Published:Updated:

மீண்டும் புதிய விலை! -விற்பனைக் களத்தில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

வெளியானதிலிருந்து பல முறை விலையேறி விட்டது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ். தற்போது அறிமுகமானபோது இருந்ததை விட 2000 ரூபாய் அதிகமாக உள்ளது இதன் விலை.

கொரோனாவினால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் தொடர்ந்து மொபைல் போன்களின் விற்பனை என்பது குறைந்த அளவிலேயே நடந்துகொண்டிருக்கிறது. தயாரிப்பதிலேயே பல சிக்கல்கள் இருப்பதால் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சிறப்பு ஃபிளாஷ் சேலில் குறைந்த அளவிலான போன்களையே விற்றுவருகின்றன. அப்படியான ஃபிளாஷ் சேலில் இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ். இந்த போனில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன?

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்!
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்!

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்பெக்ஸ்:

  • 6.67-இன்ச் full-HD+ (1,080x2,400 pixels) IPS டிஸ்ப்ளே

  • குவால்கம் ஸ்னாப்டிராகன் 720G ப்ராசஸர்

  • நான்கு கேமரா செட்-அப் (64 MP Main + 8 MP Ultra Wide + 5 MP Macro + 2 MP depth sensor)

  • 32 MP செல்ஃபி கேமரா

  • 5,020 mAh

  • 33 W ஃபாஸ்ட் சார்ஜிங்

  • ப்ளூடூத் 5.0 சப்போர்ட்

`இந்த விலையில் Type-C போர்ட்டா?' - விரைவில் வருகிறது ரெட்மி 8A!

விலை?

வெளியானதிலிருந்து பல முறை விலையேறிவிட்டது ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ். அறிமுகமானபோது இருந்ததை விட தற்போது 2,000 ரூபாய் அதிகமாக உள்ளது இதன் விலை. 6GB RAM + 64GB வேரியன்ட் 16,999 ரூபாயிலும் 6GB RAM + 128GB வேரியன்ட் 18,499 ரூபாயிலும் 8GB RAM + 128GB வேரியன்ட் 19,999 ரூபாயிலும் விற்பனைக்கு வருகிறது. இந்தச் சிறப்பு விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு Mi.com மற்றும் அமேசான் தளங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போன்கள் மூன்று நிறங்களில் கிடைக்கும் (Aurora Blue, Glacier White, and Interstellar Black)

அடுத்த கட்டுரைக்கு