Published:Updated:

டெக் தமிழா Shares

டெக் தமிழாவின் இந்த மாத ரெகமெண்டஷன்ஸ்!

பிரீமியம் ஸ்டோரி
MI Trimmer

Gadgets

MI Trimmer

மற்ற எந்தப் பொருளையும்விட ட்ரிம்மர்கள் பற்றித்தான் அதிக அதிருப்தி தெரிவித்திருப்பார்கள் ஆன்லைன் வாடிக்கையாளர்கள். பிலிப்ஸ் போன்ற வெகு சில பிராண்டுகளே இந்த ஏரியாவில் நற்பெயர் பெற்றிருக்கின்றன. இந்த லிஸ்டில் சேரும் முயற்சியில் ஷியோமியும் இந்த ட்ரிம்மருடன் களம்கண்டுள்ளது. பேட்டரிதான் இந்த ட்ரிம்மரின் ட்ரம்ப் கார்டு. 5 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும் 10 நிமிடம் வரை பயன்படுத்தலாம். முழு சார்ஜ் ஏறினால் 90 நிமிடங்கள் வரை இந்த ட்ரிம்மரைப் பயன்படுத்தலாம். இன்னொரு ஹைலைட் இந்த ட்ரிம்மரை பவர் பேங்க் மூலமாகவும் சார்ஜ் செய்துகொள்ளலாம். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேடுகள் கொண்ட இந்த ட்ரிம்மரை 40 விதமான நீளங்களில் ட்ரிம் செய்ய செட் செய்துகொள்ளலாம். கையிலிருந்து எளிதில் நழுவிடாத க்ரிப்பும் இதிலுண்டு. IPX7 வாட்டர்ப்ரூஃப் ரேட்டிங்கும் கொண்டுள்ளது இந்த ட்ரிம்மர்.

விலை: 1,199
UnApp

App

UnApp (Android)

என்றாவது உங்கள் மொபைலில் பல ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று நினைத்து பின்பு அவற்றை ஒவ்வொன்றாக செலக்ட் செய்து அன்இன்ஸ்டால் செய்து சோர்வடைந்திருக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்த ஆப். இதில் எந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்யவேண்டுமோ மொத்தமாக செலக்ட் செய்து அவற்றை எளிதாக நீக்கிவிடலாம். ரொம்ப சிம்பிள்!

Speedometer (Google Maps)

Feature

Speedometer (Google Maps)

கூகுள் மேப்ஸில் சென்றுகொண்டிருக்கும்போதே எந்த வேகத்தில் செல்கிறோம் என்பதை பார்க்க வேண்டுமா? இதற்காக `Speedometer' என்ற புதிய வசதி ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது கூகுள். இதற்கு Settings>Navigation Settings சென்று Speedometer என்ற பட்டனை ஆன் செய்தால் போதும் செல்லும் வேகத்தை மேப்ஸிலேயே பார்க்கமுடியும். சமீபத்திய வசதி என்பதால் இதைப் பெறக் கூகுள் மேப்ஸ் ஆப்பை அப்டேட் செய்வது அவசியம்.

Big Little Lies (HBO/Hotstar)

Streaming

Big Little Lies (HBO/Hotstar)

கேம் ஆப் த்ரோன்ஸ் முடிந்துவிட்டது. அதற்காக சப்ஸ்கிரைப் செய்துவைத்திருந்த ஹாட்ஸ்டாரில் என்ன பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கு விருந்தாக வந்திருக்கிறது பிக் லிட்டில் லைய்ஸ் சீசன் 2. நம்மூரில் த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா அனைவரும் சேர்ந்து ஒரு தொடரில் நடித்தால் எப்படி இருக்கும்? அது மாதிரியான தொடர்தான் இது. ரீஸ் விதர்ஸ்பூன், நிக்கோல் கிட்மேன், லாரா டெர்ன் என நடித்த நடிகைகள் அனைவருமே முக்கிய ஹாலிவுட் நடிகைகள். ஐந்து தாய்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கின்றனர். இந்த பெண்களின் வாழ்வில் அந்த ஆண்டு நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இதற்கு மேல் தெளிவாகக் கதையை விவரித்தால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் அத்துடன் விட்டுவிடலாம். முதல் சீசன் 16 எம்மி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு 8 விருதுகளை வென்றது. இதன் அடுத்த சீசன் இப்போது ஒரு ஒரு எபிசோடாக வெளியாகிவருகிறது. இந்த சீசனின் இன்னொரு சிறப்பு இந்த நட்சத்திர பட்டாளத்துடன் 40 ஆண்டுகளாக வெள்ளித்திரையை ஆண்டுவரும் ஆளுமையான மெரில் ஸ்ட்ரீப்பும் இணைத்துள்ளார் என்பதுதான். இதுவரை 21 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் மெரில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு