Published:Updated:

ஆன்லைன்... ஆஃப்லைன் - 15

ஆன்லைன்... ஆஃப்லைன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன்... ஆஃப்லைன்

“ஹலோ”“ஹலோ யாரு?”

ஆன்லைன்... ஆஃப்லைன் - 15

“ஹலோ”“ஹலோ யாரு?”

Published:Updated:
ஆன்லைன்... ஆஃப்லைன்
பிரீமியம் ஸ்டோரி
ஆன்லைன்... ஆஃப்லைன்

“டேய்... நாந்தான் ரமேஷ். நம்பரையே டெலீட் பண்ணிட்டியா?”

“இல்ல இல்ல... மொபைல் தண்ணில விழுந்திடுச்சு. புது மொபைல்... அதான்.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் எல்லோருடைய மொபைல் வாழ்க்கை யிலும் இந்த சீன் நடந்திருக்கும். மொபைல் எடுக்காததற்கு, மொபைல் எண் தவறவிட்டதற்கு ஏதும் காரணம் சொல்ல வேண்டுமென்றால் இப்படித்தான் பொய்யாக நம் மொபைலைத் தண்ணீரில் போட்டுவிடுவோம், பள்ளியில் விடுமுறை தேவையென்றால் நம் பாட்டிகளைச் சாகடித்ததைப் போல. உண்மையில் மொபைலைத் தண்ணீரில் போட்டவர்களைவிட இப்படி காரணம் சொல்வதற்காகப் போட்டவர்கள் ஏராளம். அவர்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால், நிஜமாகவே மொபைல் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்திருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்?

- முதலில் மொபைலை வெளியே எடுத்ததும் ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். தண்ணீரில் விழுந்த மொபைலுக்குள் பவர் இருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆகும் வாய்ப்புகள் அதிகம்.

- ஆஃப் செய்ததும் சிம் கார்டு, மெமரி கார்டு, பேட்டரி உட்பட எந்த பாகத்தையெல்லாம் பிரித்து எடுக்க முடியுமோ அதை எடுத்து, காற்றோட்டமான, வெயில் இருக்கும் இடத்தில் உலர்த்துங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

- சீக்கிரம் உலர்த்த வேண்டுமென ஹேர் டிரையர் போன்ற பொருள்கள் கொண்டு உலர்த்தக் கூடாது. அது வெளியிலிருக்கும் நீரை மொபைலுக்குள் தள்ளிவிடும்.

- இதற்கு எளிமையான ஒரு வழியிருக்கிறது. மொபைலை அரிசிப் பானைக்குள், ஒரு துணியால் சுற்றி வைத்து விடுங்கள். இது மொபைலை நன்கு உலர்த்திவிடும்.

- இப்போது ஸ்விட்ச் ஆன் செய்து பாருங்கள். மொபைல் வேலை செய்தால் உங்கள் அதிர்ஷ்டம். அது வேலை செய்தாலும் உடனடியாக பேக்கப் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், தண்ணீரில் விழுந்த மொபைல் எப்போது வேண்டுமென்றாலும் பிரச்னை தரலாம். அதனால், நம் டேட்டாவுக்குப் பிரச்னை வரலாம்.

- மொபைலுடன் அதன் துணைக்கருவிகளான ஹெட்போன், சார்ஜர், புளூடூத் போன்றவற்றை இணைத்துப் பயன்படுத்திப் பாருங்கள். அவை சரியாக வேலை செய்கிறதா அல்லது பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும்.

- மொபைலில் ஏதும் பிரச்னை என்றால் உடனடியாக சேவை மையத்துக்குக் கொண்டு செல்வது நல்லது. பெரும்பாலும், எல்லா மொபைலுக்குள்ளும் வாட்டர் மார்க் என ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அது தண்ணீர் எந்த அளவுக்கு உள்ளே சென்றிருக்கிறது என்பதைக் குறிக்கும் ஸ்டிக்கர். சேவை மையத்தில் அதை வைத்து மொபைலில் பாதிப்புகளைக் கணித்து, தேவையான ரிப்பேர் வேலைகளை மேற்கொள்வார்கள்.

- நிறைய பேர், சேவை மையத்தில் தண்ணீரில் விழுந்த விஷயத்தையே மறைத்துவிடுவார்கள். இன்ஷூரன்ஸோ வாரன்ட்டியோ கிடைக்காமல்போகும் என்பதால் அப்படிச் செய்யலாம். ஆனால், எப்படியிருந்தாலும் அவர்களுக்கு, தண்ணீரில் விழுந்த விஷயம் தெரிந்துவிடும். நாம் பொய் சொல்வதால் காலதாமதம் ஆகலாம். அது நம் மொபைலுக்குத்தான் பிரச்னை.

இப்போது வரும் சில மொபைல்கள் வாட்டர் ப்ரூஃப்தானே என்ற சந்தேகம் வரலாம். வெகு சில மொபைல்கள் மட்டுமே முழுமையான வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டவை. மற்றவை எல்லாம் முழுமையான வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டவை அல்ல. அதாவது, மழைத்தூறல் பட்டால் தப்பித்துவிடும். மழையில் மாட்டினால் காலியாகிவிடும்.

மொபைல்கள் வாட்டர் ப்ரூஃப் என்பதற்கு ஆதாரமாக IP67 போன்ற சான்றிதழ்களை வாங்குவார்கள். IP67தரச்சான்றிதழ் பெற்றிருந்தால் அவை ஒரு மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் மொபைலுக்கு எந்த பாதிப்பு மில்லை என்று பொருள். ஆனால், 50,000-க்கு அதிகமான விலைகொண்ட ப்ரீமியம் மொபைல்கள்தான் இந்தச் சான்றிதழ் பெற்றிருக்கும். மற்ற மொபைல்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

மொபைல்களை எப்படி வாங்குவது, எப்போது விற்பது, எப்படிப் பயன்படுத்துவது, எப்படிச் சுத்தம் செய்வது என எல்லா விஷயத்திலும் நாம் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டு மென்பதை, 15 வாரங்களாகப் பார்த்து விட்டோம். இதுவரை சொன்னதை யெல்லாம் மறக்காமல், உங்கள் மொபைலை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தி சமர்த்தாக வாழ வாழ்த்துகள்!

- ஸ்விட்ச் ஆஃப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism