Published:Updated:

`இதன் விலை ரூ.12 கோடி' - இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங்கின் `தி வால்'

சாம்சங்கின் 'தி வால்'
சாம்சங்கின் 'தி வால்'

இதற்கான முன்பதிவு நேற்றிலிருந்து (டிசம்பர் 5) தொடங்கியது.

கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி டெக் உலகில் ஒரு முக்கிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் 12 கோடி மதிப்பிலான தி வால் (The wall) எனப்படும் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை டிவி அப்படியே சுவரோடு சுவராகக் காட்சியளிக்கும். இது 146 இன்ச், 219 இன்ச், 292 இன்ச் ஆகிய அளவுகளில் கிடைக்கவுள்ளது. இது புதிய மைக்ரோ எல்இடி (MicroLED) வகையைச் சேர்ந்தது. எல்சிடி வகை தொலைக்காட்சியுடன் ஒப்பிடும்பொழுது Contrast ratio தொடங்கி Response Time வரை அனைத்து அளவீடுகளிலும் சிறந்து விளங்குகிறது மைக்ரோ எல்இடி.

சாம்சங் 'தி வால்'
சாம்சங் 'தி வால்'

அதுமட்டுமல்லாமல் இந்த வகையான டிவிகளில் 120 HZ Refreshing Rate பயன்படுத்தப்படுகிறது. அதாவது சாதாரண தொலைக்காட்சிகளில் ஒரு விநாடிக்கு 60 ஃப்ரேம்களை மட்டுமே ஒளிபரப்ப முடியும். ஆனால் இந்த வகையான தொலைக்காட்சிகளில் ஒரு விநாடிக்கு 120 ஃப்ரேம்களை ஒளிபரப்ப முடியும். மேலும், 200 நிட்ஸ் பிரைட்னெஸுடையது இது. நிட்ஸ் என்பது ஒளிர்வு தன்மையை (Luminance) அளவிடுவது. ஒரு சாதாரண திரையரங்கிலேயே 50 நிட்ஸ் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. இதனால் திரையரங்குகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த பிரகாசமாக ஒளிரக்கூடியது. 146 இன்ச் ஸ்கிரீன் 4k ரெசல்யூஷனிலும் மற்றும் 219 இன்ச் ஸ்கிரீன் 6k ரெசல்யூஷனிலும் மற்றும் 292 இன்ச் ஸ்கிரீன்ரீன் 8K ரெசல்யூஷனிலும் கிடைக்கும். இந்த வகை தொலைக்காட்சி 1,00,000 மணி நேரம் ஆயுள் கொண்டது.

உங்களுக்கான `பெஸ்ட் டிவி' எது?
#TvBuyingGuide

இந்த மாடல்களின் விலையை 3.5 கோடியிலிருந்து 12 கோடி ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் புனித் செதி,``இந்தியாவைப் பொறுத்தவரை 140 பில்லியனர்களும், 950 மல்டி- மில்லியனர்களும் உள்ளார்கள். எனவே இந்த வகை தொலைக்காட்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சிஇஎஸ் ( CES) நிகழ்வில் 146 இன்ச் மைக்ரோஎல்இடி (micro LED) தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 219 இன்ச், 291 இன்ச் தொலைக்காட்சிகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை வாங்க விரும்பினால் சாம்சங் தளத்தில் முன்பதிவு செய்யலாம். டெல்லியில் உள்ள சாம்சங் அலுவலகத்தில் நேரடியாக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு