பணியாட்கள் அதிக நேரம் வேலை செய்வதை தடுக்கும் விதமாக சாம்சங் நிறுவனம் மவுஸ் ஒன்றை தயாரித்துள்ளது. குறிப்பிட்ட பணி நேரம் முடிந்ததும் வேலை செய்வதை நிறுத்திக்கொள்ளும் வகையில் இந்த மவுஸ்ஸை தயாரித்துள்ளனர்.
தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பேலன்ஸ் மவுஸ் என்ற ஒன்றைத் தயாரித்துள்ளது. திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்வதை தவிர்க்கும் விதமாக இதனை உருவாகியுள்ளதால் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கிரியேட்டிவ் மவுஸ் அலுவலக நேரத்திற்கு மேல் வேலை செய்தால் நம்முடைய கை அசைவை வைத்து, அந்நேரத்தில் வேலை செய்யாமலும், பணியாளர்களின் கைகளுக்கு கிட்டாமலும் குறிப்பிட்ட இடத்தில் இருந்து நகர்ந்துக் கொண்டே இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.

மேலும், கார்ப்பரேட் வட்டாரங்களில் வேலைப் பளு என்பது விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்வதால் அவர்களின் உடல்நலம் மட்டுமின்றி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அலுவலகம் மட்டுமின்றி வீடுகளுக்கும் சென்று பணிபுரியும் சூழலும் ஏற்படுகிறது. இப்படி அதிக நேரம் வேலை செய்வதால் பலர் வேலையை ரிசைன் செய்தும் விடுகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாகத்தான் இந்த பேலன்ஸ் மவுஸ் தயாரிக்கப்படுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேலன்ஸ் மவுஸ் தொடர்பான வீடியோ ஒன்றையும் அந்நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.