Published:Updated:

பாப் அப் கேமரா, இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட்... ரெட்மிக்கு ஆப்பு வைக்கும் ரியல்மீ X

மு.ராஜேஷ்

பட்ஜெட் செக்மென்ட்டில் ரியல்மீயின் பலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ரியல்மீ X
ரியல்மீ X

இந்திய மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த செக்மென்ட்டில் கடந்த சில மாதங்களாக அதிகம் விற்பனையாகி வந்த மொபைல்களுக்குப் போட்டியாக Realme X என்ற போனை நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தியிருக்கிறது ரியல்மீ நிறுவனம்.

ரியல்மீ X
ரியல்மீ X

இந்தியாவில் ரெட்மி K20 சீரிஸை இன்று அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது ஷியோமி. ஆனால், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதால் இரண்டு நாள்களுக்கு முன்னால் ரியல்மீ X மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரெட்மிக்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் ரியல்மீ

ஷியோமியின் மொபைல்களுடன் போட்டிபோடும் விதத்திலேயே தொடர்ந்து மொபைல்களை விற்பனை செய்து வருகிறது ரியல்மீ நிறுவனம். அதற்குத் தகுந்தவாறு விலையையும் நிர்ணயம் செய்து விடுவதால் விற்பனையும் அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே இருக்கிறது. நேற்று ரியல்மீ X போனை அறிமுகப்படுத்தும்போது அது தொடர்பாக ஒரு விஷயத்தையும் தெரிவித்தார் ரியல்மீ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத்.

ரியல்மீ X
ரியல்மீ X

விற்பனையில் இரண்டாம் இடத்தில் ரியல்மீ நிறுவனம் இருக்கிறது என்று தெரிவித்த அவர் ரியல்மீ ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் குறிப்பிட்டிருந்தார். தற்போது முதலிடத்தில் ஷியோமியும் மூன்றாம் இடத்தில் சாம்சங்கும் இருக்கின்றன.

இந்தத் தடவை ஷியோமியின் இரண்டு மொபைல்களுக்குக் குறிவைத்திருக்கிறது ரியல்மீ X. ஒன்று ரெட்மி நோட் 7 புரோ மற்றொன்று நாளை அறிமுகமாகப்போகும் K20. ரெட்மி நோட் 7 புரோவின் 6GB+128GB வேரியன்ட் 16,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ரியல்மீ X- ன் விலையும் அதே ரூபாயிலிருந்துதான் தொடங்குகிறது. ரியல்மீயின் இந்த முடிவால் ரெட்மி நோட் 7 புரோவின் விற்பனை வெகுவாகக் குறையும். காரணம் இரண்டு போன்களின் விலை ஒன்றாக இருந்தாலும், வசதிகள் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது.

ரியல்மீ X
ரியல்மீ X

ரியல்மீ X மூலமாக ரெட்மி K20 ஸ்மார்ட்போனின் விற்பனையும் குறையலாம். இப்போது ரெட்மி 7 புரோ விற்பனை செய்யப்படும் 16,999 என்ற விலையிலேயே ரெட்மி K20 அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, இப்போதைக்கு இந்த விலையில் வெற்றி பெறுவது ரியல்மீ X தான். இந்தப் போட்டியைச் சமாளிக்கக்கூடிய வகையில் இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஒன் சீரிஸின் மூன்றாம் தலைமுறை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது ஷியோமி.

ரியல்மீ X ஸ்மார்ட்போனில் இருப்பது 6.53 இன்ச் super AMOLED டிஸ்ப்ளே. முதல்முறையாக AMOLED டிஸ்ப்ளேவை தனது மொபைலில் கொடுத்திருக்கிறது ரியல்மீ. மேலும், நாட்ச் டிஸ்ப்ளேவிலிருந்து இந்த முறை ஃபுல் வியூ டிஸ்ப்ளேவுக்கும் மாறியிருக்கிறது. ஃபுல் வியூ டிஸ்ப்ளே என்பதால் ரியல்மீ X-ல் பாப் அப் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 0.74 நொடிகளில் இந்த பாப் அப் கேமரா வெளிவரும் என உறுதி கொடுக்கிறது ரியல்மீ. பாப் அப்பில் Sapphire glass உடைவதிலிருந்தும் கீறல்களிலிருந்தும் விழுவதில் இருந்தும் தடுக்கும்.

ரியல்மீ X
ரியல்மீ X

இன் டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் கொடுக்கப்பட்டுள்ளது. புராஸசரைப் பொறுத்தவரையில் மீடியாடெக் மற்றும் குவால்காம் என்ற இரண்டு புராஸசர்களையுமே ரியல்மீ நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இந்த போனில் Snapdragon 710 புராஸசர் இருக்கிறது. பாப் அப் கேமராவில் இருப்பது 16MP கேமரா. பின்புறமாக 48MP + 5MP கேமரா இருக்கிறது. 3765 mAh பேட்டரி VOOC Flash Charge 3.0 வசதியுடன் தரப்பட்டுள்ளது. UFS 2.1 ஸ்டோரேஜ் மற்றும் LPDDR4X ரேம் இதில் இருப்பதால் மொபைலின் பர்ஃபாமன்ஸ் சிறப்பாகவே இருக்கும்.

கொடுக்கும் பணத்துக்கு அதிக வசதிகளைக் கொடுப்பது என்ற விஷயத்தில் இதுவரை ஷியோமி தெளிவாக இருந்து வருகிறது. சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்கள் சொதப்பும் இடம் என்பது அதுதான். ஆனால், ரியல்மீ இந்த விஷயத்தில் ஷியோமியைவிடவும் கவனமாக இருப்பது தெரிகிறது. அதற்கு இந்த ரியல்மீ X ஸ்மார்ட்போன் சிறந்த எடுத்துக்காட்டு.

4GB ரேம் + 128GB இன்டர்னல் மெமரி மற்றும் 8GB ரேம்+ 128GB இன்டர்னல் மெமரி என மொத்தம் இரண்டு வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ X இது தவிர இரண்டு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வருகின்றன.