Published:Updated:

Realme: மிட்ரேஞ்ச் மார்க்கெட்டில் புது என்ட்ரி... அறிமுகமானது ரியல்மீ X3 சீரிஸ்!

Realme X3 & Realme X3 SuperZoom
Realme X3 & Realme X3 SuperZoom ( Realme )

இந்தியாவில் ரியல் X3-யின் விலை 24,999 ரூபாயில் தொடங்குகிறது. ரியல்மீ X3 சூப்பர் ஜூம் மாடலின் விலை 27,999 ரூபாயில் தொடங்குகிறது

ரியல்மீ நிறுவனம் அதன் புதிய X3 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறது. X3 மற்றும் X3 சூப்பர் ஜூம் மொபைல்களுடன் ரியல்மி பட்ஸ் Q-வும் அறிமுகமாகியிருக்கிறது. ஐரோப்பாவில் ஏற்கெனவே கடந்த மாதம் வெளியான மாடல்தான் ரியல்மீ X3 சூப்பர் ஜூம். ஆனால், இந்த ரியல்மீ X3 இப்போதுதான், முதல்முறையாக இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்படுகிறது. என்ன ஸ்பெஷல்...?

Realme X3 & Realme X3 SuperZoom
Realme X3 & Realme X3 SuperZoom
Realme

ரியல்மீ X3, ரியல்மீ X3 சூப்பர் ஜூம் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே போன்தான். கேமராவில் மட்டும்தான் மாற்றங்கள் உள்ளன. வடிவமைப்பு மற்றும் பிற வசதிகளும் அதேதான். இரண்டு போன்களிலுமே 6.60-இன்ச் Full-HD+ IPS LCD (1080 x 2400) டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்படாதது ஏமாற்றம்தான். ஆனால், இது 120 Hz refresh rate கொண்ட டிஸ்ப்ளே.

ரியல்மீ X3-யைப் பொறுத்தவரையில் ஒரு 16 MP (சோனி IMX471 சென்சார்) கேமரா, ஒரு 8 MP அல்ட்ரா-வைடு கேமரா என முன்பக்கம் இரண்டு செல்ஃபி கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவே ரியல்மீ X3 சூப்பர் ஜூம்மை எடுத்துக்கொண்டால் 32 MP (சோனி IMX616 சென்சார்) கேமரா ஒன்றும் 8 MP அல்ட்ரா-வைடு கேமரா ஒன்றும் முன்பக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரியல்மீ X3-யின் பின்பக்கம் மொத்தம் 4 கேமராக்கள். 64 MP (Samsung GW1) மெயின் கேமரா, 8 MP அல்ட்ரா-வைடு கேமரா, 2 MP மேக்ரோ கேமரா, 12 MP டெலிபோட்டோ கேமரா ஆகியவைதான் அவை. இதில் அந்த 12 MP டெலிபோட்டோ கேமராவுக்குப் பதிலாக ரியல்மீ X3 சூப்பர் ஜூம் மாடலில் 8 MP பெரிஸ்கோப் (Periscope) லென்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதைக்கொண்டு நல்ல வான்வெளி புகைப்படங்களை எடுக்கமுடியும்.

இரண்டு போன்களிலுமே 4,200 mAh திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை 30W Dart charging சார்ஜர் மூலம் வேகமாக சார்ஜ் செய்யமுடியும். இரண்டுமே குவால்கம் ஸ்னாப்டிராகன் 855+ ப்ராசஸர் மூலம் இயங்கும். UFS 3.0 ஸ்டோரேஜூம் உண்டு என்பதால் பர்பார்மென்ஸில் எந்த குறையும் இருக்காது என நம்பலாம். இரு போன்களுமே ஆண்ட்ராய்டு 10 மேல் கட்டமைக்கப்பட்ட ரியல்மீ UI-ல் இயங்கும்.

இந்தியாவில் ரியல் X3-யின் விலை 24,999 (6 GB + 128 GB வேரியன்ட்) ரூபாயில் தொடங்குகிறது. இதன் 8 GB+128 GB வேரியன்ட் 25,999 ரூபாய்க்குக் கிடைக்கும்.

ரியல்மீ X3 சூப்பர் ஜூம் மாடலின் விலையானது 8 GB+128 GB வேரியன்ட்டுக்கு 27,999 ரூபாயாகவும், 12 GB + 256 GB வேரியன்ட்டுக்கு 32,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களுமே இரண்டு நிறங்களில் (Arctic White & Glacier Blue) கிடைக்கும். இதற்கான முன்பதிவு இன்று இரவே தொடங்குகிறது. விற்பனை ஜூன் 30 முதல் தொடங்குகிறது.

Realme Buds Q | ரியல்மீ  பட்ஸ் Q
Realme Buds Q | ரியல்மீ பட்ஸ் Q
Realme

இத்துடன் ரியல்மீயின் பட்ஜெட் TWS இயர்போன்களான பட்ஸ் Q அறிமுகம் செய்யப்பட்டது. இது 1,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். இது கறுப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களில் வெளிவருகிறது. இதன் விற்பனை ஜூலை 1 தொடங்குகிறது.

அடுத்த கட்டுரைக்கு