Published:Updated:

ரியல்மீ vs ரெட்மி, கேட்ஜெட்ஸ் ஹெல்த் கைடு, மஸ்க்கின் அடுத்த அதிரடி! - ஆகஸ்ட் மாத டெக் தமிழா

ஆகஸ்ட் மாத டெக் தமிழா #TechTamizha
ஆகஸ்ட் மாத டெக் தமிழா #TechTamizha

ஆகஸ்ட் மாத டெக் தமிழாவில் என்ன ஸ்பெஷல்?!

வணக்கம் வாசகர்களே! ஆகஸ்ட் மாத டெக் தமிழா வெளியாகிவிட்டது.

பல முக்கிய கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் ஆகஸ்ட் மாத டெக் தமிழாவை இதழ் வடிவில் இலவசமாக விகடன் ஆப்பில் படிக்கலாம். https://bit.ly/vikatanandroidapp இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து (iOS பயன்பாட்டாளர்கள் https://apple.co/2EUWP8A லிங்க்கை க்ளிக் செய்யவும்), பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `டெக் தமிழா’ இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் இந்த ஆப்பில் டவுன்லோடு செய்து படிக்கலாம். மேலும், டெக் தமிழா கட்டுரைகள் ஒவ்வொன்றையும் விகடன் தளத்தில் லாகின் செய்தால் படிக்கமுடியும்.

`கேட்ஜெட்களை இப்படித்தான் கையாளணும்!' ஒரு ஹெல்த் கைடு

கேட்ஜெட் எர்கனாமிக்ஸ்
கேட்ஜெட் எர்கனாமிக்ஸ்

``நம் பணியைக் குறைப்பதற்காகவும், எளிமைப்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்டவை' எனச் சொல்லப்பட்டாலும்கூட, ஏதோவொரு வகையில் அவையாவும் உடல்நலம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பது மறுப்பதற்கு இல்லை. கேட்ஜெட்ஸ் தரும் உடல் நலப் பிரச்னைகளில் முக்கியமானவை கழுத்து வலி, மூட்டு வலி, முதுகு வலி, கண் பார்வை, தலை வலி, காது பிரச்னைகள் போன்றவைதான். இப்படியான பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.

https://www.vikatan.com/technology/gadgets/how-to-handle-gadgets-a-complete-health-guide

மஸ்க்கின் `நியூராலிங்க்' கனவு!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

"இன்னும் சில வருஷங்கள்தான் கீபோர்டு, மவுஸ், டச் ஸ்கிரீன் எதுவுமே வேணாம், உங்க மூளைல நெனைச்சா போதும் அத உங்க போன் செய்யும்." ஓவர்நைட்ல எதோ ஒரு ஹாலிவுட் படம் பார்த்துட்டு வந்து உளறுறான் என நினைக்க வேண்டும். நியூராலிங்க் நிறுவனம் நம்மை இதை நோக்கித்தான் கொண்டுசெல்லவிருக்கிறது. ஆன்லைன் வங்கி பரிவர்த்தனைகள், எலெக்ட்ரிக் கார், தனியார் விண்வெளிப் பயணம் என நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும் எலான் மஸ்க்கின் முதலீடுகளில் ஒன்றுதான் இந்த நியூராலிங்க். இந்த நிறுவனத்தின் திட்டம் குறித்தும், இதன் வருங்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை ஒரு குட்டி டெமோவுடன் அறிமுகம் செய்துவைத்தார் எலான் மஸ்க். இதைப்பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்! https://www.vikatan.com/technology/tech-news/elon-musks-neuralink-dream

IMEI மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா அரசு?

IMEI
IMEI

மொத்த இந்தியாவையும் உலுக்கிய ஒரு சம்பவம் இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதல். அந்தத் தாக்குதல் எப்படித் திட்டமிடப்பட்டது, அவ்வளவு வெடிபொருள்கள் எப்படி அங்கு கொண்டுவரப்பட்டது என எத்தனையோ கேள்விகள் இன்னும் விடைதெரியாமலே இருக்கின்றன. ஆனால், அந்தச் சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில் தெரியவந்த முக்கியமான விஷயம், தீவிரவாதிகள் அந்தத் தாக்குதலுக்கு முன்பு பயன்படுத்திய விர்ச்சுவல் சிம்கள். பாதுகாப்பாக உரையாட இதுதான் அவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தொலைத்தொடர்பு வசதிகள் எந்தளவுக்கு தேசத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்பதற்கு இதுவே ஓர் உதாரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

மேலும் படிக்க: https://www.vikatan.com/technology/tech-news/is-government-putting-an-end-to-imei-frauds

போர்... ஆமாம் போர்!

ரெட்மி vs ரியல்மீ
ரெட்மி vs ரியல்மீ

இதுவரை பட்ஜெட் செக்மென்ட்டில் முழுவீச்சில் இயங்கிவந்த ஷியோமி இப்போது ப்ரீமியம் செக்மென்ட் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறது. இந்தியாவில் ஷியோமி கால்பதித்து ஐந்து வருடங்களாகிவிட்டன. இந்தக் குறுகிய காலத்தில் முதலிடத்தைப் பிடிக்க காரணம் ஷியோமியின் திட்டங்கள் பெரும்பாலும் பக்காவாக இருப்பதே. ரெட்மி சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமானால் விற்பனை தொடங்கி சில நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிடும். அந்த அளவு மவுசு ரெட்மி போன்களுக்கு உண்டு. ஆனால், பட்ஜெட் செக்மென்ட்டைவிட்டு வெளியே எடுத்துவைத்த முதல் அடியே ஷியோமிக்குச் சறுக்கல்தான்.

மேலும் படிக்க: https://www.vikatan.com/technology/gadgets/the-war-has-just-begun-between-realme-and-redmi

ஃபேஸ்புக் கரன்சி, ஒன்ப்ளஸ் திட்டம், படையெடுக்கும் ஃபிட்னஸ் பேண்ட்ஸ்... ஜூலை மாத டெக் தமிழா! #TechTamizha

மேலும் பல கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் இந்த மாத டெக் தமிழா இதழைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (மெயில்: estvikatan@gmail.com). எங்களிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கூற மறவாதீர்கள். நன்றி!

அடுத்த கட்டுரைக்கு