Published:Updated:

வந்தாச்சு போகோX2... ரியல்மீயை முந்துமா? #PocoX2

Poco F1 மாடலில் Snapdragon 845 புராஸஸர் பயன்படுத்தப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள X2-வில் Snapdragon 730G புராஸஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 730G மிட்-ரேஞ்ச் சிப்செட்டாக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது.

போகோ பிராண்டில் இரண்டாவது ஸ்மார்ட்போனான Poco X2, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அறிமுகமாகியுள்ளது. ஷாவ்மிடமிருந்து விலகி தனி நிறுவனமாக போகோ ஆன பிறகு வெளியாகியிருக்கும் ஸ்மார்ட்போன் இது. 6GB RAM+64GB Storage, 6GB RAM+128GB Storage மற்றும் 8GB RAM+256GB Storage என மூன்று வேரியன்ட்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மூன்று வேரியன்ட்களும் முறையே 15,999 ரூபாய், 16,999 ரூபாய் மற்றும் 19,999 ரூபாய் விலைகளில் கிடைக்கின்றன.

Poco X2
Poco X2

பெரும் ஹிட்டடித்த முதல் போகோ போனான Poco F1 மாடலில் Snapdragon 845 புராஸஸர் பயன்படுத்தப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள X2-வில் Snapdragon 730G புராஸஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 730G மிட்-ரேஞ்ச் சிப்செட்டாக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய சிப்செட் என்றாலும் பிரீமியம் ரக சிப்செட் என்பதால் செயல்திறனைப் பொறுத்தவரை Snapdragon 845 புராஸஸர், 730G-யை விட கொஞ்சம் சிறப்பாக இருக்கும். இந்த Snapdragon 730G கேமிங்கிற்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதால் X2-வில் சிறப்பான கேமிங் அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.

Vikatan

Poco F1-ல் 4000 mAh ஆக இருந்த பேட்டரியை, X2-வில் 4500 mAh ஆக உயர்த்தியிருக்கிறார்கள். Snapdragon 845 சிப்செட்டைவிட Snapdragon 730G குறைவான அளவே பேட்டரியை உபயோகிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதோடு முந்தைய போனைவிட 500 mAh அதிகமாகக் கொடுத்திருப்பதால், பேட்டரியும் ஒரு நாளுக்கும் மேலாக தாக்குப்பிடிக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கடுத்து கேமராவில் பெரிய மாற்றத்தைக் கொடுத்திருக்கிறது போகோ.

730G vs 845
730G vs 845
Tech Yorker

Poco F1-ல் 12-MP 5-MP பின் பக்க கேமராவும் 20-MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருந்தது. Poco X2-வில் பின் பக்கம் 64-MP, 8-MP, 2-MP, 2-MP என நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நைட் மோடு, அல்ட்ரா வைடு மோடு மற்றும் ஸ்லோமோஷன் என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது X2-வின் கேமரா. அதோடு 20 MP, 2 MP என இரு செல்ஃபி கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்ப்ளே அளவும் 6.18 இன்ச்சில் இருந்து 6.67 இன்ச்சாக கூடியிருக்கிறது. இரண்டு போன்களிலும் Full HD டிஸ்ப்ளேதான். X2-வில் ஆண்ட்ராய்டு 10 வழங்கப்பட்டுள்ளது. போகோ தனி நிறுவன அறிவிப்பு வந்தபோதே ஷாவ்மியின் மென்பொருளைத்தான் பயன்படுத்துமா அல்லது தனி சாப்ட்வேர்களை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கான பதிலாக தற்போது வெளியிடப்பட்டுள்ள X2-வில் ஷாவ்மியின் MIUI 11 OS-யையே பயன்படுத்தியுள்ளது போகோ.

ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக், ஹைபிரிட் ஸிம் ஸ்லாட், டூயல் ஆப் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. Type-C சார்ஜருடன் 27 W Quick சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. Poco F1-ஐப் போலவே X2-விலும் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பயன்படுத்தினாலும் கேம் விளையாடினாலும் வெப்பம் குறைவாகவே இருக்கும். டிஸ்ப்ளேவுக்கு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Poco X2
Poco X2
Poco X2-வில் இருக்கும் அம்சங்களுடன் சந்தையில் தற்போது போட்டியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள் என்றால் Oppo Reno 2, Samsung Galaxy A80, Poco F1, Realme X2 மற்றும் Samsung Galaxy S9 ஆகியவைதான்.
`மின்னல் வேக சார்ஜிங் வசதி, 90Hz டிஸ்ப்ளே!'  - மெர்சலாக களமிறங்கும் ரியல்மீ X2 ப்ரோ

இவை அனைத்திலும் Snapdragon 845 அல்லது Snapdragon 730G சிப்செட்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றில் Oppo Reno 2, Samsung Galaxy A80 மற்றும் S9 ஆகியவற்றின் விலை அதிகம். Poco F1 வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டது என்பதால், Poco X2-வின் போட்டியாளர் Realme X2 தான். Realme X2 வெளியாகி சில நாள்கள்தான் ஆகின்றன. கிட்டத்தட்ட Poco X2-வில் இருக்கும் அம்சங்கள் அனைத்தும் Realme X2-விலும் உண்டு. ஒரு சில அம்சங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்டு ஒன்று அதிகமாகவும் மற்றது குறைவாகவும் இருக்கும். Realme X2-வில் Super AMOLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டிருக்கும். செல்ஃபி கேமரா 32 MP-யாக கொடுக்கப்பட்டிருக்கும். பேட்டரி 4000 mAh அளவுதான் Realme X2-வில் இருக்கும்.

Poco X2
Poco X2

அதனால் இந்த ரேஞ்ச்சில் அதிகம் விற்பனையாகப் போவது X2 என எதிர்பார்க்கலாம். ஆனால் அது ரியல்மீயுடையதா, போகோவுடையதா என்பதுதான் சஸ்பென்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு