Published:Updated:

ரியல்மீக்கு ஐபோனிலிருந்து விளம்பரம் செய்து மாட்டிக்கொண்ட இந்திய CEO!

இந்த ட்வீட் சற்று நேரத்தில் நீக்கப்பட்டது.

ரியல்மீ இந்தியா CEO மாதவ் சேத்
ரியல்மீ இந்தியா CEO மாதவ் சேத்

சாம்சங் உட்பட உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் தலைமை ஊழியர்கள், விளம்பர தூதர்கள் தங்களது நிறுவனங்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் விளம்பரங்களை ஐபோன் மூலம் ட்வீட் செய்து மாட்டிக்கொள்வது இன்று சகஜமான ஒன்றாகிவிட்டது.

மாதவ் சேத் ட்வீட்
மாதவ் சேத் ட்வீட்

அந்த வரிசையில் இந்தியாவில் நல்ல வளர்ச்சியைக் காட்டிவரும் ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீயின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத், தன் ட்விட்டர் பக்கத்தில் ரியல்மீயின் ஸ்மார்ட்போன்களான ரியல்மீ 3 மற்றும் ரியல்மீ 3i குறித்த செய்தியை ஐபோன் மூலம் ட்வீட் செய்து மாட்டிக்கொண்டார். கடந்த நவம்பர் 16 அன்று அவர் தங்களது மொபைல் போன் அப்டேட் குறித்து வெளியிட்ட ட்வீட்டானது ஐபோன் மூலம் பதிவிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்த ட்வீட் வெளியான சில மணி நேரங்களிலேயே Delete செய்யப்பட்டுவிட்டாலும், ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவரே இவ்வாறு வேறொரு நிறுவனத்தின் மொபைல் போன்களைப் பயன்படுத்தி ட்வீட் செய்திருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்காமல் இல்லை.

'ஒன்ப்ளஸ்ஸுக்கு வாவே போனிலிருந்து விளம்பரம்!' - அயர்ன்மேனை காட்டிக்கொடுத்த பதிவு

இதற்கு முன்னும் சாம்சங், கூகுள் போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளன. இதே போன்று ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் விளம்பர தூதரான அயர்ன்மேன் புகழ் ராபர்ட் டௌனி ஜூனியர் சிக்கியபோது என் அசிஸ்டன்ட்டுக்கு புது ஒன்ப்ளஸ் வாங்கித் தந்துவிட்டேன் என ஜாலியாக சமாளித்திருந்தார்.