Published:Updated:

விரைவில் இந்தியாவில் வெளியாகும் ரியல்மீயின் புதிய ஸ்மார்ட்போன் 'ரியல்மீ X'

இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி K20-க்குப் போட்டியாக இருக்கும்.

ரியல்மீ
ரியல்மீ

ரியல் மீ நிறுவனம் கூடிய விரைவில் தனது புதிய ஸ்மார்ட்போனான இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. பட்ஜெட் செக்மென்ட்டில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்குப் போட்டியாக ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. இந்நிலையில் ஷியோமி நிறுவனம் புதிதாக ரெட்மி K20 என்ற ஸ்மார்ட்போனை வெளியிடும் முடிவில் இருக்கிறது.

ரியல்மீ X
ரியல்மீ X

சீனாவில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இந்தியாவில் வெளியாகவுள்ளது. அதற்கு போட்டியாக ரியல்மீ நிறுவனமும் ரியல்மீ X என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன் விலை 18,000 ரூபாயாக இருக்கலாம் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்த ஸ்மார்ட்போனும் ஏற்கெனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் மற்றும் பாப் அப் கேமரா இருப்பது இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஸ்பெஷல். அங்கே 15000 ரூபாய் என்ற விலையில் வெளியாகியிருந்தாலும் இந்தியாவில் விலை அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மீ X
ரியல்மீ X

விலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாக அதன் புராஸசரில் மாற்றம் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் வெளியான ரியல்மீ 'X'-ல் Snapdragon 710 புராஸசர் இருந்தது, அதே வேளையில் இந்தியாவில் வெளியாகவுள்ள வேரியன்ட்டில் Snapdragon 730 புராஸசர் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.