்றி அதன்மீது வேறொரு டேட்டாவை ஓவர் ரைட் செய்யும். அதாவது, சிலேட்டில் உங்கள் பெயரை அழிப்பதோடு மட்டுமன்றி, அதன்மேல் இன்னொருவர் பெயரைக் கிறுக்கி வைத்துவிடும். இப்போது கடைசியாக எழுதிய பெயர்தான் தெரியுமே தவிர, உங்கள் பெயர் தெரியாது. அதனால், டேட்டா ரெக்கவர் செய்யும்போது ஓவர் ரைட் செய்யப்பட்ட டேட்டா தான் கிடைக்கும்; நம் டேட்டா கிடைக்காது. ‘BitRaser’, ‘Android Data Eraser’, ‘Safe Eraser’ போன்ற பல மென்பொருள்கள் இதற்கென்றே கிடைக்கின்றன. இதில் சிக்கல் வந்தாலும், நீங்களே பலமுறை வெவ்வேறு ஃபைல்களை ஏற்றி மீண்டும் ஃபார்மேட் செய்யுங்கள்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 11

பொதுவாக, அந்தரங்கப் புகைப்படங்களை மொபைலில் வைத்திருப்பது நல்லதல்ல. மொபைல் என்பது எந்த நேரமும் நம்மிடமிருந்து தெரிந்தோ, தெரியாமலோ யார் கைக்கும் போகக் கூடியது. அதனால், மொபைலில் என்ன சேமிக்கிறோம் என்பதிலும் நாம் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டியது அவசியம்.

- ஸ்மார்ட் ஆவோம்.