Published:Updated:

`மின்னல் வேக சார்ஜிங் வசதி, 90Hz டிஸ்ப்ளே!' - மெர்சலாக களமிறங்கும் ரியல்மீ X2 ப்ரோ

இருபதாயிரத்துக்குள்ளான செக்மென்டில் கலக்கி வந்த அந்நிறுவனம் இப்போது முதன்முதலாக அதன் ரியல்மீ X2 ப்ரோ மூலம் ப்ரீமியம் சந்தைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.

ரியல்மீ X2 ப்ரோ
ரியல்மீ X2 ப்ரோ

கடந்த 2018 தான் முதன்முதலாக இந்தியச் சந்தையில் கால்பதித்தது ரியல்மீ நிறுவனம். ஆரம்பம் முதலே அந்நிறுவனத்திற்கு ஏறுமுகம்தான். சந்தையில் இருக்கும் தேவை அறிந்து அதற்கேற்ப ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதுதான் ரியல்மீயின் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இதுவரை இருபதாயிரத்துக்குள்ளான செக்மென்டில் கலக்கிவந்த அந்நிறுவனம் இப்போது முதன்முதலாக அதன் ரியல்மீ X2 ப்ரோ மூலம் ப்ரீமியம் சந்தைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது.

SUPER VOOC சார்ஜிங்
SUPER VOOC சார்ஜிங்

கொஞ்ச நாள்களுக்கு முன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட அதே ரியல்மீ X2 ப்ரோதான் இந்தியாவில் இன்று புதுடெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியை ரியல்மீயின் நிறுவனத் தலைவரான மாதவ் சேத் தொடங்கிவைத்தார். முதலில் நிறுவனத்தின் வளர்ச்சியையும், அதன் சாதனைகள் பற்றியும் கூறிய அவர், X2 ப்ரோவின் ஹைலைட்டான மின்னல் வேக Super VOOC 50w பாஸ்ட் சார்ஜிங் திறனை பிற பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான வாவே P30 ப்ரோ, சாம்சங் கேலக்ஸி நோட் 10+ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் உடன் ஒப்பிட்டு X2 ப்ரோவின் VOOC சார்ஜிங் தொழில்நுட்பத்தின் அசாதாரண வேகத்தைப் பறைசாற்றினார்.

பின்னர் ரியல்மீ இந்தியாவின் தயாரிப்பு மேலாளரான நிதி பாட்யாவால் ரியல்மீ X2 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அம்சங்களை விரிவாகக் காண்போம்.

ரியல்மீ ஸ்பெக்ஸ்!

  • 20:9 aspect ratio 6.5-inch full-HD+ Super AMOLED Fluid 90Hz டிஸ்ப்ளே

  • Corning Gorilla Glass 5 பாதுகாப்பு

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC புராசஸர் இருக்கிறது

  • 50w Super VOOC Flash சார்ஜர்

  • 4000 mAh பேட்டரி

  • 12GB RAM - 256 GB வரையிலான ஸ்டோரேஜ் வசதி

  • 64MP மெயின் கேமரா, 13MP டெலிபோட்டோ கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 2MP டெப்த் சென்ஸார் கேமரா என நான்கு கேமராக்கள்.

  • செல்ஃபிகளுக்காக முன்பக்கம் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

'ரியல்மீ vs ரெட்மி' போர்...ஆமாம் போர்!

ரியல்மீ X2 ப்ரோவில் உள்ள 50W SuperVOOC Flash சார்ஜ் மூலம் 4,000mAh பேட்டரியை, வெறும் 35 நிமிடங்களில் 100% முழுமையாகச் செய்து விடலாம் என்கிறார்கள். கடைசியாக இந்த போனின் விலைக்கு வருவோம். ரியல்மீ X2 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ 29,999 (8GB + 128GB). 12GB + 256GB வேரியன்ட்டின் விலையை 33,999 ரூபாயாகவும், டிசைனில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்ட அதை Master Edition-ன் (12GB + 256GB) விலையை 34,999 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளனர்.

Quad கேமரா செட்-அப்
Quad கேமரா செட்-அப்

ரியல்மீ X2 ப்ரோ, பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ ஆன்லைன் ஸ்டோர்களில் நவம்பர் 26 நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.